இந்தோனேசியாவில் இருந்து 155 பயணிகளுடன் சிங்கப்பூர் சென்ற விமானம் ஒன்று நடுவானில் மாயமானதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. ஏர் ஏசியாவிற்குச் சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று இந்தோனேசியாவில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றது.
155 பயணிகளுடன் சென்ற இந்த விமானம் இன்று காலை 8.30 மணி அளவில் சிங்கப்பூர் சென்றடைந்திருக்க வேண்டும்.
ஆனால், வழக்கமான பாதையிலிருந்து விமானம் விலகிச் சென்றுள்ளதாகவும், அதன் தகவல் தொடர்பு காலை 6.30 மணி முதல் துண்டிக்கப் பட்டுள்ளதாகவும் இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாயமான விமானத்தை அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஏற்கனவே இந்தாண்டு மார்ச் மாதம் 239 பயணிகளுடன் மாயமான மலேசிய விமானத்திற்கு என்ன நடந்தது என்ற குழப்பம் நீடித்து வருகிறது.
இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு விமானம் மாயமாகியுள்ளது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாயமான விமானத்திற்கு என்ன ஆனது, அதில் பயணம் செய்தவர்களின் கதி என்ன என்று அந்த விமானத்தில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
இதற்கிடையே, தொடர்ந்து சிங்கப்பூர் விமான நிலைய இணையதளத்தில் மாயமான விமானம் தாமதம் என அறிவிக்கப் பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ஜாவா கடலில் ஏர்ஏசியா விமான பாகம்?
ஹாங்காங் : மாயமான ஏர்ஏசியா விமானம் பெலிங்டங் தீவு அருகே ஜாவா கடற்பகுதியில் விழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
http://www.jvpnews.com/srilanka/91962.html
Geen opmerkingen:
Een reactie posten