[ செவ்வாய்க்கிழமை, 30 டிசெம்பர் 2014, 01:45.35 AM GMT ]
கொழும்பில் நடைபெற்ற மருத்துவ முகாம் ஒன்றில் பங்கேற்பதற்காகவே சல்மான் கான் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுடன் காணப்படும் நெருங்கிய உறவே சல்மான் கான் இலங்கை விஜயம் செய்ய காரணம்.
பணம் கொடுத்து தேர்தல் பிரச்சாரத்திற்காக சல்மான் இலங்கைக்கு அழைத்து வரப்படவில்லை.
சல்மான் கானை பாரியளவு பணம் கொடுத்து இலங்கைக்கு அழைத்து வந்ததாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை.
சல்மானின் அறக்கட்டளையான பியிங் ஹியுமன் அமைப்பும் இந்த மருத்துவ முகாமிற்கு பங்களிப்பு வழங்கியது.
வேறும் நபர்களின் நட்பு பண ரீதியானது என்ற போதிலும், நாமல் ராஜபக்சவின் நட்பு பண ரீதியானதல்ல என எரிக் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
சல்மான் கான் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவது குறித்து ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எனினும் நேற்று பொரளை கம்பல் மைதானத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் சல்மான் கான் மற்றும் நடிகை ஜெக்லீன் ஆகியோர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதியின் கரங்களை தேர்தலில் பலப்படுத்த வருகை தந்துள்ள சல்மான், ஜெக்லீன் ஆகியோருக்கு நன்றி பாராட்டுவதாக தேர்தல் பிரச்சார மேடையில் சில அரசியல்வாதிகள் அறிவித்திருந்தனர்.
http://www.tamilwin.com/show-RUmszCQUKaet2.html
பெரும்பான்மையான தமிழர்கள் ஜனாதிபதி மஹிந்தவை ஆதரிக்கின்றனர்: சுப்ரமணியன் சுவாமி
[ செவ்வாய்க்கிழமை, 30 டிசெம்பர் 2014, 01:39.39 AM GMT ]
இலங்கை ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இந்திய ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் வாழ்ந்து வரும் பெரும்பான்மை இந்து தமிழர்கள் ஜனாதிபதி மஹிந்தவை ஆதரிக்கின்றார்கள்.
இலங்கை தமிழ் மக்கள் ஜனாதிபதி மஹிந்தவை மீளவும் ஜனாதிபதியாக்கினால், அதிகாரப் பகிர்வு தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு காத்திரமான பங்களிப்பினை வழங்க முடியும்.
எனவே தமிழ் மக்கள் ஜனாதிபதி மஹிந்தவிற்கு வாக்களிக்க வேண்டும் என சுப்ரமணியன் சுவாமி கோரியுள்ளார்.
கடந்த காலங்களிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்காக சுப்பரமணியன் சுவாமி குரல் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszCQUKaet1.html
Geen opmerkingen:
Een reactie posten