[ செவ்வாய்க்கிழமை, 30 டிசெம்பர் 2014, 03:08.42 AM GMT ]
நேற்று நடைபெற்ற பத்திகையாளர் மாநாட்டில் பத்திகையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆலோசகருமான சிவசேனதுரை சந்திரகாந்தன் மேலுள்ளவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்தமுறை தமிழரசுக் கட்சி அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்பு மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்குமென்றால் அந்தச் செயலை தமிழர்களுக்கு அரசியல் ரீதியாகச் செய்கின்ற படுகொலையாகத்தான் அதைப் பார்க்கமுடியும்.
ஏனென்றால் எதிரணியுடைய தேர்தல் விஞ்ஞாபனத்திலே எந்தவிதமான மக்கள் நலன் சார்ந்த குறிப்பாக, சிறுபான்மை மக்களுக்கு ஒன்றுமே சொல்லப்படவில்லை.
எனக்குத் தெரிந்த வகையில் ஐயாயிரம் ஏக்கர் காணியாவது மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்தால் விடுவிப்போம் என்று சொல்கிற வசனத்தைக்கூட கூட்டமைப்பினரால் சேர்க்க முடியாமல் போயிருக்கிறது.
அதைச் சேர்க்கச் சொல்லி சந்திரிக்காவுடன் கேட்டபோது, சந்திரிக்கா அவர்கள் மைத்திரிபால சிறிசேன அவர்களைப் பார்த்ததாகவும் மைத்திரிபால சிறிசேன அவர்கள் சம்பிக்க ரணவக்கவைப் பார்க்க அவர் அதற்கு பதில் சொன்னதாக கடைசியான தகவல் இருக்கிறது. இது ஒரு ஒண்மைத் தகவலும்கூட.
இந்த அடிப்படையில் தமிழர்களுக்குத் தீர்வும் இல்லை. அதிகாரப் பகிர்வும் இல்லை. வடபகுதியையே மாத்திரம் அதாவது வடக்கு கிழக்கை எல்லாம் மறந்து வடபகுதி காணிப் பிரச்சினைக்கே முடிவுகொடுக்க முடியாத, அதை எழுத்திலே உறுதிப்படுத்த முடியாத ஒரு கூட்டத்திற்கே இவர்கள் வாக்களித்தால்,
நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிற கடந்தகால இலங்கை அரசியல் வரலாற்றில் ஒப்பிட்டுக் கொண்டிருக்கிறபோது யாழ் மேலாதிக்கவாதிகளுடைய வர்க்க அரசியலாகப் பார்க்க முடியும். இந்த நாட்டை ஒன்றிணைக்கின்ற அல்லது அவர்கள் எதிர்பார்த்திருக்கின்ற தீர்வுத் திட்டத்திற்கான ஒரு அரசியல் போக்காகப் பார்க்கமுடியாது.
ஆகையால் இந்த முறை தமிழ் தேசிய கூட்டமைப்பு விரும்பியோ, விரும்பாமலோ நீண்ட வரலாற்றிலே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோடு ஒரு இணக்கப்பாட்டு அரசியலுக்கு வந்தால் அதை வெளிப்படையாகப் பேசினால் பல நன்மைகள் மாற்றங்கள் தமிழர்களுக்கு நிகழ முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszCQUKaet5.html
கலைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்!
[ செவ்வாய்க்கிழமை, 30 டிசெம்பர் 2014, 03:58.14 AM GMT ]
குருணாகல் கும்புக்கெட்ட என்னும் இடத்தில் வைத்து நேற்று கலைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த இளம் கலைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
புதிய தலைமுறைக் கலைஞர்கள் என்ற அமைப்பின் கலைஞர்கள் தாக்கப்பட்டிருந்தனர். பிரபல இளம் நடிகை சமனலி பொன்சேகா, இந்திரசாபா மனுவீர,லக்ஸ்மன் செனவிரட்ன உள்ளிட்ட கலைஞர்கள் தாக்கப்பட்டிருந்தனர்.
