தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 27 december 2014

கிளிநொச்சி விவசாயிகளுக்கான கொடுப்பனவை தடுத்து நிறுத்திய டக்ளஸ் மற்றும் சந்திரகுமார்



மக்களுக்கான இயக்கமாகக் கூட்டுறவுத்துறை மாற்றம் பெறவேண்டும்: பொ.ஐங்கரநேசன்
[ சனிக்கிழமை, 27 டிசெம்பர் 2014, 11:56.36 AM GMT ]
ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் விதத்தில் கூட்டுறவுத்துறை விரைவில் மறுசீரமைக்கப்பட உள்ளது என்று வடக்கு மாகாண கூட்டுறவுத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அறிவித்துள்ளார்.
கூட்டுறவு அமைச்சுக்குரிய மாகாணக் குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியில் இருந்து கடற்றொழில் மற்றும் விவசாயம் தொடர்பான கூட்டுறவு அமைப்புகளுக்கு முறையே மீன்பிடி வலைகள், நீரிறைக்கும் இயந்திரங்கள் போன்றவற்றை வழங்கும் நிகழ்ச்சி இன்று அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்றது.
மாகாணக் கூட்டுறவு ஆணையாளர் வ.மதுமதியின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு அறிவித்துள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
கூட்டுறவுத்துறையின் பெருமகனார் வீரசிங்கத்தின் பெயரால் கம்பீரமாக ஒரு மண்டபத்தைக் கொண்ட வடக்கில் இன்று கூட்டுறவுத்துறை மிகவும் நலிவுற்ற ஒரு துறையாகப் பின்தங்கிவிட்டது.
1970களில் பண்டத்தரிப்பு கூட்டுறவு அமைப்பால் உருவாக்கப்பட்ட பன்ரெக்ஸ் என்னும் காற்சட்டைத் துணி மிகவும் பிரசித்தி பெற்றது.
புடவை உற்பத்தி, கால்நடை வளர்ப்பு என்று பல்வேறு துறைகளில் வளர்ச்சி கண்டு, ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கிக் கொண்டிருந்தது கூட்டுறவுத்துறை இன்று மற்றவர்களிடம் கடனும் நிவாரணமும் வேண்டி காத்துக் கிடக்கிறது.
கூட்டுறவின்மேல் நம்பிக்கையில்லாமல் அதிலிருந்து எமது சமூகமும் விலகிச் சென்று கொண்டிருக்கிறது.
கூட்டுறவுத்துறையின் இந்தச் சரிவுக்குப் போர் மட்டுமே காரணம் அல்ல. உலக மயமாக்கலோடு வேகமாக வளர்ந்து வரும் தனியார் முதலீட்டை எதிர் கொள்ளத்தக்கவாறு கூட்டுறவு இயக்கம் வலுப்பெறவில்லை.
பழைய சட்டங்களையும் யாப்பு விதிகளையும் கொண்டே கூட்டுறவு அமைப்புகள் இன்னமும் இயங்கிவருகின்றன. இவற்றில் உள்ள நெளிவுசுழிவுகள் நிர்வாகச் சீர்கேட்டுக்கும், ஊழலுக்கும், பொறுப்புக் கூறலின்மைக்கும் காரணமாக அமைந்து வருகின்றன.
கூட்டுறவுச் சங்கங்களைக் குத்தகைக்கு எடுத்தது போன்று ஒருவரே பல வருடங்களுக்கு பதவியில் நீடிக்கும் பரிதாபம் இந்தத் துறையில் மட்டும்தான் உள்ளது.
அரசியல் கட்சிகளும் தங்களுக்கான வாக்குகளின் கூடாரமாகக் கூட்டுறவையே பயன்படுத்த நினைக்கின்றன. இந்நிலை மாற்றப்பட்டு, மக்களுக்கான இயக்கமாகக் கூட்டுறவுத்துறை மாற்றம் பெறவேண்டும்.
இந்த நோக்கத்தில் எமது முதல்வர் கூட்டுறவுத்துறையை மேம்படுத்துவது தொடர்பான ஆய்வு ஒன்றைச் செய்வதற்கு ஏற்பாடு செய்திருந்தார்.
