தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 27 december 2014

இளையோர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மைத்திரிக்கு ஆதரவு

மரணத்தை கண்டு பயப்படவில்லை!- பாட்டலி சம்பிக்க ரணவக்க
[ சனிக்கிழமை, 27 டிசெம்பர் 2014, 06:17.24 AM GMT ]
நியாயத்துக்காக போராடும் போது மரணத்துக்கு அஞ்சவில்லை என்று ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்துள்ள அவர், பொதுவேட்பாளர் தொடர்பில் அரசாங்கம் சேறு பூசும் செயல்களில் ஈடுபட்டு வருகிறது.
எனினும் எதிரணியின் செயற்பாடுகளில் அது தாக்கத்தை ஏற்படுத்தாது என்று ரணவக்க கூறினார்.
அரசாங்கம் மேற்கொண்டு வரும் சேறு பூசும் நடவடிக்கைளில் திஸ்ஸ அத்தநாயக்க, சமர்ப்பித்த ரணில் - மைத்திரிபால போலி ஆவணமும் ஒன்றாகும்.
இதேவேளை சந்திரிகாவுக்கும், சம்பந்தனுக்கும் இடையிலான உடன்பாடு மற்றும் தமக்கும் ருத்திரகுமாரனுக்கும் இடையிலான உடன்பாடு என்று பல போலி ஆவணங்களை வெளியிட அரசாங்கம் தயாராகி வருவதாக ரணவக்க குற்றம் சுமத்தினார்.
எனினும் தமது போராட்டம் தொடரும் என்று ரணவக்க தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRbKagu4.html
இளையோர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மைத்திரிக்கு ஆதரவு
[ சனிக்கிழமை, 27 டிசெம்பர் 2014, 06:36.22 AM GMT ]
இலங்கையின் இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10பேர் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவை வெளியிட்டுள்ளனர்.
“ஜனநாயகத்துக்கான இளையோர் நாடாளுமன்ற உறுப்பினர்கள்” என்ற பெயரில் அழைக்கும் குழுவினரே இந்த ஆதரவை வெளியிட்டுள்ளனர்.
இலங்கையில் இளைஞர்களுக்கு சிறிய வாய்ப்புக்களே வழங்கப்படுகின்றன.
அதில் மாற்றம் ஏற்படவேண்டும் என்று இந்த இளைஞர்கள் கோரியுள்ளனர்.
மஹிந்த சிந்தனையின் கீழ் மேற்கொள்ளப்படும் ஊழல்கள் காரணமாக ஒரு சிலரே நன்மையடைவதாக இளையோர் நாடாளுமன்ற உறுப்பினரான ஹெலஸ்ரீ கனேகொட தெரிவித்துள்ளார்.
தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் தலைவரை அரசாங்கம் தமது பிரசாரத்துக்கு பயன்படுத்துவதாக அவர் குற்றம் சுமத்;தியுள்ளார்.
தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் தலைவரே நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் நீலப்படையின் செயலாளராகவும் செயற்படுகிறார்.
எனில் தேசிய இளைஞர் சேவை மன்றத்துக்கான பணம் எங்கே போகிறது என்று ஊகித்துக்கொள்ளலாம் என்றும் கனேகொட சுட்டிக்காட்டினார்.
http://www.tamilwin.com/show-RUmszCRbKagu5.html

Geen opmerkingen:

Een reactie posten