[ ஞாயிற்றுக்கிழமை, 28 டிசெம்பர் 2014, 04:52.24 AM GMT ]
வடபகுதி மக்களில் யாரையாவது அச்சுறுத்தி வாக்களிக்காமல் செய்யும் பட்சத்தில் தேர்தல் முழுமையாக இரத்துச் செய்யப்படும் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலிலே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இராணுவத்தினரின் அராஜக நடவடிக்கைகளால் வட பகுதி மக்கள் தேர்தலை பகிஷ்கரிக்கத் தயாராகின்றனர் என வட மாகாணத்தின் உதவி தேர்தல் ஆணையாளர்கள் எவரும் இதுவரை எனக்கு தெரியப்படுத்தவில்லை.
இராணுவம் மக்கள் வாக்களிப்பை தடுக்கும் எனவும் நான் கருதவில்லை.
எனினும் வடக்கின் நிலைமை தென்பகுதியை விட வித்தியாசமானது என்பது எங்களுக்கு தெரியும்.
வெளிநாட்டவர்கள் தென்பகுதியில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். ஆனால் வடக்கில் எனது உத்தியோகத்தர்கள் கூட படையினரிடம் அனுமதி பெறவேண்டும்.
நாட்டின் ஏனைய பகுதிகளை விட அதிகளவான இராணுவ ஆட்சி வடக்கில் காணப்படுகின்றது.
வடக்கு மக்கள் வாக்களிக்க விரும்பினால், அந்த பகுதி அரசியல்வாதிகள் அவர்களை வாக்களிப்பதை தடுக்க விரும்பாவிட்டால், வேறு எவரும் மக்களை மிரட்ட முடியாது.
வடபகுதியில் மக்களை யாராவது மிரட்டி அச்சுறுத்தி வாக்களிக்க விடாமல் செய்தனர் எனத் தெரிய வந்தால் முழுத் தேர்தலையும் இரத்துச் செய்துவிடுவேன் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmszCRcKafp6.html
21 பேர் பலி! 15 பேர் மாயம்: நாட்டில் தொடரும் மழை- பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க பதுளைக்குச் சென்றார் மகிந்த
[ ஞாயிற்றுக்கிழமை, 28 டிசெம்பர் 2014, 05:52.25 AM GMT ]
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 21 பேர் உயிரிழந்துள்ளதோடு, 15 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பத்து இலட்சத்தை தாண்டுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஊடகப் பேச்சாளர் சரத் லால்குமார குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாட்டுக்கு அருகில் நிலைகொண்டுள்ள தாழமுக்கநிலை காரணமாக மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை தொடர்ந்தும் நீடிக்கலாம் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க ஜனாதிபதி பதுளை சென்றார்
பதுளை மாவட்டத்தில் நிலச்சரிவு மற்றும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நிவாரணம் வழங்குவதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அந்த மாவட்டத்திற்கு சென்றுள்ளார்.
இன்று காலை ஜனாதிபதி அங்கு சென்றுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவிக்கின்றது.
கண்டி பிரதேசத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரசாரத்தை இரத்து செய்து விட்டு பதுளை சென்றுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவிக்கின்றது.
பதுளை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதா என்பதனை அறிந்து கொள்ளவதன் நோக்கத்துடனே ஜனாதிபதி பதுளை சென்றிருப்பதாக கூறப்படுகின்றது.
அனுராதபுரத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை சந்திக்க ஜனாதிபதி நேற்றைய தினம் அனுராதபுரம் சென்றிருந்தார்.
http://www.tamilwin.com/show-RUmszCRcKafqy.html
மட்டு.மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரான்ஸ் புங்குடுத்தீவு மக்கள் ஒன்றியம் உதவி!
[ ஞாயிற்றுக்கிழமை, 28 டிசெம்பர் 2014, 05:54.12 AM GMT ]
இவ்நிதி உதவியினை கொண்டு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனிதம்பி யோகேஸ்வரன் அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களின் தேவையை அறிந்து அவர்களுக்கான அத்தியாவசிய பொருட்களை வழங்கிவைத்தார்.
தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் காரணமாக 112 முகாங்களில் 12012 குடும்பங்களைச் சேர்ந்த 41419 பேர் அடங்குகின்றனர். அதே வேளை உறவினர் வீடுகளில் 68787 குடும்பங்களைச்சேர்ந்த 247929 பேர் தங்கி வாழ்கின்றனர்.
அரசாங்கமானது பொது இடங்களில் தஞ்சமடைந்திருப்பவர்களுக்கு மாத்திரமே சமைத்த உணவுகளை வழங்கி வருகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறக்குறைய 10000 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் முற்றுமுழுதாக வெள்ளத்தினால் நேரடியாக பாதிக்கப்பட்டிருக்கின்றர்கள்.
