[ புதன்கிழமை, 31 டிசெம்பர் 2014, 12:27.40 PM GMT ]
இந்த சந்தேக நபர் கடந்த 26ம் திகதி முல்லேரியா, அங்கொட பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்து 103 கிராம் ஹெரோயின் போதைப் பொருள், அதனை நிறுக்க பயன்படுத்தப்படும் தராசு என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபர் கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டு பின்னர் தடுப்பு காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டு போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszCQVKbnt7.html
ஜே.வி.பி நியூஸ் என்ற பெயரில் இயங்கி வரும் இணையத்தளத்திற்கு எதிரா க ஜே.வி.பி முறைப்பாடு
[ புதன்கிழமை, 31 டிசெம்பர் 2014, 12:32.36 PM GMT ]
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஜே.விபி நியூஸ் (Jvpnews.com) எனும் பெயரில் முகவரி எதுவும் இல்லாதவர்களால் ஒரு இணையத்தளம் இயக்கப்பட்டு வருவதாவகவும் குறித்த இணையத்தளத்தில் பொய்ப்பிரச்சாரம் மற்றும் ஆதாரமற்ற செய்திகள் பிரசுரிக்கப்படுவதாகவும் இது தொடர்பாக தங்கள் கட்சிக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்த இணையத்தளம் மக்கள் விடுதலை முன்னணி இணையத்தளம் அல்ல எனவும் இவ்விணையத்தளத்திற்கும் தங்களது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லையெனவும் விஜித ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த இணையத்தளம் தொடர்பாக ஊடக அமைச்சுக்கு தமது கட்சி முறைப்பாடு ஒன்றினை வழங்க தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஊகங்கள் அடிப்படையில் சில செய்திகள் இந்த முகவரியில்லாத இணையத்தளம் வெளியிட்டுள்ளதாகவும் அது மக்கள் விடுதலை முன்னணியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCQVKbnuy.html
Geen opmerkingen:
Een reactie posten