தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 28 december 2014

PLOTE பிளவு! சித்தரின் அந்தரங்கம் அம்பலம்…

கூட்டுக் கிளிகள் பறந்துவந்தன மைத்திரி தோட்டத்துக்கு!

நீண்ட நாட்களாக இடம்பெற்று வந்த பேச்சுவார்த்தைகளில் தமக்கு கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது வழங்கப்பட்ட வாக்குறுதிகளை வழங்கும்படி மு.கா வால் முன்வைக்கப்பட்டிருந்த கோரிக்கைள் இனியும் நிறைவேறப்போவதில்லையெனும் கட்டத்திலேயே மேலதிக கால தாமதமின்றி இம்முடிவை எட்டியுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மகிழ்ச்சி பொங்க மு.கா உயர் பீடம்: நீதியமைச்சரின் இராஜினாமா
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்று இரவு இடம்பெற்ற கட்சியின் உயர் அரசியல்பீடக்கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கட்சி தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
இந்தக்கூட்டத்தின் போது பெரும்பாலான உறுப்பினர்கள் மைத்திரிபாலவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தினர். சிலர் பொதுநிலைப்பாட்டை எடுக்கலாம் என்று ஆலோசனை கூறினர்.
ஏற்கனவே அமைச்சர் பெசில் ராஜபக்ச. எனினும் அரசியல் உயர்பீடத்தில் உள்ள பெரும்பாலான உறுப்பினர்களின் நிலைப்பாடு மைத்திரிபாலவின் நோக்கி உள்ளமையால் அவருக்கே ஆதரவளிப்பது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சி தரப்புக்கள் குறிப்பிட்டுள்ளன. இந்தநிலையில் இன்று முற்பகல் காங்கிரஸின் தீர்மானத்தை கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் வெளியிடவுள்ளார்
http://www.jvpnews.com/srilanka/91938.html

