தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 27 december 2014

அக்கரைப்பற்றில் மைத்திரிக்கு ஆதரவான கூட்டத்தில் கல்லெறித் தாக்குதல்



ஜனாதிபதியின் பிரச்சாரக் கூட்டத்திற்காக பாதையை மறைத்து மேடை அமைப்பு!
[ சனிக்கிழமை, 27 டிசெம்பர் 2014, 11:24.01 PM GMT ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் நுவரெலியாவில் நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்திற்காக பிரதான பாதை மறிக்கப்பட்டு மேடை அமைக்கப்பட்டுள்ளது.
அதிக மழைவீழ்ச்சி மற்றும் மண் சரிவு காரணமாக பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள மக்கள் ஜனாதிபதி தரப்பினரின் இந்த நடவடிக்கை காரணமாக மேலும் நெருக்கடியொன்றை எதிர்கொண்டுள்ளனர்.
மேலும் நுவரெலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள சுற்றுலாப் பயணிகளும் இதன் காரணமாக கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
அத்துடன் இந்த பிரச்சார மேடை அமைக்கும் பணியில் கடற்படையினரின் வாகனம் மற்றும் சிப்பாய்கள் பகிரங்கமாக ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், இது குறித்து தேர்தல்கள் திணைக்கள அலுவலர்கள் எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszCRbKafo1.html
அக்கரைப்பற்றில் மைத்திரிக்கு ஆதரவான கூட்டத்தில் கல்லெறித் தாக்குதல்
[ சனிக்கிழமை, 27 டிசெம்பர் 2014, 11:28.14 PM GMT ]
இன்று அக்கரைப்பற்றில் பொது வேட்பாளரை ஆதரித்து நடைபெற்ற பொது கூட்டத்தின் போது மேடையை நோக்கி சிலர் கல்லெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
எனினும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற குறித்த கூட்டம் வெற்றிகரமாக நடந்துள்ளது. இதில் பெரும் திரளான ஆதரவாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதனையடுத்து எதிர்ப்பாளர்கள் பிரதான வீதியின் மின்குமிழ்களை அணைத்து பிரதேசத்தில் செயற்கை இருட்டை ஏற்படுத்தியுள்ளனர்.
இருளில் தட்டுத்தடுமாறியபடி சென்ற சனக்கூட்டத்தின் மீது மட்டுமன்றி எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு வாகனத்தின் மீதும் கல்லெறித் தாக்குதல் நடைபெற்றுள்ளது.
எனினும் குறித்த கல்லெறித்தாக்குதலில் எவருக்கும் பாதிப்பில்லை என்று தெரியவந்துள்ளது.
அத்துடன் கூட்டம் முடிந்து அட்டாளைச்சேனையை நோக்கிச் சென்ற ஆதரவாளர்கள் மீது அக்கரைப்பற்று கார்கில்ஸ் பூட்சிட்டிக்கு அருகாமையில் வைத்து சரமாரியான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், பாதையால் சென்ற வாகனங்களின் மீதும் கல்லெறித் தாக்குதல் மேற்கொள்ளாப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று பொலிசார் உடனடியாக வண்முறை நடந்த இடத்திற்குச் சென்று பாதுகாப்பினை பலப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmszCRbKafo2.html

Geen opmerkingen:

Een reactie posten