தாக்குதலுடன் தொடர்புடைய நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்த சந்தேக நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என அவர் இன்று ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக கலைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாகவும் நாகரீகமான சமூகக் கட்டமைப்பு ஒன்றில் இவ்வாறு கலைஞர்கள் மீது மிலேச்சத்தனமான தாக்குதல்கள் நடத்தப்பட மாட்டாது எனவும் கலைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszCQUKaet6.html
திஸ்ஸ அத்தநாயக்கவிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளது
[ செவ்வாய்க்கிழமை, 30 டிசெம்பர் 2014, 05:11.13 AM GMT ]
இந்தக்குற்றச்சாட்டை திஸ்ஸ அத்தநாயக்க சுமத்தியிருந்தார்.
இந்தநிலையில் இன்று திஸ்ஸ அத்தநாயக்கவிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
திஸ்ஸ அத்தநாயக்கவின் குற்றச்சாட்டு பொய்யானது என்றும் எனவே அது தொடர்பில் விசாரணை நடத்தப்படவேண்டும் எனக்கோரி ரணில் விக்கிரமசிங்க காவல்துறை அதிபரிடம் முறைப்பாட்டை செய்திருந்தார்.
http://www.tamilwin.com/show-RUmszCQUKaeuz.html
அமைதியான தேர்தலுக்கான சட்டங்களைப் பின்பற்றவும்: கமலேஷ் சர்மா வேண்டுகோள்
[ செவ்வாய்க்கிழமை, 30 டிசெம்பர் 2014, 06:31.14 AM GMT ]
ஜனாதிபதித் தேர்தலின்போது பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை வழங்குவதுடன், அமைதியான தேர்தலுக்கான சட்டங்களை, விதிமுறைகளைப் பின்பற்றுமாறும் பொதுநலவாயத்தின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நேற்று அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேர்தல் ஆணையாளரின் அழைப்பின்பேரில் ஜனாதிபதித் தேர்தலைக் கண்காணிக்கவுள்ள பொதுநலவாய குழுவிற்கு கயானாவின் முன்னாள் ஜனாதிபதி கலாநிதி பரத் ஜக்டோ, தலைமை தாங்குவார்.
பொதுநலவாய அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகள், சர்வதேச தேர்தல் கண்காணிப்பின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றவேண்டும்.
அத்துடன், நாடொன்றின் மக்களுக்கு சொந்தமான இறைமையை வெளிப்படுத்துபவையே நேர்மையான தேர்தல் ஆகும்.
பொதுநலவாயத்தின் பழமையான ஜனநாயக பாரம்பரியத்தை கொண்ட நாடு இலங்கை, அந்த நாட்டின் மக்கள் தங்கள் வாக்குகளை, வெளிப்படைத்தன்மை, சமவாய்ப்புகள், சட்டம் மற்றும் விதிமுறைகள் பின்பற்றப்படும் சூழலில் செலுத்தவேண்டும்.
பொதுநலவாய தேர்தல் கண்காணிப்பு குழு தேர்தலுக்கு முந்தயை நிலைகளை கண்காணிக்கும், தேர்தல் வாக்களிப்பு தினமன்றும் அதன் பின்னரும் வாக்களிப்பு முறை, வாக்குகள் எண்ணப்படும் முறை மற்றும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் விதம் ஆகியவற்றையும் கண்காணிக்கும்.
குறிப்பிட்ட குழு பக்கச்சார்பற்ற விதத்தில் சதந்திரமாக மதிப்பீடுகளை மேற்கொள்ளும். குறிப்பிட்ட குழு தனது மதிப்பீடுகளை பொதுநலவாய செயலாளர் நாயகத்திடம் சமர்ப்பிக்கும்.
அவர்கள் அதனை இலங்கை அரசாங்கம், தேர்தல் ஆணையகம், அரசியல்கட்சிகளிடம் சமர்ப்பித்த பின்னர், பொதுநலவாய அரசாங்கங்களிடம் கையளிப்பார்கள்.
பின்னர் அது பகிரங்கப்படுத்தப்படும். பொதுநலவாய குழுவை சேர்ந்த ஒன்பது பேர் ஜனவரி 2ஆம் திகதியிலிருந்து இலங்கையில் பணியாற்றுவர் என அவர் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszCQUKaeu4.html
Geen opmerkingen:
Een reactie posten