PLOTE பிளவு! சித்தரின் அந்தரங்கம் அம்பலம்…

கேள்வி- சிறி அவர்களே உங்களது பிளவு செய்திகளையிட்டு புளொட் தலைவர் சித்தார்த்தன் அவர்கள் முற்றாக மறுதலிப்பு தெரிவித்திருக்கின்றாரே?
பதில்-அவர் தலைமை பொறுப்பில் இருப்பவர் அப்படித்தானே மறுப்பார். அவர் மறுக்கின்றார் என்பதற்காக உண்மைகள் உறங்க போவதில்லையே!
கேள்வி-இல்லை அவர் உங்களுக்கும் புளட்டுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பது போலல்லவா சொல்லியிருக்கின்றார்.
பதில்-அது முழுக்க பொய்யானது. நான் 1980ம் ஆண்டு எனது படிப்பை, ஊரை, உறவினர்களை, கைவிட்டு தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தில் இணைந்து கொண்டு இந்தியாவில் கெரில்லா பயிற்சி பெற புறப்பட்டு சென்றவன். எனது இயக்க பெயர் சபேஷ், எனது இராணுவ பயிற்சி முகாம் குறியீட்டு இலக்கம் 3226 ஆகும்.தமிழ் நாட்டிலிருந்த பாலமொட்டை முகாமில் தேறி “ஹை ஹோமாண்டஸ்” பயிற்சி முடித்தவன் நான். பின்னர் தளம் திரும்பி கழகத்தின் பல்வேறு மட்டங்களிலும் வேலை செய்தவன். புலிகள் எல்லா இயக்கங்களையும் தடை செய்த போது சகலவிதமான உயிர் அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டவன். இந்திய இராணுவத்தின் வருகையின் பின்னர் புளொட்டிலிருந்து பிரிந்த ஈ.என்.டி.எல்.எப் அமைப்பினரின் நிர்ப்பந்தத்தின் பெயரில் அவர்களோடு இணைந்து பணியாற்றியவன். அதன்பின்னர் வெளிநாடு செல்ல தீர்மானித்தபோதும் கழகத்திடம் அறிவித்துவிட்டே சென்றேன்.
கேள்வி-எப்படியிருந்த போதும் பல ஆண்டுகளாக வெளிநாட்டில் இருந்திருக்கின்றீர்களே?
பதில்-ஆம் உண்மைதான் ஆனால் நான் அங்கிருந்த போதிலும் கழக தொடர்புகளுடனேயே இருந்தேன். அதனால் தான் 2009, 2010ம் ஆண்டுகளில் பிரான்சின் புளட் பொறுப்பாளராக தலைமையினால் நியமிக்கப்பட்டிருந்தேன்.
கேள்வி-சரி எவ்விதமான மனக்குறைகளுடன்,அல்லது அதிருப்திகளுடன் இப்போது நீங்கள் புளட்டை விட்டு வெளியேறியுள்ளீர்கள்?
பதில்-முதலில் நாங்கள் புளொட்டிலிருந்து வெளியேறவில்லை என்பதை அழுத்தமாக தெரிவிக்க விரும்புகின்றேன். நாங்கள் தான் புளொட். சித்தார்த்தன் அவர்களின் தலைமையை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம்.
கேள்வி-அது சரி அப்படியே வைத்துக்கொண்டாலும் அவர் மீது நீங்கள் வைக்கின்ற குற்றச்சாட்டுக்கள் என்ன வென்பதை தெளிவுபடுத்த வேண்டுமே?
பதில்- அவர் தன் தலைமைப்பதவியை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருக்கின்றார்.கழக தோழர்களை யெல்லாம் கைவிட்டு விட்டார்.
கேள்வி-இப்படி நீங்கள் பொத்தாம் பொதுவாக குற்றச்சாட்டுகளை அள்ளிவீசுவது அவ்வளவு பொருத்தமாக தெரியவில்லையே? ஒரு கட்சியை பிளந்து நிற்பது என்னும்போது அதற்கு பலமான காரணங்கள் வேண்டுமல்லவா?
பதில்-அப்படியல்ல அவர் தனது உயிரையும் தலைமை பதவியையும் காப்பாற்றிக்கொள்ள பல தோழர்களை பலிகொடுத்தார். புலிகள் எங்கள் தோழர்களையெல்லாம் கொன்று வீசும்போது மெளனம் காத்தார். தனது, உயிரை புலிகள் குறிவைத்து விட கூடாது என்பதற்காக கண்டன அறிக்கைகள் விடுவதை கூட அவர் தவிர்த்து வந்தார். ஆனால் தோழர் டக்லஸ் தேவானந்தாவை பாருங்கள் அவர் புலிகளது எத்தனையோ தற்கொலை தாக்குதல்களுக்கு மத்தியிலும் கொல்லப்பட்ட தனது தோழர்களின் உடல்களை நோர்வே தூதரக வாயிலில் கிடத்தி ஜனநாயக ரீதியில் சர்வதேசத்திடம் நீதி கேட்டார்.
கேள்வி-சரி அப்படியே வைத்துக்கொண்டாலும் அவையெல்லாம் நடந்து முடிந்த கதைகள்.இப்போது புலிகளும் இல்லை. படுகொலைகளும் இல்லை.அப்படியிருக்க?
பதில்-கொஞ்சம் பொறுங்கள். மீதியையும் கேளுங்கள். கழகத்தை வளர்க்க பாடுபட்டு உயிரை கொடுத்த குடும்பங்கள்,கஷ்டங்களை தாங்கிய தோழர்கள் என பலரையும் அவர் மறந்துவிட்டார். இப்போ அவர்கள் எல்லோரும் எங்களுடன் அணிதிரண்டிருக்கின்றார்கள். அரசியல் ரீதியில் தமிழரசு கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு அவர்களின் திருப்திக்காக முன்னாள் ஆயுதம் தூக்கிய போராளிகள் எல்லோரையும் ஓரங்கட்டிவிட்டார். இப்போது அவருடன் யாருமே இல்லை
