தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 30 december 2014

புலிகளுடன் முன்னர் தொடர்பில் இருந்த எமில்காந்தன் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் !

புலிகளுடன் முன்னர் தொடர்பில் இருந்த எமில்காந்தன் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் !

[ Dec 30, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 14170 ]
தமிழீழ விடுதலைப் புலிகளின் முகவர் என அடையாளப்படுத்தப்படும் எமில் காந்தனுக்கும், மஹிந்த ராஜபக்ஸவிற்கும் இடையிலான தொடர்புகள் குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். 8ம் திகதிக்கு பின்னரே இந்த விசாரணை ஆரம்பமாகும் என்று கூறப்படுகிறது. ஒருவேளை மகிந்தர் தோல்வியடைந்தால், என்ன செய்வது எவ்வாறு சட்ட நடவடிக்கை எடுத்து அவரை சிறை வைப்பது என்று எதிர்கட்சிகள் தற்போது ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது.
2005ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக மஹிந்த ராஜபக்ஸ, எமில்காந்தனுடன் இணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்திக் கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஸவின் வெற்றிக்காக எமில் காந்தனுக்கு 700 மில்லியன் ரூபா வழங்கப்பட்டதாகவும், இது தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் தற்போதைய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸவால் மேற்கொண்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணப் பணமே இவ்வாறு வழங்கப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதனுக்கு(கே.பி) எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
http://www.athirvu.com/newsdetail/1751.html

வெள்ளம் குறையாவிடின் தேர்தலை பிற்போடுவேன் - மஹிந்த அறிவித்துள்ளார் !

[ Dec 30, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 7545 ]
சீரற்ற காலநிலையால் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தை அடுத்து தற்போது பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதை காரணமாக வைத்து தேர்தலை பிற்போடுவதா இல்லையா என்பது குறித்து எதிர்வரும் 3ம் அல்லது 4ம் திகதி அறிவிக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, 28ம் திகதி தன்னை சந்திக்க வந்த அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் தெரிவித்தார்.
இவ்வாறான அனர்த்த நிலைமையின் போது தேர்தல் பிற்போட தனக்கு யாப்பு ரீதியிலும் தேர்தல் சட்டத்திலும் அதிகாரம் இருப்பதாகவும் ஆனால் தேர்தலை பிற்போடுமாறு எந்தவொரு உறுப்பினரும் இதுவரை தன்னிடம் வாய்மூலமோ எழுத்து மூலமோ கோரிக்கை விடுக்கவில்லை எனவும் தேர்தல்கள் ஆணையாளர் குப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் 8ம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் 4ம் திகதி உறுதியான முடிவு அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையாளர் தனது ஆவணத்தில் தெரிவித்துள்ளார்.
http://www.athirvu.com/newsdetail/1752.html

Geen opmerkingen:

Een reactie posten