[ புதன்கிழமை, 31 டிசெம்பர் 2014, 07:06.43 AM GMT ]
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த ஏப்ரல் மாதம் தொடக்கம் வடமாகாண சபை உறுப்பினர் மூவருக்கு வழங்கப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு ஜூன் மாதத்துடன் மீளப்பெறப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்த உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் பாதுகாப்பும் வாபஸ் பெறப்பட்டது.
இந்நிலையில், கடந்த 23ஆம் திகதி வடமாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தனுக்கு இனந்தெரியாத நபர்கள் துன்னாலை சந்தியில் வைத்து கொலை அச்சுறுத்தல் விடுத்திருந்தனர்.
இது தொடர்பாக சுகிர்தன் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ததுடன், எங்களுக்கும் தெரிவித்திருந்தார். வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் கொழும்பில் வைத்து இனந்தெரியாத நபர்கள் பின்தொடர்ந்தனர்.
இந்த சம்பவங்களின் அடிப்படையிலும், கடந்த 16ஆம் திகதி யாழ். மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் நடந்த விரும்பத்தகாத சம்பவத்தின் அடிப்படையிலும் வடமாகாண சபையின் சகல உறுப்பினர்களுக்கும் அவர்கள் கோரும் பட்சத்தில் பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszCQVKbnr3.html
மக்களுக்கு பாதிப்பின்றி போர் புரிந்தோம்: பொன்சேகா - பொய்கூற வேண்டாம்! ஓங்கி ஒலித்த மக்கள் குரல்கள்
[ புதன்கிழமை, 31 டிசெம்பர் 2014, 06:37.13 AM GMT ]
யாழ். நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற, ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பொன்சேகா இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், '
இந்த அரசாங்கம் நிராயுதபாணிகளை ஆயுதங்களை கொண்டு அச்சுறுத்துகின்றது.
நாங்கள் ஜனநாயக ரீதியாக போராட்டங்களை நடத்தும் போது, பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தி சிறைகளில் அடைக்கின்றனர். என்னையும் அவ்வாறே சிறையில் அடைத்தார்கள்.
அதிவேக நெடுஞ்சாலைகள் அமைப்பது மாத்திரம் நாட்டின் அபிவிருத்தி இல்லை.
அதிவேக நெடுஞ்சாலை அமைப்பதற்கு 1 கிலோ மீற்றருக்கு 5 இலட்சம் ரூபாய் தரகு பணமும் (கொமிஷன்) புகையிரத பாதைகள் அமைப்பதற்கு 1 கிலோ மீற்றருக்கு 280 லட்சம் ரூபாய் தரகு பணமும் (கொமிஷன்) வாங்கினார்கள்.
நாட்டு மக்கள் அத்தியாவசிய தேவைகளான உணவு, உடை, வீடு என்பவற்றையே கேட்கின்றார்கள். அவற்றையே நாம் இந்த மக்களுக்கு வழங்கவுள்ளோம்.
இனவாதம், மதவாதம் பேசி மக்களை வெறுப்படைய வைக்காது, நாட்டு மக்கள் அனைவருக்கும் எமது அரசாங்கம் மீது நம்பிக்கைக்குரியவர்கள் ஆக்குவோம்.
நீதியான ஜனநாயகமான நாட்டை உருவாக்குவோம் எனக் கூறினார். '
யுத்தம் புரிந்த போது மக்கள் எவருக்கும் எந்தவிதமான பாதிப்பும் இல்லாமலேயே நாங்கள் யுத்தம் புரிந்தோம் என பொன்சேகா உரையாற்றிய போது, பொதுமக்கள் கூட்டத்திலிருந்து பொய் சொல்லவேண்டாம் என்று பல குரல்கள் ஒலித்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszCQVKbnr0.html
Geen opmerkingen:
Een reactie posten