தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 31 december 2014

சிறீதரன் எம்.பி மற்றும் ஐங்கரநேசனுக்கு எதிராக யாழில் சுவரொட்டிகள்!

மைத்திரிபால அரசாங்கத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர்: சந்திரிக்கா பண்டாரநாயக்க
[ புதன்கிழமை, 31 டிசெம்பர் 2014, 10:52.46 AM GMT ]
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்தில் முதன் முதலாக குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.
ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவர்.
குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை விதிக்கும் நடவடிக்கைகளில் நான் நேரடியாக தலையீடு செய்வேன்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் குடும்பத்தார் அரச நிதியை தேவையானவாறு பயன்படுத்த அனுமதிக்க முடியாது. அவ்வாறு நிதியை பயன்படுத்த அனுமதித்த நிதி அமைச்சின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தரவிற்கு முதலில் தண்டனை விதிக்கப்படும்.
ஜயசுந்தரவின் நடவடிக்கைகளினால் கோடிக்கணக்கான ரூபா பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனால் பொதுமக்களின் பயணம் விரயமாக்கப்பட்டுள்ளதாகவும் சந்திரிக்கா தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCQVKbns5.html
தற்கொலை செய்ய ஆற்றில் குதித்த பெண்ணை காப்பாற்றிய சுற்றுலாப் பயணிகள்
[ புதன்கிழமை, 31 டிசெம்பர் 2014, 11:01.00 AM GMT ]
மாத்தறை– மஹாநாம பாலத்தில் இருந்து நில்வலா கங்கையில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த பெண்ணொருவரை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் காப்பாற்றியுள்ளனர்.
கங்ககையில் படகு ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் பெண் தற்கொலை செய்யும் நோக்கில் கங்கையில் குதிப்பதை பார்த்துள்ளனர்.
இதனையடுத்து அவர்கள் அந்த பெண்ணை காப்பாற்றியுள்ளனர். 31வயதான பெண்ணொருவரே இவ்வாறு இன்று மதியம் தற்கொலை செய்ய முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக கடற்படையினருக்கு அறிவுறுத்தல் வழங்கிய யோஷித்த!
[ புதன்கிழமை, 31 டிசெம்பர் 2014, 11:23.55 AM GMT ]
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது கடற்படையினர் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது குறித்து யோஷித்த ராஜபக்ஷ அறிவுரை வழங்கியுள்ளார்.
இதுதொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று கடற்படைத் தளபதியின் தலைமையகத்தில் கொழும்பில் நடைபெற்றுள்ளது. இதில் கடற்படைத் தளபதி தலைமையில் முக்கிய உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.
இங்கு கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதியின் இரண்டாம் புதல்வரான யோஷித்த ராஜபக்ஷ, ஜனாதிபதியின் வெற்றிக்கு கடற்படையின் முக்கிய பங்களிப்பு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
தற்போதைய கடற்படைத்தளபதி ஜயந்த பெரேரா, ஜனாதிபதியின் தயவில் குறித்த பதவியைப் பெற்றுக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக ராஜபக்ஷவினருக்காக அவர் எந்த வகையான உதவியையும் செய்யத் தயாராக இருப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.
கடற்படைத் தளபதியின் அனுசரணை காரணமாகவே லெப்டினன்ட் போன்ற உயர் பதவியில் இருந்து கொண்டு, யோஷித்த ராஜபக்ஷ கடற்படை பணிக்குச் செல்லாமல் அலரி மாளிகையில் இருந்து கொண்டு ரகர் விளையாடிக் கொண்டிருக்க முடிகின்றது என்பது பகிரங்க ரகசியமாகும்.
http://www.tamilwin.com/show-RUmszCQVKbns7.html
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச சபை உறுப்பினர்கள் நால்வர் மகிந்தவுக்கு ஆதரவு
[ புதன்கிழமை, 31 டிசெம்பர் 2014, 11:28.17 AM GMT ]
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளிப் பிரதேச சபை தலைவர், உபதலைவர் மற்றும் உறுப்பினர்கள் இருவருமாக நால்வரும் ஜனாதிபதp மஹிந்த ராஜபக்‌ஷவின் பக்கம் தாவியுள்ளனர்.
ஆனந்த சங்கரியின் தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களே இவ்வாறு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் டொமினிக் அன்ரன், உப தவிசாளர் ரிஷிதாசன், உறுப்பினர்களான பேரின்பகரன், சிவராஜா ஆகிய நால்வருமே இவ்வாறு ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszCQVKbnty.html
புதிய அரசில் பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்: மைத்திரிபால சிறிசேன
[ புதன்கிழமை, 31 டிசெம்பர் 2014, 11:36.53 AM GMT ]
பெண்களின் கௌரவமான உரிமைகளை பாதுகாப்பது தொடர்பான பொறுப்பை புதிய அரசாங்கம் ஏற்கும் என பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
விஹார மகாதேவி அரங்கில் இன்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் சட்டத்தின் சுதந்திரத்தை இல்லாமல் செய்துள்ளது. பெண்களின் கௌரவம், உரிமைகளை பாதுகாக்கும் பாறுப்பை அரசாங்கம் ஏற்கவேண்டும்.
ஜனவரி 8 ஆம் திகதிக்கு பின்னர் ஆட்சியமைக்கும் ஐக்கிய முன்னணி அரசாங்கத்தில் பெண்களின் கௌரவம், உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த சட்டங்கள் செயற்படுத்தப்பட்டு சட்டத்தின் சுதந்திரம் உறுதிப்படுத்தப்படும்.
நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வல்லுறவுச் சம்பங்கள் அதிகரித்துள்ளன. இப்படியான குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு அரசாங்கத்தின் பாதுகாப்பும் கிடைக்கின்றது.
பெண்களின் உரிமைகள் சம்பந்தமான ஐக்கிய நாடுகள் இணக்கப்பாடுகளின்படி அரசியல் அமைப்பில் அதனை உள்ளடக்குவது அவசியம்.
உயர்நீதிமன்றத்தின் பிரதம நீதியரசராக ஷிராணி பண்டாரநாயக்க நியமிக்கப்பட்டார். இலங்கையின் பெண்ணொருவர் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டது அதுவே முதல் முறை.
அலரி மாளிகையில் இருந்து கொண்டு வழக்குகளின் தீர்ப்பை மாற்ற முடியாது போனதால், பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி அவருக்கு அவமரியாதை ஏற்படுத்தப்பட்டது. இது நாட்டில் உள்ள சகல தாய்மாருக்கும் செய்த அவமரியாதை எனவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCQVKbnt0.html
சிறீதரன் எம்.பி மற்றும் ஐங்கரநேசனுக்கு எதிராக யாழில் சுவரொட்டிகள்
[ புதன்கிழமை, 31 டிசெம்பர் 2014, 11:43.35 AM GMT ]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் மற்றும் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஜங்கரநேசன் ஆகியோருக்கு எதிராக யாழ்ப்பாணத்தில்  இன்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
வடமராட்சி பிரதேசத்தில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
அச்சுவரொட்டியில் "இரணைமடுவின் மேலதிக நீரை யாழ்ப்பாண மக்களுக்கு தரமாட்டோம் கடலில் விடுவோம்" எனக்குறிப்பிட்டு, இருவரது படங்களும் இணைக்கப்பட்டுள்ளது.
சுவரொட்டியின் கீழ் யாழ்.மக்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszCQVKbnt2.html

Geen opmerkingen:

Een reactie posten