தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 31 december 2014

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தீர்மானத்திற்கு உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் பாராட்டு-பணம் வாங்கியிருப்பாரோ!!!

முஸ்லிம் அரசியல்வாதிகளின் குறைபாட்டை நீக்கவே சல்மான் கான்: ரணில்
[ புதன்கிழமை, 31 டிசெம்பர் 2014, 03:18.45 PM GMT ]
அரசாங்கத்தை விட்டு வெளியேறும் முஸ்லிம் அரசியல்வாதிகளின் குறைபாட்டை நிவர்த்தி செய்ய இந்தியாவிலிருந்து சல்மான் கானை கொண்டுவந்ததாக எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
இன்று காலை கொழும்பு விகாரமாகதேவி பூங்காவில் நடைபெற்ற மகளிர் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
மேலும், சல்மான் கான் மூலம் முஸ்லிம் அரசியல் சங்கமொன்றை உருவாக்க ஜனாதிபதி முயற்சிப்பதாக ரணில் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் ரோசி சேனாநயக்க தலைமையில் இந்த மகளிர் மாநாடு நடைபெற்றது.
இந்நிகழ்வில் பொதுவேட்பாளர், மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க கருஜயசூரிய,  திருமதி சானாஸ் ரவூப் ஹக்கீம், அனோமா பொன்சேகா, திருமதி கபீர் ஹாசீம், பாத்திமா ரவி கருநாயக்க, தலதா அத்துக்கோரள, பெரோசா முசம்மில், ஹிருணிக்கா,  மகளிர் பாடகர், நடிகர்கள், இயக்குனர் ஊடகவியலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
http://www.tamilwin.com/show-RUmszCQVKbnu3.html
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தீர்மானத்திற்கு உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் பாராட்டு
[ புதன்கிழமை, 31 டிசெம்பர் 2014, 03:41.50 PM GMT ]
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்று அவசியம் என்பதை உணர்ந்து தீர்மானம் எடுத்துள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பை உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம்  பாராட்டுகின்றது.
“கொடுங்கோல் ஆட்சி இடம்பெறும் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட்டாலே அந்த நாட்டின் அனைத்து மக்களுக்கும் விடிவு கிடைக்கும் என்பதை நன்கு உணர்ந்தும், அதன் அவசியத்தை வலியுறுத்தும் வண்ணமும் மைத்திரிபால சிறிசேனாவை ஆதரிக்கும் வகையில் துணிச்சலான தீர்மானம் எடுத்துள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பை உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் பாராட்டுகின்றது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் இந்த முடிவானது, இலங்கையில் அரசின் அடக்கு முறை இல்லாதொழிக்கப்பட்டு, சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுக்கு ஒரு நிம்;மதியான வாழ்க்கை அமைய வழிவகுக்கும் என்று எமது இயக்கம் பூரணமாக நம்புகின்றது”
இவ்வாறு உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் துரை.கணேசலிங்கமும், இயக்கத்தின் சர்வதேச ஊடகப் பொறுப்பாளர் கனடா வாழ் ஆர். என். லோகேந்திரலிங்கமும் இணைந்து வெளியி;ட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவது,
ஜனாபதித் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் உலகெங்கும் பரந்து வாழும் தம்pழ் மக்களாலும், இலங்கை வாழ் மக்களாலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட பல விடயங்களில் தமிழ்த்  தேசிய கூட்டமைப்பின் ஆதரவு யாருக்கு என்ற முடிவும் ஒன்றாகவே இருந்தது.
பல நாட்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உயர் மட்டக்குழு கூடி ஆராய்ந்து பல தரப்பட்ட மக்களிடமிருந்து பெற்ற கருத்துக்களையும் உள்வாங்கி, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நீண்டகால அரசியல் அனுபவமும் இலங்கையின் பெரும்பான்மை இனக்கட்சிகளின் அரசியல் அணுகுமுறை தொடர்பான பார்வையுமே, தமிழ்த் தலைவர்களின் சிந்தனைகளி;ன் அடிப்படையில், இந்த தீர்க்கமான முடிவை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எடுப்பதற்கு காரணமாக அமைந்திருக்கும் என்று நாம் நம்புகின்றோம்.
தமது ஆதரவை எதற்காக மைத்திரிபால சிறிசேனாவிற்கு வழங்க வேண்டும் என்பதற்கு ஆதாரமாக  பல காரணங்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் தமது முடிவு அறிவிக்கப்பட்ட அன்றைய நாளிலேயே ஊடகங்களுக்கு அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பை சிங்கள ஊடகங்கள்கூட முன்னுரிமை வழங்கி தங்கள் ஊடகங்களில் வெளியிட்டமை இங்கு நாம் கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.
யுத்தம் காரணமாக வடக்கிலும் கிழக்கிலும் இடம்பெயர்ந்து இலட்சக்கணக்கான தமிழ் பேசும் மக்கள் இன்னும் அவர்களது காணிகளில் மீளக்குடியமர்த்தப்பட வில்லை. இவ்வாறு வீடுகளோ வாழ்வாதாரங்களோ இன்றி வாடும் அவர்களுக்கு சொந்தமான காணிகளை மகிந்த ராஜபக்ச அரசாங்கம் ஆக்கிரமித்து இராணுவ நகரங்களை உருவாக்கி வருகின்றது. இந்த ஆக்கிரமிப்பு என்பது தமிழ் மக்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிவி;ட்டது.
மேலும் இலங்கையின் உச்ச நீதி மன்றத்தின் தீர்மானத்திற்கு எதிரான மகிந்த ராஜபக்ச அரசாங்கம் தற்போது நாட்டின் ஏனைய பகுதிகளிலும் கண்மூடித்தனமாக காணிகளைச் சுவீகரித்து வருகின்றது.
இவ்வாறு பல காரணங்களைத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு “சர்வாதிகாரத்திலிருந்து நமது நாட்டையும் ஜனநாயகத்தையும் காப்பாற்றுவதற்காகவும் எமது உன்னத விழுமியங்களான சமத்துவம், நீதி, தன்மானம், சுதந்திரம், என்பவற்றை மீளப்பெறுவதற்காகவுமே நாம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை நாம் படுதோல்வியடையச் செய்யவேண்டும்” என்றும் மிகவும் ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளதை நாம் பாராட்ட வேண்டும். இந்த முடிவை சிங்கள மக்களின் பெரும்பாலானவர்களும் ஏற்றுக்கொண்டுள்ளதை நாம் அவதானிக்கின்றோம்.
இந்த வகையில் மிகவும் அவசியமான ஒரு தருணத்தில் மிகவும் முக்கியமான முடிவை தீர்க்கமான ஆராய்ந்து எடுத்திருக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பையும் அதன் தலைவர்களான திருவாளர்கள் சம்பந்தன், மாவை சேனாதிராஜா ஆகியோரையும் நாம் பாராட்டுகின்றோம்.
எனவே உலகெங்கும் பரந்து வாழும் அனைத்து தமிழ் மக்களும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் எதிர்கால நடவடிக்கைகள் அனைத்திற்கும் தங்கள் ஆதரவை வழங்கவேண்டும் என்றும் எமது உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் கேட்டுக்கொள்கின்றது என குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszCQVKbnu4.html

Geen opmerkingen:

Een reactie posten