தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 28 december 2014

எதிரணியில் இணைந்து கொண்ட ஹூனைஸ், இராஜதுரை மீண்டும் அரசாங்கத்துடன்?

மைத்திரிக்கு ஆதரவளிப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானம்! - நீதியமைச்சர் பதவியிலிருந்து இராஜினாமா!
[ ஞாயிற்றுக்கிழமை, 28 டிசெம்பர் 2014, 01:58.35 AM GMT ]
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்று இரவு இடம்பெற்ற கட்சியின் உயர் அரசியல்பீடக்கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கட்சி தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
இந்தக்கூட்டத்தின் போது பெரும்பாலான உறுப்பினர்கள் மைத்திரிபாலவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தினர். சிலர் பொதுநிலைப்பாட்டை எடுக்கலாம் என்று ஆலோசனை கூறினர்.
இதன்போது முஸ்லிம் மக்களின் பாதுகாப்பு, இறைமை என்பன குறித்து ஆராயப்பட்டன.
ஏற்கனவே அமைச்சர் பெசில் ராஜபக்சää ரவூப் ஹக்கீமும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார்.
எனினும் அரசியல் உயர்பீடத்தில் உள்ள பெரும்பாலான உறுப்பினர்களின் நிலைப்பாடு மைத்திரிபாலவின் நோக்கி உள்ளமையால் அவருக்கே ஆதரவளிப்பது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சி தரப்புக்கள் குறிப்பிட்டுள்ளன.
இந்தநிலையில் இன்று முற்பகல் காங்கிரஸின் தீர்மானத்தை கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் வெளியிடவுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானம்!
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பதாக முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
இது தொடர்பான அறிவித்தல் சற்று முன்னர் வெளியாகியுள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக ஆலோசிப்பதற்கு நேற்று இரவு இடம்பெற்ற கட்சியின் உயர் அரசியல்பீடக்கூட்டத்தில் இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் கட்சித் தலைவர் ரவூப்ஹக்கீமுக்கு வழங்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில் அமைச்சர் பசில் ராஜபக்ச, ரவூப் ஹக்கீமும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தார். குறித்த பேச்சுவார்த்தையில் பலவிதமான வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்த போதிலும் இறுதி முடிவு எட்டப்படவில்லை எனறு தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து அரசியல் உயர்பீடத்தில் உள்ள பெரும்பாலான உறுப்பினர்களின் நிலைப்பாட்டை ஆதரிக்கும் வகையில் மைத்திரிபாலவுக்கே ஆதரவளிப்பது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் இன்று காலை கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேனவிற்கு ஆதரவளிக்க முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் அறிவித்துள்ளார்.
நீதியமைச்சர் பதவியிலிருந்து இராஜினாமா செய்கிறார் மு.கா தலைவர்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொது வேட்பாளர் மைத்ரிபாலவை ஆதரிப்பதற்கு தீர்மானித்திருக்கும் நிலையில் தனது அமைச்சுப் பதவியையும் இராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார் நீதியமைச்சர் ரவுப் ஹகீம்.
நீண்ட நாட்களாக இடம்பெற்று வந்த பேச்சுவார்த்தைகளில் தமக்கு கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது வழங்கப்பட்ட வாக்குறுதிகளை வழங்கும்படி மு.கா வால் முன்வைக்கப்பட்டிருந்த கோரிக்கைள் இனியும் நிறைவேறப்போவதில்லையெனும் கட்டத்திலேயே மேலதிக கால தாமதமின்றி இம்முடிவை எட்டியுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து சில தினங்களுக்கு முன் கட்சிச் செயலாளர் ஹசன் அலி முஸ்லிம் குரலுக்கு வழங்கிய கருத்துக்கள்:
http://www.tamilwin.com/show-RUmszCRcKafo4.html
மக்கள் எதிர்பார்க்கும் ஜனநாயகத்தை வழங்க அரசு தவறியுள்ளது: தம்பர அமில தேரர்
[ ஞாயிற்றுக்கிழமை, 28 டிசெம்பர் 2014, 02:07.21 AM GMT ]
விடுதலைப்புலிகளை தோற்கடித்த பின்னர் அரசாங்கம் ஜனநாயகத்தை பின்பற்ற தவறிவிட்டது. எனவே மக்கள் அரசாங்கத்தின் மாற்றம் ஒன்றை எதிர்ப்பார்ப்பதாக ஜெயவர்த்தனபுர பலக்கலைக்கழக அகழ்வாராய்ச்சி விரிவுரையாளர் தம்பர அமில தேரர் தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகளின் வீழ்ச்சிக்கு பின்னர் நாட்டில் அரசியல் மற்றும் பாதுகாப்பு என்பவற்றை மக்கள் எதிர்பார்த்தனர். எனினும் அவை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
விடுதலைப்புலிகள் செயற்பட்ட காலத்தில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கு அரசாங்கத்துக்கு கஸ்ட நிலை இருந்தது. எனினும் போருக்கு பின்னர் அதனை நிறுவியிருக்க முடியும்.