இதன் முடிவுகள் இப்போது எனக்குத் தரப்பட்டுள்ளன. இவற்றை அடிப்படையாகக் கொண்டும் கூட்டுறவுத்துறை வல்லுநர்களின் அபிப்பிராயங்களைக் கொண்டும் வடக்கின் கூட்டுறவுத்துறை மீண்டும் மிடுக்கோடு நிமிர விரைவில் ஆவன செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRbKagw5.html
இயற்கையின் பேரவலமும் மனிதாபிமான நெருக்கடியும்
[ சனிக்கிழமை, 27 டிசெம்பர் 2014, 12:18.22 PM GMT ]
நாடெங்கும் ஏற்பட்டிருக்கின்ற மழை, வெள்ளம், மண்சரிவு அனர்த்தங்களால் பத்து இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உயிர், உடமை, உறவுகள், சொந்தங்கள், சுகங்கள், பொருளாதாரம் என அனைத்தையும் இழந்திருக்கும் மக்களுக்கு எமது ஆழ்ந்த இரங்களையும், அன்பையும் வெளிப்படுத்துகின்றோம்.
பதுளை ரில்பொல மெதகமவில் 12 பேரும், கல்கந்த, ஹெககொட, கருணபுர, பஹலகம பகுதிகளில் உயிரிழந்த பத்துபேரினதும் குடும்பங்களுக்கு எமது அனுதாபங்கள் உரித்தாகட்டும்.
ஊவா மாகாணத்தில் கொஸ்லாந்த மீரியபெத்த அனர்த்தம் நேர்ந்து 56 நாட்கள் கடந்துள்ள நிலையில் அம்மக்களின் மீள்குடியேற்றம் பாதுகாப்பு ஜனநாயக, மனித உரிமைகள், உள நலன், அரசியல் சுதந்திரம் என்பன இன்றுவரை மீள உறுதி செய்யப்படவில்லை என்ற அவலம் நாட்டின் கதையாகின்றது.
இதன் எதிரலையாக காணி வீட்டு உரிமைக்கான அறைகூவலும், மக்கள் பேரணிகளும் எழுச்சி பெற்றுள்ளன.
அழுத்தங்களுக்குள்ளான நிலையில் மலையக தொழிற்சங்கங்களும் பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களும் ஏழு பேர்ச்காணி வீட்டுரிமைப் பற்றிய கனவில் மக்களை மூழ்கடித்துள்ளனர்.
தற்போதைய பேரனர்த்தமானது 1977 ஆம் ஆண்டு மட்டகளப்பு மாவட்டத்தை ஆட்கொண்ட இயற்கை பேரவலத்தையும் 2002 ஆம் ஆண்டு சப்பிரகமுவ மாகாணத்தை ஆட்கொண்ட இயற்கை பேரனத்தத்தையும் 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரனத்தத்தையும் ஒத்ததாகும்.
இந்த மானிட பேரவலங்களில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள தவறியதன் விளைவாகவே இத்தகைய உயிரிழப்புகளும், அவலங்களும் ஏற்பட்டு வருகின்றன.
அரசியல்வாதிகள், திட்டமிடலாளர்கள் புவியியல், வானியல் புலமையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகங்கள் என அனைவருமே தமது சமூக பொறுப்பை வெளிப்படுத்துகின்ற தன்மை எத்தகையது என்பதை இவ்வனர்த்தங்கள் அம்பலப்படுத்துகின்றன.
மீரியபெத்த பேரவலம் நடந்த போது ஒரு சக்தி வாய்ந்த இடர்முகாமைத்துவ கட்டமைப்பை ஏற்படுத்துவது தொடர்பிலும் வீட்டுக்கு வீடு, நிறுவனத்திற்கு நிறுவனம் பாதுகாப்பை உறுதி செய்யவும் அதற்கு உள்நாட்டு பன்னாட்டு நிபுணத்துவ உதவி பெறவும் நாம் வலியுறுத்தினோம். எனினும் நடந்தவை மீண்டும் மீண்டும் நடப்பது எவ்வாறு?