கேள்வி-நீங்கள் அப்படி சொல்கின்றீர்கள் ஆனால் அவருக்கு கடந்த மாகாண சபை தேர்தலில் நியாயமான வாக்குகள் கிடைத்திருக்கின்றதே. அவர் அவருடன் யாரும் இல்லாவிடின் அது எப்படி சாத்தியம்?
பதில்-அவையெல்லாம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சின்னத்தால் கிடைப்பது. அது இல்லாவிடின் சித்தர் போன்றவர்கள் வெறும் பதர்களே, அவருடன் கூட இருப்பது “தூள்பவன்” மட்டுமே. ஆகவே தான் வடமாகாண அமைச்சு பதவிகளில் ஒன்றையேனும். தமிழரசுக்கட்சி வழங்கவில்லை. இவர்கள் தான் அவர்களுடன் ஓட்டிக் கொண்டிருக்கின்றார்களே தவிர தமிழரசுக்கட்சியினர் இவர்களை கொஞ்சம் கூட மதிப்பதில்லை. அண்மையில் முதலமைச்சர் கூட பகிரங்கமாக இவர்களெல்லாம் ஆயுதம் தூக்கியவர்கள் என்று கேவலப்படுத்தினார்.
அதற்கு கூட இவர் பதில் சொல்லவில்லை. நாட்டுக்காக போராடிய எங்கள் போராளிகளை எல்லாம் முதலமைச்சர் கேவலப்படுத்தும் போது இவர் நமது போராளிகளை மறுதலித்து பேசாமடந்தையாக இருந்தார். சுருங்க சொன்னால் சித்தாத்தரின் தலைமையில் புளட் தனது தனித்துவத்தை இழந்துவிட்டது. சீரழிக்கப்பட்டுவிட்டது. தமிழரசுக்கட்சியின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப இவர்கள் காயடிக்கப்படுகின்றார்கள். கூட்டமைப்பு என்றால் அதில் நான்கு கட்சிகளை தலைவர்களும் தானே அதிகார பீடமாக இருக்க வேண்டும். ஆனால் கூட்டமைப்பின் எந்த தீர்மானங்களும் முடிவுகளும் இவர்களின் பேச்சுக்களை கருத்திலே கொள்வதில்லை. இவர்கள் தமிழரசு கட்சியின் கூஜா தூக்கிகளாகவே நடமாடுகின்றார்கள். எனவேதான் நாம் எங்களது கழகத்தின் தனித்துவத்தை காப்பாற்றும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றோம்.
கேள்வி-தமிழீழ மக்கள் விடுதலை கழகம் இப்போது தலைமறைவு இயக்கமல்ல. அதை விரும்பியபடி யாரும் கைப்பற்று விடமுடியாது. அது கட்சியாக பதிவு செய்யப்பட்டு நீண்டகாலமாக ஜனநாயக பாதையில் செயல்பட்டு வருகின்றது.அதே பெயரில் நீங்கள் இயங்குவதை அதன் தலைமை சட்டரீதியாக தடை செய்யலாமல்லவா?
பதில்- ஆம் நாம் மக்களை இன்னும் ஏமாற்ற முடியாது. எல்லோருமே தமிழீழத்தை கைவிட்டாயிற்று. அதன் பின்னர் தமிழீழ மக்கள் விடுதலை கழகம் என்று இயங்குவதில் எங்களுக்கு சம்மதமில்லை. நாங்கள் PLOTE அல்ல PLOT என்னும் பெயரிலேயே இயங்க உத்தேசித்துள்ளோம். அதாவது தமிழீழ அல்ல “தமிழ் மக்கள் விடுதலை கழகம்”
கேள்வி- உங்களின் இந்த பிளவினை ஏற்றுக்கொண்டு உங்களை ஆதரிப்பவர்கள் எத்தனை பேர்? யார் யாரெல்லாம் உங்களுடன் இருக்கின்றார்கள்?
பதில்-கட்சியின் பலமட்ட தோழர்களும் எங்களை ஆதரிக்கின்றார்கள். குறிப்பாக கழகத்தின் மத்திய குழு உறுப்பினர் முத்தமிழ் வாத்தி,பளை பிரதேசசபை முன்னாள் உறுப்பினர் மொட்டைமாமா,வவுனியாஆட்டோ சூரி,புவனா,காந்தன்,கணேசராஜா,விஜயன்,புதியபுலிகள் காலத்திலிருந்தே எமது செயலதிபர் தோழர் உமா மகேஸ்வரனின் செயலாளராக செயல்பட்ட மாதவன் அவர்கள்,மற்றும் சித்தார்த்தரின் தலைமையினால் ஓரங்கட்டப்பட்டு நிற்கின்ற தீவிர முற்போக்கு சிந்தனைகொண்ட எமது முன்னாள் தோழர்கள்,புலம்பெயர் ஆதரவாளர்கள் என பலர் எமக்கு ஆதரவாக உள்ளனர்.இது வெறிகொண்ட படையல்ல நேர் குறிகொண்ட படை.
கேள்வி-அப்படிஎன்றால் உங்கள் நோக்கம்தான் என்ன?
பதில்-நாங்கள் இனவாத அணுகு முறைகளை கைவிட்டு பெரும்பான்மை மக்களுடனும் ஏனைய சிறுபான்மை மக்களுடனும் இணைந்து வாழ விரும்புகின்றோம். அதற்காக அதிகாரத்துக்கு வருகின்ற சக்திகளுடன் பேரம் பேசும் வல்லமையுடன் இணைந்தியங்க விரும்புகிறோம்.அதனூடாகவே நமது மக்களை வளப்படுத்த முடியும் என்று நம்புகின்றோம். எனவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் எதிர்ப்பரசியலை வெறுக்கின்றோம்.
இது ஒரு இணையச் செய்தி
http://www.jvpnews.com/srilanka/91944.html

Geen opmerkingen:

Een reactie posten