இந்தக்காலக்கட்டத்தில் வறுமை ஒழிப்பு, குற்றச்செயல்களின் குறைப்பு, கல்வியில் முன்னேற்றம் என்பவற்றையே மக்கள் எதிர்ப்பார்த்தனர் என்றும் தம்பர அமில சுட்டிக்காட்டினார்.
எனினும் எதுவும் இடம்பெறவில்லை. எனவே மக்கள் அரசாங்கத்தில் மாற்றம் வேண்டும் என்று கோருவதாக அமில தேரர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRcKafo6.html
மஹிந்தவின் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு எதிராக மைத்திரியின் சுதந்திரக்கட்சி உருவாக்கம்
[ ஞாயிற்றுக்கிழமை, 28 டிசெம்பர் 2014, 02:21.49 AM GMT ]
ஜனாதிபதியின் தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து விலகி, எதிரணி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்துள்ளவர்கள் மாநாடு ஒன்றை நடத்தவுள்ளனர்.
ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் இந்த மாநாடு நடத்தப்படவுள்ளது.
ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க ஆகியோரின் தலைமையில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
இந்தநிலையில் குறித்த குழுவினர் பிரதான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியாக செயற்படுவது குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.
ஜனாதிபதி தேர்தலின் பின்னர் கட்சியின் கொள்கைவகுப்பு குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளது.
இதன்படி கட்சியின் செயலாளருக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்படவுள்ளன.
இந்தநிலையில் சட்டரீதியாக மஹிந்தவிடம் இருந்து எதிரணிக்கு சென்ற ஆளும் கட்சி உறுப்பினர்களை காப்பாற்ற உதவ முடியும் என்று முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா உறுதியளித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRcKafo7.html
பொதுவேட்பாளர் மைத்திரிபாலவுக்கான மக்களின் ஆதரவு அதிகரித்துள்ளது: நந்தன குணதிலக்க
[ ஞாயிற்றுக்கிழமை, 28 டிசெம்பர் 2014, 02:31.34 AM GMT ]
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றி குறித்த மக்களின் எண்ணங்களில் அதிகரிப்பு ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாணந்துறை நகரசபையின் முன்னாள் தலைவர் நந்தன குணதிலக்க இந்தக்கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரசாரங்களில் அக்கறை கொள்ளவில்லை என்று சுட்டிக்காட்டினார்.
எனவே அடுத்த 10 நாட்களில் தெளிவான மாற்றம் ஒன்றை எதிர்ப்பார்க்க முடியும் என்று குணதிலக்க குறிப்பிட்டார்.
இதேவேளை முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் 8 பேரும் பிரதேச சபை உறுப்பினர்களும் நேற்று எதிரணியில் இணைந்துள்ளனர்.
மேலும் பல விரைவில் எதிரணியில் இணைந்து கொள்ளவுள்ளதாக குணதிலக்க குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmszCRcKafpy.html
ஐ.தே.க தொகுதி அமைப்பாளர்களுக்கு தேர்தல் பிரச்சார நிதியாக தலா 10 லட்சம்
[ ஞாயிற்றுக்கிழமை, 28 டிசெம்பர் 2014, 02:38.10 AM GMT ]
ஐக்கிய தேசியக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுக்கு தலா பத்து லட்சம் ரூபா தேர்தல் பிரச்சார நிதி வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக இவ்வாறு நிதி வழங்கப்படவுள்ளது.
ஏற்கனவே சில தொகுதி அமைப்பாளர்களுக்கு இந்தப் நிதி வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் ஏனைய தொகுதி அமைப்பாளர்களுக்கும் பணம் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
170 தொகுதி அமைப்பாளர்களுக்கு தலா 10 லட்ச ரூபா நிதி வழங்கப்படவுள்ளது.
