தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 29 december 2014

இணையத்தளத்தில் தனது வீடியோவை பார்க்குமாறு முப்படையினருக்கு உத்தரவிட்ட கோத்தபாய

மைத்திரியின் மஹியங்கனை தேர்தல் பிரச்சார காரியாலயம் மீது தாக்குதல்!
[ திங்கட்கிழமை, 29 டிசெம்பர் 2014, 11:08.09 AM GMT ]
மஹியங்கனை நிதங்கல - சோரபொவில் உள்ள பொது வேட்பாளர் மைத்திரபால சிறிசேனவின் தேர்தல் பிரசார காரியாலயத்தின் மீது நேற்று இரவு தாக்குதல் நடததப்பட்டுள்ளது.
குறித்த தாக்கதலினால் 3 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் மேலதிக சிகிச்சைக்காக மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
மூவரில் ஓருவர் அவசரசிகிச்சை பிரவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmszCRdKaeq1.html
யாழ்ப்பாணத்தில் கடவுள் சிலைகளில் சத்தியம் வாங்கும் டக்ளஸ் குழுவினர்
[ திங்கட்கிழமை, 29 டிசெம்பர் 2014, 11:19.27 AM GMT ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு யாழ்ப்பாண மக்களிடம் கடவுள் சிலைகளின் மீது சத்தியம் வாங்கும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றது.
இதற்காக சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களை சேர்ந்தவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு நிதியுதவியாக ரூ.2500 வீதம் வழங்கப்படுகின்றது.
பின்னர் தங்கள் வாக்குகளை ஜனாதிபதி மஹிந்தவுக்கே வாக்களிப்பதாக அவர்கள் கடவுள் சிலைகளின்மீது சத்தியம் செய்யுமாறு கோரப்படுகின்றார்கள்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி. யினரே மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் யாழ்ப்பாணத்தில் கல்வி அறிவு கொண்ட தமிழ் சமூகம் இவர்களின் ஏமாற்று வேலையில் சிக்காது என்றே சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmszCRdKaeq2.html
தலதா மாளிகையின் தியவதன நிலமேயாக யோஷித்த ராஜபக்ச
[ திங்கட்கிழமை, 29 டிசெம்பர் 2014, 11:27.15 AM GMT ]
ஸ்ரீ தலதா மாளிகையின் தற்போதைய தியவதன நிலமே நிலங்க தேலபண்டாரவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனுராதபுரம் மாவட்டத்தின் அமைப்பாளராக நியமிக்க ராஜபக்சவினர் தயாராகி வருகின்றனர்.
தேலபண்டாரவை கட்சியின் அமைப்பாளராக நியமித்து விட்டு தலதா மாளிகையின் தியவதன நிலமேயாக ஜனாதிபதியின் புதல்வர் யோஷித்த ராஜபக்சவை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான அடிப்படை பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் தேலபண்டார தற்பொழுது அனுராதபுரத்தில் அரசியல் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளார்.
தனது அரசியல் ஸ்திரத்தன்மைக்கு தேவையான பின்னணியை உருவாக்கும் நோக்கில் விகாரைகளுக்கு பொருட்கள் உள்ளிட்டவற்றை விநியோகித்து வருகிறார்.
தலதா மாளிகையின் தியவடன நிலமேயாக தெரிவு செய்யப்படுபவர் மேல்நாட்டு சிங்கள பௌத்த மரபை சார்ந்தவராக இருக்க வேண்டும்.
யோஷித்த ராஜபக்ச, மேல் நாட்டு சிங்கள பௌத்தரான லொஹான் ரத்வத்தவின் மகளை திருமணம் செய்ய உள்ளார்.
எவ்வாறாயினும் குறித்த தியவதன நிலமே பதவிக்கு தெரிவு செய்யப்படுவதற்காக கண்டி பிரதேச செயலாளர்கள் மற்றும் அங்குள்ள ஆலயங்களின் பஸ்நாயக்க நிலமேமார் வாக்களிக்க வேண்டும்.
தேர்தலில் போட்டியிடும் நபர் அதற்கான தகுதிகளை கொண்டிருந்தாலும் வாக்களிப்பவர்களின் பெரும்பான்மையான வாக்குகளை பெற வேண்டும்.
ராஜபக்சவினர் கீழ் நாட்டு சிங்கள பௌத்த பரம்பரையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszCRdKaeq3.html


அம்பாறையில் எரிவாயு சிலிண்டர் ஏற்றிச்சென்ற லொறி தலைகீழாக கவிழ்ந்தது!
[ திங்கட்கிழமை, 29 டிசெம்பர் 2014, 11:28.01 AM GMT ]
அம்பாறைக்கு எரிவாயு கொள்கலன்களை ஏற்றிக் கொண்டு சென்ற லொறியொன்று தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
அம்பாறை மற்றும் மட்டக்களப்பு எல்லை அருகே இன்று அதிகாலை இந்த விபத்து நடைபெற்றுள்ளது.
கடும் மழை காரணமாக வீதியில் இருந்து விலகி, வழுக்கி லொறி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
எனினும் லொறியில் ஏற்றப்பட்டிருந்த எரிவாயு கொள்கலன்கள் மற்றும் சாரதிக்கு எதுவித பாதிப்பும் இல்லை என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.
விபத்தின் காரணமாக லொறி கடுமையாக சேதமுற்ற நிலையில் மீட்புப் பணியில் பொலிசாரும், தீயணைப்புப் படையினரும் ஈடுபட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszCRdKaeq4.html
இணையத்தளத்தில் தனது வீடியோவை பார்க்குமாறு முப்படையினருக்கு உத்தரவிட்ட கோத்தபாய
[ திங்கட்கிழமை, 29 டிசெம்பர் 2014, 11:32.13 AM GMT ]
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கடந்த 27 ஆம் திகதி சிங்கள தொலைக்காட்சி ஒன்றின் அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியதை இணையத்தளம் ஊடாக பார்வையிடுமாறு முப்படையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதனடிப்படையில், முப்படையினர் அதனை பார்ப்பதை ஊக்குவிப்பதற்காக முப்படை அதிகாரிகள் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர்.
விமானப்படை தலைமையகத்தின் செயலகத்தின் உயரதிகாரியான சீ.எச்.ஆர். சொய்சா இந்த அரசியல் நிகழ்ச்சியை இணையத்தளத்தில் பார்க்குமாறு அறிவுறுத்த வேண்டும் எனக் கோரி கட்டளை அதிகாரிகளுக்கு உத்தரவொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு தொடர்பான மிக முக்கியமான விடயங்களை அந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புச் செயலாளர் கூறியுள்ளதாக உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் பாதுகாப்புச் செயலாளரது குறித்த நிகழ்ச்சியானது ஜனாதிபதித் தேர்தலுடன் சம்பந்தப்பட்டது. அவர் தனியார் தொலைக்காட்சிகளில் இப்படியான சில அரசியல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
பாதுகாப்புச் செயலாளர் இணையத்தளத்தில் தனது நிகழ்ச்சியை பார்வையிடுமாறு உத்தரவிட்டுள்ள போதிலும் சுமார் சுமார் 300 பேரே அதனை இதுவரையில் பார்வையிட்டிருந்தனர்.
http://www.tamilwin.com/show-RUmszCRdKaeq5.html

Geen opmerkingen:

Een reactie posten