தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 30 december 2014

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மைத்திரிக்கு ஆதரவு (படங்கள் இணைப்பு)

லண்டனில் "TV" லைசன்ஸ் கட்டவில்லையா? அரசின் அதிரடி செயல் (படங்கள் இணைப்பு)
லண்டனில் கடந்த 12 மாதங்களில் சுமார் 1 லட்சம்பேருக்கு (100,000) மேலாககிருமினல் ரக்காட் பதிவாகியுள்ளது. அதாவது பெரும் குற்றம் ஒன்றைச் செய்து, நீதிமன்றம் சென்றால் தான் கிருமினல் ரக்காட் ஏற்படுகிறது.

உங்கள் பெயரில் இந்த கிருமினல் ரக்காட் பதிவாகிறது. ஆனால் TV லைசன்ஸ் காசு கட்டவில்லை என்றாலும், இதுபோன்ற கிருமினல் ரக்காட் பதிவாகிறது. இதனால் பல லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று கூறப்படுகிறது. ஏன் எனில் கிருமினல் ரக்காட் உள்ளவர்கள் நல்ல வேலைக்கு அப்பிளை செய்ய முடியாது.

அப்படியே விண்ணப்பித்தாலும் வேலை கிடைக்கும் என்ற உத்தரவாதம் இல்லை. ஒரு வீட்டுக்கு ஒருவர் கட்டாயமாக TV லைசன்ஸ் காசு கட்டவேண்டும் என்று பிரித்தானிய சட்டம் சொல்கிறது.

சிலவேளைகளில் பணக் கஷ்டத்தில் உள்ளவர்கள், இதனைக் கட்ட தவறி விடுவார்கள். இதன் காரணமாக அவர்களுக்கும் கிருமினல் என்ற பட்டம் கிடைத்துவிடுகிறது.

இது எந்த வகையில் நியாயம் என்று பலர் கேள்வி எழுப்பியுள்ளதாக,ஆங்கிலப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. பிரித்தானியாவில் இயங்கிவரும் BBC , மற்றும் அதன் சகோதர TV நிலையங்களுக்கு காசு கொடுக்கவே TV லைசன்ஸ் பிரித்தானியாவில் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆசிய இனத்தவர்கள் BBC போன்ற ஆங்கில தொலைக்காட்சிகளை பார்பது மிகவும் குறைவு. எனவே பிரித்தானிய ஆங்கில தொலைக்காட்சியை பார்க்காதவர்கள், TV லைசன்ஸ் காசை கட்ட தேவையில்லை என்று முன்னர் கூறினார்கள். இது நடைமுறையிலும் இருந்தது.

ஆனால் தற்போது அதனையும் மாற்றிவிட்டார்கள். வீட்டில் TV இருந்தால் போதும். கட்டாயமாக நீங்கள் காசு கட்டவேண்டும் என்கிறார்கள். மேலும் TV லைசன்ஸ் காசு கட்டாத நபர்களை அதிகாரிகள் எப்படி பிடிக்கிறார்கள் என்று பார்போம். இவர்கள் ஒரு வானில் சில சாதனங்களை பொருத்திக்கொண்டு வீதிகளில் அலைந்து திரிகிறார்கள். இவர்களுக்கு எந்த வீடு காசு கட்டவில்லை என்று நன்றாகத் தெரியும்.

உங்கள் வீட்டில் TV ஐ ஆன் செய்து பார்த்தால், உடனே அவர்களுக்கு தெரிந்துவிடும். அவர்கள் வந்து உங்கள் வாசல் கதவை தட்டுவார்கள். கதவை நீங்கள் திறக்காவிட்டால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது.

ஆனால் நீங்கள் கதவை திறந்தால் போதும். அவர்கள் அதனை தள்ளிக்கொண்டு உள்ளே வர அதிகாரம் உண்டு. பின்னர் உங்கள் வீட்டில் உள்ள அறைகளுக்கு சென்று TV உள்ளதா என்று ஆரயவும் அதிகாரம் உண்டு.

எனவே லண்டனில் TV லைசன்ஸ் காசு கட்டாமல் உள்ள மக்கள் மேற்சொன்ன விடையத்தை நன்றாகப் படிப்பது அவசியம் !




30 Dec 2014
http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1419938284&archive=&start_from=&ucat=1&
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மைத்திரிக்கு ஆதரவு (படங்கள் இணைப்பு)
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன் இதனை அறிவித்துள்ளார்.

தமிழ் மக்களுக்கு உரிய தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தலைவர் ஆர்.சம்பந்தனுடன், கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் பங்கேற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. கூட்டம் தொடர்ந்தும் நடைபெறுகிறது.

மைத்திரிக்கு ஆதரவளித்தமை ஏன்? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விளக்கம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது பொதுஎதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு தெரிவித்து தெர்தல் அறிக்கையினை வெளியிட்டுள்ளது.

அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற இரு பிரதான வேட்பாளர்களின் நிலைப்பாடுகளையும், பிரகடனங்களையும் கூர்ந்து கவனித்து வந்ததோடு,

இலங்கையிலுள்ள தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவம் என்ற வகையில் தமிழ் பேசும் மக்களின், குறிப்பாக வடக்குக் கிழக்கிலுள்ள தமிழ் பேசும் மக்களின் கருத்துக்களையும் மனதில் கொண்டு, வரலாற்று முக்கியத்துவம் மிக்க இந்த ஜனாதிபதித் தேர்தலில் அந்த மக்களையும் மற்றைய பிரஜைகளையும் சரியாக வழிநடத்தும் பொறுப்பு எம்மிடமுள்ளது.1
2
3
4
5
6
7
9
10
12
13
14
15
30 Dec 2014
http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1419942530&archive=&start_from=&ucat=1&

Geen opmerkingen:

Een reactie posten