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை வெற்றியீட்டச் செய்ய வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்ய ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszCRcKafpz.html
கீரிகளினதும், பாம்புகளினதும் கூண்டுக்குள் சிக்கித் தவிக்கும் எதிரணி வேட்பாளர்: ஜீ. எல். பீரிஸ்
[ ஞாயிற்றுக்கிழமை, 28 டிசெம்பர் 2014, 03:03.58 AM GMT ]
ஆட்சி மாற்றம், ஜனாதிபதி மஹிந்தவை மாற்றல் இவை இரண்டையும் மட்டுமே தமது கருப்பொருளாகக் கொண்டு பிரசாரம் செய்து வரும் எதிரணியினர் ஒரு நாட்டை நிர்வகிப்பது தொடர்பான எவ்விதமான அடிப்படைக் கொள்கை அறிவுகூட இல்லாதவர்கள் என அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஒரு நாட்டை நிர்வகிப்பது என்பதை இவர்கள் ஏதோ விளையாட்டுத் தனமாக நினைக்கிறார்கள். சந்திரிகாவும். ரணில் விக்கிரமசிங்கவும் சரத் பொன்சேகாவும் தமது குறுகிய பழிவாங்கும் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக தாய் நாட்டைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாது மைத்திரிபால சிறிசேனவைப் பகடைக் காயாகப் பயன்படுத்தி வருவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தான் ஜனாதிபதி ஆகிவிட்டால் எல்லாமே சரியாகிவிடும் என்பதாகவே மைத்திரிபால நினைத்துக் கொண்டிருக்கிறார். அவர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான கருத்துக்களை மேடைகளில் தெரிவித்து வருகிறார்.
தன்னைச் சந்திக்கும் தலைவர்களுடன் ஒவ்வொரு மாதிரி முன்னுக்குப் பின் சம்பந்தமில்லாது கதைக்கிறார். இத்தகைய ஒருவரால் ஒரு நாட்டை எப்படி நிர்வகிக்க முடியும்?
இது விளையாட்டல்ல. நாட்டை நிர்வகிக்க முதலாவதாக சரியான முறையில் வெளிநாட்டுக் கொள்கைகளை முன்னெடுக்க வேண்டும். அயல் நாடுகளைச் சமாளிக்க வேண்டும். தெற்காசியாவிலேயே அமைதியான நாடாக இலங்கை மட்டுமே உள்ளது. அதற்கு கடந்த பத்து வருடங்களாக நட்டை ஆட்சி செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே காரணம். அதனைச் சீர்குலைக்க முயற்சி செய்தவரும் வெளிநாட்டுச் சக்திகளுடன் உள்நாட்டுத் தலைவர்கள் சிலரும் இணைந்துள்ளனர். இது தேசத் துரோகச் செயற்பாடாகும்.
எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு நாட்டை தலைமை தாங்கி ஆளும் வல்லமை கிடையாது. இவருக்கு எத்தகைய முன் அறிவும் இல்லை. அத்துடன் இவருடன் கூட்டணி அமைத்துள்ளவர்கள் தமக்கிடையே பல முரண்பாடான கருத்துக்களைக் கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர். உள்நாட்டிலேயே ஆட்சி செய்ய முடியாதவராகக் காணப்படும் இவரால் வெளிநாட்டுக் கொள்கைகளை முன்னெடுக்க முடியாது. இது எதிர்காலத்தில் எமது நாட்டுக்கு பாரதூரமான விளைவை எற்படுத்தலாம். மைத்திரியுடன் இணைந்துள்ள சந்திரிகா, ரணில் விக்கிரமசிங்க, சரத் பொன்சேகா. மனோ கணேசன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சஜித் பிரேமதாச. கரு ஜெயசூரிய, ஜாதிக ஹெல உருமய உட்பட பல கருத்துக்களையும் கொண்டவர்களை இவரால் சமாளிக்க முடியாது.
இப்போது தேர்தலை இலக்காக வைத்து இவர்கள் தமக்கிடையே போலியான ஒற்றுமையை காட்டி வருகிறார்கள். ஒருவேளை இவர்கள் ஆ
ஆட்சியை அமைத்தால் அதன் பின்னர் இவர்களது சுயரூபங்கள் தெரிய வரும். உண்மையில் கீரிகளும் பாம்புகளும் ஒற்றுகூடி தமக்கிடையே போலியான ஒற்றுமையை வெளிக்காட்டி வருவதாகவே என்னால் பார்க்க முடிகிறது. இவர்களால் ஒற்றுமையாக இருந்து நாட்டை ஒருபோதும் நிர்வகிக்க முடியாது.