மலையக பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு அபிவிருத்தி திட்டங்களான அணைக்கட்டுக்கள், கற்பாறைகள் தகர்த்தப்படல், புதையல் வேட்டைகள், தோட்ட பிரதேசங்களில் இலட்சக்கணக்கான மரங்கள் கம்பனிகளினால் வெட்டியகற்றப்படல், ஈரவலய மலைக்காடுகளில் பெறுமதி வாய்ந்த மரங்கள், மூலிகை செடிகள் சூறையாடப்படல், வனங்களில் மலைமேடுகளில் ஆற்றுப் பள்ளத்ததாக்குகளில் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத இரத்தினக்கல் அகழ்வு,
மலைப்பாறைகள் குடையப்பட்டு நீண்ட சுரங்க வழிகள் ஏற்படுத்தப்படல், நீண்ட கால சூழலியல் தாக்க விளைவு மதிப்பீடு இன்றி திட்டங்கள் முன்னெடுக்கப்படல், வீதி கட்டமைப்புகளின் திட்டமிடலில் காணப்படும் பாரதூரமான குறைபாடுகள் என்பன காரணமாகவே இத்தகைய பேரவலங்களுக்கான நீண்ட கால மற்றும் உடனடி காரணங்களாகின்றன.
அனர்த்தங்களும் அவலங்களும் ஏற்படும் போது இத்தகைய காட்டுமிராண்டி தனமான திட்டமிடலின் பங்காளிகளாகவோ, பயணாளிகளாகவோ, இல்லாத பொதுமக்களே பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
அந்நிய முதலீட்டாளர்களை கவர்வதற்காகவும், அரசியல் உள்நோக்கங்களுக்காகவும் தேசிய இனங்களின் வாழ்வாதார பிராந்தியங்களில் ஆக்கிரமிப்பை மேற்கொள்வதற்காகவும் அவசர அவசரமாக முன்னெடுக்கப்பட்ட அபிவிருத் திட்டங்களின் தவிர்க்கவொண்ணாத விளைவாகவே இவ்வவலங்களை நாம் நோக்குகின்றோம்.
பேரவலங்களின் போதான மனிதாபிமான நெருக்கடிகளும் அந்நெருக்கடியின் போதான மக்களின் பரிதவிர்ப்பும் அதை உணர்திறனோடு கையாள முடியாத அரச இயந்திரமும், அதிகார வர்க்கமும் எவ்வாறு கையாளுகின்றது என்பதற்கான சான்றாக பொகவந்தலாவ லொயினோன் தோட்ட அனர்த்தத்தை கையாண்ட முறைக்கு எதிரான மக்கள் போராட்டமும் அதற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் பொலிஸ் நடவடிக்கைகள் துலாபாரமாக்குகின்றன.
இவ் ஒடுக்கு முறைகளுக்கு மலையகத்தின் பிரபல தொழிற்சங்கங்களும், அரசியல் கட்சிகளும்; ஆதரித்து வருகின்றமை அவர்களின் சுயரூபத்தை அம்பலப்படுத்துகின்றது.
வரலாற்று முக்கியத்துவமிக்க தேர்தல் ஒன்றை தேசம் எதிர் கொண்டுள்ள நிலையில் அது மாற்றம் நோக்கிய மக்கள் இயக்கமாக பரிணமிக்கும் நிலையில் ஏற்பட்டுள்ள பேரனத்தம் நாட்டின் சகல இன மக்களுக்கும் விடுக்கப்பட்டுள்ள இயற்கையின் அரைகூவலாக தெரிகின்றது.
நீண்ட நிலையான அனர்த்த முகாமைத்துவமும் உணர்திறன்வாய்ந்த மீள்குடியேற்றமும் மக்களின் இயல்பு வாழ்க்கையை துரிதமாக கட்டியெழுப்புதல் திட்டமிட்ட வகையான உதவிகளும் ஒத்துழைப்பும் அனைவரும் உடனடியாக ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ள வேண்டியதே அவசர, அவசிய தேவையாகும் என்பதை சுட்டிகாட்ட விரும்புகின்றோம்.
