[ ஞாயிற்றுக்கிழமை, 28 டிசெம்பர் 2014, 02:05.21 AM GMT ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நேற்று ஜனாதிபதி மாளிகையில் இருந்த போது முற்பகல் 9.35 அளவில் மலிக் சமரவிக்கிரம, தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுள்ளார்.
இதன்போது ஆளும் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க எவ்வாறு தம்பக்கம் கொண்டு வந்தார் என்ற தகவலை சமரவிக்கிரம, ஜனாதிபதிக்கு விளக்கியுள்ளார்.
இதேவேளை பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா அரசாங்கத்தில் இருந்து கட்சிமாறினாலும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவரை ஏற்றுக்கொள்ளமாட்டார் என்று சமரவிக்கிரம குறிப்பிட்டுள்ளார்.
குறித்த தொலைபேசி உரையாடலின்போது ஆளும் கட்சியில் இருந்து எதிர்க்கட்சிக்கு கொண்டு வரப்படவுள்ளவர்களின் பெயர்பட்டியலையும் சமரவிக்கிரம ஜனாதிபதியிடம் வெளியிட்டார்.
வர்த்தகரான மலிக் சமரவிக்கிரம, ஏற்கனவே பெருந்தொகை பணத்தை சம்பாதிக்கக்கூடிய அரசாங்கத்தின் கொழும்பு- கண்டி அதிவேக பாதை நிர்மாணிப்பணிகளை முன்னெடுக்கும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தார் என்று சிங்கள நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszCRcKafo5.html
அவர் ஒரு 'முனாபிக்' அஸ்வர் ஒரு அப்பாவி: மாத்தளையில் மஹிந்த தெரிவிப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 28 டிசெம்பர் 2014, 03:10.07 AM GMT ]
மாத்தளையில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டமொன்றில் கலந்து கொண்டுரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.
சகலதையும் அனுபவித்து விட்டு ஒரே நாளில் கட்சி மாறிச் செல்ல இவர்களுக்கு எப்படித்தான் மனம் வருகிறதோ தெரியவில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இவர் போன்றவர்களால் அவரது சமூகத்திற்கே இழுக்கு ஏற்படுகிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். எமக்கு உறுதுணையாக இருந்த அஸ்வர் அவர்களது பாராளுமன்ற ஆசனத்தை நயவஞ்சகமாக அபகரித்தது மட்டுமல்லாது அதற்கு வியாக்கியானம் வேறு கூறித்திரிகிறார்கள். இவர்களை “முனாபிக்” என்று அழைப்பதில் தவறில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszCRcKafp2.html
ஜனாதிபதி தேர்தலை ஒத்தி வைப்பது குறித்து கவனம்?
[ ஞாயிற்றுக்கிழமை, 28 டிசெம்பர் 2014, 04:46.25 AM GMT ]
நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக ஜனாதிபதி தேர்தலை ஒத்தி வைக்குமாறு பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தரப்பில், தேர்தல் ஆணையாளரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேனவின் சட்டத்தரணிகள், தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளின் மாவட்டச் செயலாளர்களை தேர்தல் ஆணையாளர் சந்திக்க உள்ளார்.
எனினும், தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதனை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு விரும்பவில்லை.
பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்தவா்களுக்கு வாக்குச் சீட்டுக்களை வழங்குவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தேர்தல் ஒத்தி வைப்பது தொடர்பில் இதுவரையில் எவ்வித உறுதியான தீர்மானமும் எடுக்கப்படவில்லை.
http://www.tamilwin.com/show-RUmszCRcKafp5.html
Geen opmerkingen:
Een reactie posten