அதனடிப்படையில் சித்தாண்டி-01, சித்தாண்டி-02, சித்தாண்டி-3 , சித்தாண்டி-4, மாவடிவேம்பு, ஈரன்குளம், முரக்கட்டாஞ்சேனை, சந்திவெளி, கிரான் ஒருக்கன் தீவு, பொண்டுகள் சேனை, பிரம்படித்தீவு, கொம்மாதுறை, வந்தாறுமூலை, செங்கலடி, சாராவெளி போன்ற பகுதிகளில் வசிப்பவர்கள் ஆறு, குளங்களை அண்டி வாழும் நிலையில் உள்ளதனால் வெள்ளத்தாக்கத்திற்கு உடனடியாகவே பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.
இவர்கள் தற்போது சித்தாண்டி மத்தியமகாவித்தியாலயம், இராமகிருஸ்ணமிசன் வித்தியாலயம், நடராஜானந்தாஜீ கட்டடம். சித்தாண்டி -2 பொதுக்கட்டடமுகாம், முருகன்கோயில் அன்னதான கட்டடத்தில் தங்கவைக்கபட்டுள்ளார்கள்.இவர்களுக்கு வள்ளம் மூலம் சென்று அவர்களுக்கான படுக்கை விரிப்பு உட்பட பல பொருட்களையும் யோகேஸ்வரன் எம்.பி வழங்கி வைத்தார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்த ஒருவரது உடலை தோணியில் எடுத்துச்சென்று அயல் கிராமத்தில் புதைக்கவேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலையில் இன்று அம்மக்கள் இன்னல் பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.
இந்தப்பகுதிகளில் நெஞ்சுப்பகுதிக்கு மேல் நீர் நிரம்பி காணப்படுவதனாலும் மேலும் நீர்மட்டம் அதிகரித்து காணப்படுவதனாலும் தற்போதுள்ள முகாங்களை வேறு இடங்களுக்கு மாற்றவேண்டிய தேவையும் ஏற்படுள்ளது.
இவ்வாறான உதவியினை செய்த பிரான்ஸ் நாட்டில் உள்ள புங்குடுத் தீவு மக்கள் ஒன்றியத்திற்கு மட்க்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவருமான சீ.யோகேஸ்வரன் நன்றிகளை தெரிவித்ததுடன் இவ்வாறான உதவிகளை ஏனைய அமைப்புக்களும் உதவ முன்வரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
http://www.tamilwin.com/show-RUmszCRcKafqz.html
அரசின் முக்கிய பிரமுகர்கள் பலர் நாட்டை விட்டு தப்பியோட திட்டம்?
[ ஞாயிற்றுக்கிழமை, 28 டிசெம்பர் 2014, 06:07.12 AM GMT ]
அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல முக்கியஸ்தர்கள் நாட்டை விட்டு தப்பி செல்ல சகல ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும் இவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நெருங்கியவர்கள் என்றும் கூறப்படுகின்றது.
ஜனாதிபதி தேர்தலில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு தோல்வி ஏற்படும் பட்சத்தில் இவர்கள் இவ்வாறு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இந்த விடயத்தை இவர்கள் மறுத்தாலும் இந்த இரகசிய திட்டம் இவர்களின் வெளிநாட்டில் வசிக்கும் உறவினர்களுக்கு நன்கு தெரியும் என்ற அதிர்ச்சி தகவலை ஆங்கில இணையத்தளம் இன்று வெளியிட்டுள்ளது.
வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல தயாராகும் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ தோல்வியடைவார் என்பது உறுதியானதும் நாட்டில் இருந்து தப்பி செல்ல அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் சிலர் தயார் நிலையில் இருந்து வருவதாக அரசாங்கத்தின் உட்தரப்பு வட்டார தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
இவர்களில் ஜனாதிபதிக்கு நெருக்கமானவர்களும் இருப்பதாகவும் அந்த தகவல்கள் கூறியுள்ளன.
இறுதிவரை மகிந்த ராஜபக்ஷவை பெற்றி பெற செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டு வரும் இவர்கள் சட்டவிரோத செயற்பாடுகளை முன்னெடுக்கவும் தயாராகி வருகின்றனர்.
அவர்களின் சகல முயற்சிகளும் தோல்வியடையும் பட்சத்தில் மாற்று வழியாக நாட்டில் இருந்து தப்பிச் செல்வது என தீர்மானித்துள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள் எனக் கூறப்படுகிறது.
இவர்களின் இந்த தயார் நிலை குறித்து அமைச்சர்கள் அறிய முடியாத வகையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அமைச்சர்கள் இதனை அறிந்து கொண்டால், அவர்கள் பொது வேட்பாளர் பக்கம் போவது நிச்சயமாகி விடும் என்பதால், அமைச்சர்களுக்கு இந்த விடயம் மறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள இவர்கள், ஏற்படக் கூடிய நிலைமையில் தாம் மேற்கொள்ள உள்ள நடவடிக்கைகள் குறித்து வெளிநாடுகளில் உள்ள தமது உறவினர்களுக்கு தெளிவுப்படுத்தி வருவதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
http://www.tamilwin.com/show-RUmszCRcKafq0.html
Geen opmerkingen:
Een reactie posten