[ சனிக்கிழமை, 27 டிசெம்பர் 2014, 09:57.28 AM GMT ]
இந்த தகவலை ஜனாதிபதி ஊடகபிரிவு தெரிவித்துள்ளது.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி ஆய்வு செய்துள்ளார்.
இதேவேளை பொலநறுவைக்கும் ஜனாதிபதி செல்லவுள்ளதாக ஜனாதிபதி பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRbKagwy.html
400 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு - 53 பேர் கைது
[ சனிக்கிழமை, 27 டிசெம்பர் 2014, 10:23.55 AM GMT ]
அரசாங்க அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல், அரசாங்க சொத்துக்களை தேர்தலுக்காக பயன்படுத்துதல் போன்ற முறைபாடுகள் கிடைத்துள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டி ஆராச்சி தெரிவித்தார்.
இதேவேளை தேர்தல் சட்டவிதிமுறைகளை மீறியமை தொடர்பில் 53 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தேர்தல்கள் செயலக அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுவரை ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 113 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.
இவற்றில் அதிகமாக கண்டி பொலிஸ் பிரிவில் 13 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பெப்ரல் அமைப்பின் அதிகாரி தெரிவித்தார்.
இரத்தினபுரி பொலிஸ் பிரிவில் 11 முறைப்பாடுகளும், கொழும்பு தெற்கு பிரிவில் 10 முறைப்பாடுகளும், அனுராதபுரத்தில் 9 முறைப்பாடுகளும், நுகேகொடையில் 8 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmszCRbKagwz.html
மலையகத்தில் பனி மூட்டம்: நீா்தேக்கத்தின் வான்கதவு திறப்பு
[ சனிக்கிழமை, 27 டிசெம்பர் 2014, 10:25.00 AM GMT ]
மலையகப்பகுதிகளில் அதிக பனிமூட்டம் காணப்படுவதன் காரணமாக வாகனங்களை செலுத்துவதற்கு மிகவும் சிரமமாக உள்ளதாக வாகன சாரதிகள் தெரிவிக்கின்றனர்.
இதனால் வாகன சாரதிகளை மிகுந்த அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மலையகத்தில் குறிப்பாக நுவரெலியா, ஹட்டன், கினிகத்தேன போன்ற பிரதேசங்களில் அதிக பனிமூட்டம் காணப்படுகின்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் மற்றும் அட்டன் நுவரெலியா வீதியில் அதிக பனிமூட்டம் காணப்படுகின்றமையால் குறித்த வீதியில் பயணம் செய்யும் வாகன சாரதிகளை மிகுந்த அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்திவுள்ளனர்.
அத்தோடு மேல்கொத்மலை நீர்தேக்கத்தின் வான்கதவு ஒன்றும் திறக்கப்பட்டுள்ளது. இதனால் இதனை அண்டிய பிரதேசத்தில் வாழும் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பீ.ஜீ.குமாரசிறி தெரிவிக்கின்றார்.
http://www.tamilwin.com/show-RUmszCRbKagw0.html
சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் யாழ்ப்பாணம் விஜயம்
[ சனிக்கிழமை, 27 டிசெம்பர் 2014, 10:46.20 AM GMT ]
நேபாளம் நாட்டினைச் சேர்ந்த கண்காணிப்பாளர் ஒருவரே நேற்று வருகைதந்து, தேர்தல் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளார் என்று யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
எதிர்வரும் மாதம் 8 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தற்போது தபால்மூல வாக்களிப்பு நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றது.
இதனை கண்காணிக்கும் வகையிலேயே சர்வதேச கண்காணிப்பாளர் ஒருவர் யாழ்.மாவட்டத்தில் வருகை தந்துள்ளார். குறித்த சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர் தபால் மூல வாக்களிப்பு நிலையங்களுக்கு நேரில் சென்று கண்காணிப்பு நடவடிக்கைகளை ஆராய்ந்துள்ளார்.
மேலும் வன்முறைகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட பகுதிகளையும் அவர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
அவரைத் தொடர்ந்து மேலும் சில சர்வதேச கண்காணிப்பாளர்கள் இன்னும் சில தினங்களில் யாழ்.மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளனர் என்றும் யாழ் மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழில் அமைதியான முறையில் நடைபெற்ற தாபல்மூல வாக்களிப்பு
யாழில் நேற்று நடைபெற்ற தபால் மூல வாக்களிப்பும் எந்தவிதமான வன்முறைகள், முறைகேடுகள் இல்லாமல் அமைதியான முறையில் நடைபெற்றுள்ளது என்று யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரும், தெரிவத்தாட்சியாளருமாக சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.
தேல்தல் முறைகேடுகள் தொடர்பில் தகவல் தந்தால் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் அவர் மேலும் உறுதியளித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்.மாவட்டத்தில் நடைபெறும் தேர்தல் வன்முறைகள் தொடர்பான முறைப்பாடுகளை பதிவு செய்து கொள்வதற்காக விசேடமாக 5 பொலிஸ் முறைப்பாட்டு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இதுதவிர 300 கண்காணிப்பாளர்கள் எந்த நேரமும் பணியில் அமர்தப்பட்டுள்ளனர். இவர்கள் தமது பணிகளை விரைந்து செய்வதற்காக 100 வாகனங்களும் கையளிக்கப்பட்டுள்ளது. மேலும் கண்காணிப்பாளர்களை அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று எதிர்வரும் மாதம் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தல் வாக்களிப்பிற்கான அனைத்து வேலைகளும் பூர்த்தி செய்யப்பட்டு விட்டது. எல்லா தேர்தல்களைப் போன்று இம்முறையும் வாக்குகள் எண்ணும் பணிகள் யாழ்.மத்திய கல்லூரியில் நடைபெறவுள்ளது.
இதுதவிர தீவகப் பகுதிகளில் தேர்தல் விதிமுறைகளை மீறி ஒட்டப்பட்ட பிரச்சார துண்டுப்பிரசுரங்கள், பதாகைகள் அகற்றப்பட்டுள்ளது. குறிப்பாக வேலனை பிரதேச செயலகத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த தேர்தல் விளப்பரப் பதாகை உடனடியாகவே அங்கிருந்து அகற்றப்பட்டது.
மேலும் சட்டத்திற்கு புறம்பான வகையில் அமைக்கப்பட்டிருந்த தேர்தல் முகவர் நிலையங்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்பணிகளுக்கு பொலிஸார் முழுமையான ஒத்துழைப்பினை வழங்கி வருகின்றனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRbKagw1.html
Geen opmerkingen:
Een reactie posten