மைத்திரியால் தன்னிச்சையாக ஒரு முடிவினையும் எடுக்க முடியாது. சந்திரிகா, ரணில், சரத் பொன்சேகா, ஜாதிக ஹெல உருமய கட்சியினர் ஆயோரிடம் இவர் ஆலோசனை பெற்றே ஆக வேண்டும். நாட்டை நிர்வகிக்க ஜனாதிபதி மஹிந்த போன்ற பலமுள்ள ஜானதிபதியே அவசியும். கூடிப் பேசி பின்னர் சரியான முடிவை தனித்து முன்வைக்கும் தலைமையை நாம் அவரிடம் மட்டுமே காண முடிகிறது. அது அவரது தலைமைத்துவத்தின் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை. அவரிடம் அந்த ஆளுமை இருப்பதால் அவரே சிறந்த தலைவராக தொடர்ந்தும் இந் நாட்டை ஆள வேண்டும். மாற்றம், மாற்றம் என எண்ணி நாட்டு மக்கள் படுகுழியில் விழுந்து விடக் கூடாது. எனவே மக்கள் சிந்தித்து வாக்களித்து தமது தலைமையைத் தெரிவு செய்ய வேண்டும் எனவும் அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszCRcKafp1.html

வவுனிக்குளம் வான் பாய்வதால் போக்குவரத்துக்கள் பாதிப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 28 டிசெம்பர் 2014, 03:33.38 AM GMT ]
தொடர்ந்து பெய்துவரும் கடும் மழைகாரணமாக வன்னியில் அனைத்து குளங்களிலும் நீர் நிரம்பி வான்பாய்வதால், போக்குவரத்துப்பாதைகள் பல நீரில் மூழ்கியுள்ளன.
வன்னியின் பெரிய குளங்களில் ஒன்றான வவுனிக்குளம் வான்பாய்வதால் விநாயகபுரம் துணுக்காய் வீதியும், பறங்கி ஆறு வான்பாய்வதால் சிராட்டி குளம் நெட்டாங்கண்டல் வீதியும் மற்றும் பாண்டியன்குளம் செல்வபுரம் துணுக்காய் வீதிகளும் நீர் குறுக்கறுத்து பாய்வதால் போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை வவுனிக்குளம் அணைவழியாக போக்குவரத்தினை மேற்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போதும் நிலவும் சீரற்ற கால நிலை காரணமாக தொடர்ந்து பரவலாக பலத்த மழை பெய்துவருவது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszCRcKafp3.html
எதிரணியில் இணைந்து கொண்ட ஹூனைஸ், இராஜதுரை மீண்டும் அரசாங்கத்துடன்?
[ ஞாயிற்றுக்கிழமை, 28 டிசெம்பர் 2014, 03:56.31 AM GMT ]
ஆளும் கட்சியிலிருந்து எதிரணியில் இணைந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஹுனைஸ் பாரூ மற்றும் இராஜதுரை ஆகியோர் மீண்டும் அரசாங்கத்துடன் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனுடன் முரண்பட்டுக் கொண்ட ஒரே காரணத்திற்காக பொது எதிரணியுடன் கூட்டு வைத்துச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக்கும், முன்னாள் பிரதியமைச்சர் திகாம்பரத்துடன் முரண்பட்டுக் கொண்ட காரணத்திற்காக கட்சி தாவிய பாராளுமன்ற உறுப்பினரான இராஜதுரையும் மீண்டும் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதாக நம்பகரமாகத் தெரிய வருகிறது.
இருவரும் தாம் முரண்பட்ட தத்தமது கட்சிகளின் தலைவர்கள் தற்போது பொது எதிரணியின் பக்கம் கட்சி தாவி வந்துள்ளதால் அவர்கள் தம்மைப் பழிவாங்கக் கூடும் என்ற காரணத்தினால் மீண்டும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படவுள்ளதாகத் தெரிய வருகிறது.
இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து கொள்ளும் பட்சத்தில் ஹூனைஸ் பாரூக்கிற்கு முன்னாள் அமைச்சர் ரிசாத் பதவி வகித்த அமைச்சர் பதவியும், இராஜதுரைக்கு முன்னாள் பிரதியமைச்சர் திகாம்பரம் வகித்த பிரதியமைச்சர் பதவியும் வழங்கப்படலாம் என தெரிய வந்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszCRcKafp4.html

Geen opmerkingen:

Een reactie posten