மலையக தேசிய பேரிடர் கண்காணிப்பு குழு
http://www.tamilwin.com/show-RUmszCRbKagw6.html
பதுளை மண்சரிவில் உயிரிழந்தவர்களை மீட்கக் கோரி ஆர்ப்பாட்டம்
[ சனிக்கிழமை, 27 டிசெம்பர் 2014, 12:20.45 PM GMT ]
பதுளை, ஹாலி-எல உடுவர பிரதேசத்தில் நேற்று ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி உயிரிழந்த இருவரை மீட்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு வலியுறுத்தி பிரதேசவாசிகள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
சுமார் 500ற்றும் அதிகமான மக்கள், புதுளை- கொழும்பு வீதியை மறித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆர்ப்பாட்டம் காரணமாக குறித்த பிரதேசத்தினூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
http://www.tamilwin.com/show-RUmszCRbKagw7.html
கிளிநொச்சி விவசாயிகளுக்கான கொடுப்பனவை தடுத்து நிறுத்திய டக்ளஸ் மற்றும் சந்திரகுமார்[ சனிக்கிழமை, 27 டிசெம்பர் 2014, 02:11.09 PM GMT ]
நாடுமுழுவதும் ஏற்பட்ட கடுமையான வறட்சி அதனைத் தொடர்ந்து, பாரிய வெள்ள அழிவுகள் காரணமாக வட கிழக்குப் பகுதிகளில் விவசாயிகள் கடுமையான அழிவுகளைச் சந்தித்தனர்.
இதற்கான நஸ்ட ஈடாக விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 2800 ரூபா வீதமும் 5 ஏக்கரும் அதற்கு மேற்பட்டவர்க்கும் மொத்தமாக 14,000 ரூபா வீதம் இன்றைய தினம் வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுக்கு குறிப்பாக பூநகரி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கும் இராமநாதபுரம், வட்டக்கட்சிப் பகுதி விவசாயிகளுக்கும் வழங்குவதற்கு 50 மில்லியன் ஒதுக்கப்பட்டு இன்றையதினம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
எனினும் பலரது துன்பங்களில் இன்பத்தை பெற நினைக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் தம்முடைய அரசியல் ஆதாயத்துக்காக விவசாயிகளுக்கு வழங்கப்பட இருந்த பணத்தை வழங்காமல் அவை தடுக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டிருக்கின்றது.
இத்தொகை விவசாயிகளுக்கு விதை நெல்லுக்காக வழங்கப்பட்ட பணம். ஏற்கனவே இப்பணம் அநுராதபுரம், பொலநறுவை, மன்னார் மாவட்டங்களில் வழங்கப்பட்டுள்ளது.
இப்பொழுது தேர்தல் காலமாக இருந்தும் கூட தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய அவர்களும் இந்நிதியை வழங்குவதற்கு ஒப்புதலளித்தார்.
இந்நிலையில் தொடர்ந்தும் விவசாயிகளின் வயிற்றிலடிக்கும் டக்ளஸ், சந்திரகுமார் ஆகியோர் இப்பணத்தினை சுருட்டி வைத்திருக்கிறார்கள்.
தொடர்ச்சியான வறட்சியால் கடந்த சிறுபோகத்தில் ஏராளமான ஏக்கர் பயிர்கள் எரிந்து நாசமாகின. அதில் பாரியளவில் நஸ்டமடைந்த விவசாயிகள் மீண்டெழுவதற்கு முன்னர் தற்போது பெய்து வரும் கடும்மழையால் ஏற்பட்ட வெள்ளத்தாலும் ஏராளமான பயிர்கள் மூழ்கி நாசமாகின.
இதற்கான நஸ்ட ஈட்டைக்கூட வழங்குவதற்கு தடை விதித்த இவர்களின் செயலால் விவசாயிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்து போயுள்ளதுடன் கொதித்து போயுள்ளார்கள்.
http://www.tamilwin.com/show-RUmszCRbKagx0.html

Geen opmerkingen:

Een reactie posten