ஹக்கீம், ரிசாத்தை கடுமையாக எச்சரிக்கும் கோத்தபாய!
2005ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ரவூப் ஹக்கீம், மஹிந்தவுக்கு எதிராக பணியாற்றினார். தேர்தலில் மஹிந்த ராஜபக்ச வெற்றி பெற்றதும், அவருடன் இணைந்து அமைச்சுப் பதவியையும், எல்லா சலுகைகளையும் பெற்றுக் கொண்டார்.
மீண்டும் 2010ம் ஆண்டு, சரத் பொன்சேகாவை ஆதரித்தார். அந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ச வெற்றி பெற்ற பின்னர், அரசாங்கத்துடன் இணைந்து கொண்டு எல்லா சலுகைகளையும் பெற்றுக் கொண்டார். சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் முஸ்லிம் பிரதிநிதிகள் பெறாத சலுகைகளையெல்லாம் இவர்கள் பெற்றனர்.
இவர்களின் செயற்பாடுகள் இஸ்மாமிய மதத்தையே கேள்விக்குள்ளாக்கியுள்ளது. இதனைத் தான் இஸ்லாம் போதிக்கிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இனிமேல், வெளியே போனவர்களை மீண்டும் எடுக்கமாட்டோம். இதனை நான் உறுதிப்படுத்துகிறேன். அவர் மீண்டும் வருவதற்கு நான் விட மாட்டேன் எனவும் கோத்தபாய தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் இந்த தகவலை அவர் வெளியிட்டார்.
http://www.jvpnews.com/srilanka/92284.html
கூட்டமைப்பின் உறுப்பினர்கள் நால்வர் மஹிந்தவிடம்….
இன்று புதன்கிழமை வவுனியா தனியார் விடுதி ஒன்றில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் ஊடக மாநாடு இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு ஜனாதிபதி மஹிந்தவுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தும்போதே இவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் டொமினிக் அன்ரன், உப தவிசாளர் ரிஷிதாசன், உறுப்பினர்களான பேரின்பகரன், சிவராஜா ஆகிய நால்வருமே இவ்வாறு ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஆதரவு தெரிவித்து ஊடக சந்திப்பில் கலந்துகொண்டனர்.
http://www.jvpnews.com/srilanka/92281.html
கூட்டமைப்பின் முடிவு சரியா? பிழையா? சூடான விவாதம்….
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு மைத்திரிபால சிறிபால சேனவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தமை தொடர்பான முடிவால் பலருக்கும் பலவிதமான ஐயப்பாடுகள் எழுந்துவரும் நிலையில் அவர்கள் எடுத்த முடிவு தவறா? தவிர்க்க முடியாததா? என்பது தொடர்பில் தமிழகத்திலிருந்து வெளியாகும் தந்தி தொலைக்காட்சியில் இடம்பெற்ற காரசாரமான விவாதம் இடம்பெற்றது.
இதில் த.தே.கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் எம்.பி யான எம்.ஏ.சுமந்திரனும் கலந்துகொண்டார். நேற்றையதினம் மகிந்த ராஜபக்சேவை இதே தொலைக்காட்சி நேர்கண்டமை குறிப்பிடத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/92279.html
Geen opmerkingen:
Een reactie posten