தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 26 december 2014

நீதிமன்றம் பிடியாணை உத்தரவு! பகிரங்கமாக சிங்கப்பூர் சென்ற பிரதி அமைச்சர்!

கர்தினாலின் ஆதரவு மஹிந்தவுக்கா? மருமகளின் ராஜதந்திர பதவிக்கான நன்றிக் கடனா?
[ வெள்ளிக்கிழமை, 26 டிசெம்பர் 2014, 02:22.21 AM GMT ]
கொழும்பின் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவை வெளியிடலாம் என்று இணையத்தளம் ஒன்று சந்தேகம் வெளியிட்டுள்ளது.
கர்தினாலின் மருமகள் ஒருவர், பாரிஸில் உள்ள இலங்கை தூதரகத்தில் இரண்டாம்நிலை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளமையை கொண்டே இந்த எதிர்வு கூறப்பட்டுள்ளது.
கர்தினாலின் மருமகளான ருவணி குரே, வெளிநாட்டு சேவையில் எவ்வித பரீட்சைகளுக்கும் தோற்றாத நிலையில் பாரிஸ் தூதரத்தில் இரண்டாம் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே ருவணி குரே, மணிலாவில் உள்ள இலங்கை தூதரகத்தில் பணியாற்றினார்.
இதன்பின்னர் பாப்பரசர் பிரான்ஸிஸ் இலங்கைக்கு வருவதற்கான ஒழுங்குகளை செய்த நிலையில் ருவணிக்கு பாரிஸில் உயர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
பாப்பரசரின் இலங்கை விஜயமானது, கிறிஸ்தவர்கள் மீது இனவாதிகளின் தாககுதல்களால் அரசாங்கம் இழந்துள்ள கிறிஸ்தவ மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்கான உத்தி என்று கருதப்படுகிறது.
இதனை கருத்திற் கொண்டே சாதாரணமாக தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்டு இரண்டு மாதக்காலப் பகுதிக்குள் நாடு ஒன்றுக்கு பாப்பரசர் விஜயம் செய்வதில்லை என்ற நிலைப்பாட்டையும் புறந்தள்ளி, அவரை இலங்கைக்கு வரவழைக்கும் உறுதிமொழியை கர்தினால், பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயவுக்கு வழங்கினார் என்று கொழும்பு இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszCRaKahw7.html
எதிர்க்கட்சியில் இணைந்து கொண்ட முன்னாள் பிரதி அமைச்சரை கைது செய்ய உத்தரவு
[ வெள்ளிக்கிழமை, 26 டிசெம்பர் 2014, 03:34.38 AM GMT ]
எதிர்க்கட்சியில் இணைந்து கொண்ட முன்னாள் பௌத்த சாசன பிரதி அமைச்சர் எம்.கே.டி.எஸ். குணவர்தனவை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஹொமரன்கடவல பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவரைத் தாக்கியதாக குணவர்தன மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதி அமைச்சரை கைது செய்து எதிர்வரும் 31ம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு பதில் நீதவான் திருச்செந்தில்நாதன் உத்தரவிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர் சந்துன் ஹேமந்த என்பவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலில் காயமடைந்ததாகத் தெரிவித்து சந்துன் ஹேமத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் இரண்டு தரப்பினரும் முறைப்பாடுகளை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszCRaKahx0.html
நீதிமன்றம் பிடியாணை உத்தரவு! பகிரங்கமாக சிங்கப்பூர் சென்ற பிரதி அமைச்சர்
[ வெள்ளிக்கிழமை, 26 டிசெம்பர் 2014, 03:36.13 AM GMT ]
நீதிமன்றத்தினால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதியமைச்சர் ஒருவர் இன்று நாட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளதாக அறிவித்துள்ளார்.
பிரதியமைச்சர் நிஷாந்த முதுஹெட்டிகமவே இவ்வாறு நாட்டைவிட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று காலை தான் நாட்டிலிருந்து செல்வதாக ஊடகங்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசேட அறிவித்தலொன்றை விடுத்து விட்டே அவர் சென்றுள்ளதாக சிங்கள ஊடகங்கள் பல தெரிவித்துள்ளன.
பொலிஸ் பொறுப்பிலிருந்த இவரது ஆதரவாளர்கள் மூவரை பலாத்காரமாக விடுவித்துச் சென்றமை குறித்து இவருக்கு எதிராக நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பிரதியமைச்சர் பகிரங்கமாக சிங்கப்பூருக்கு சென்றார்!
காலி பத்தேகம நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பிரதியமைச்சர் நிசாந்த முத்துஹெட்டிகம இன்று அதிகாலை பகிரங்கமாக சிங்கப்பூருக்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாகவே பாதுகாப்பு அதிகாரிகள் அனைவருக்கும் தெரிந்தநிலையில் சிங்கப்பூருக்கு சென்றுள்ளார்.
எனினும் நீதிமன்றத்தின் பிடியாணை உத்தரவின் அடிப்படையில் அவரை கைதுசெய்ய அதிகாரிகள் முயற்சிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தாம் மீண்டும் இலங்கைக்கு திரும்பி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடவுள்ளதாகவும் முத்துஹெட்டிகம ஊடகம் ஒன்றுக்கு விமான நிலையத்தில் இருந்து குறிப்பிட்டுள்ளார்.
காலியில் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் மேடை உடைப்பு சம்பந்தமாக கைதுசெய்யப்பட்ட இருவரை பொலிஸ் நிலையத்தில் இருந்து பலாத்காரமாக நீதிமன்றத்துக்கு அழைத்துச்சென்றமை தொடர்பிலேயே அவர் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அவர் வெளிநாடு சென்றமையானது இலங்கையின் பொலிஸ் மற்றும் நீதித்துறை அரசாங்கத்தின் ஆணை அடிப்படையிலேயே இயங்குவதை எடுததுக்காட்டுகிறது.
http://www.tamilwin.com/show-RUmszCRaKahx1.html

Geen opmerkingen:

Een reactie posten