தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 26 december 2014

தமிழன் தன்மானத்துடன் வாழ வேண்டுமானால் மஹிந்தவுக்கே வாக்களிக்க வேண்டும்: விநாயகமூர்த்தி முரளிதரன்

அரச ஊடகங்கள் பக்கச்சார்பாக செயற்படுகின்றன: ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச
[ வெள்ளிக்கிழமை, 26 டிசெம்பர் 2014, 02:44.03 PM GMT ]
அரச ஊடகங்களின் பக்கசார்பு குறித்து எங்கள் தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சட்டத்தரணி நாமல் ராஜபக்ச, தேர்தல்கள் ஆணையாளரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
அரச ஊடகங்கள், ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு பிரசாரத்தை மேற்கொள்கின்றன.
தேர்தல் சட்டப்படி ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை ஊடகங்கள் பிரசாரப்படுத்தக்கூடாது. எனினும் ஒரு வேட்பாளரை மாத்திரம் அரச ஊடகங்கள் பிரசித்தப்படுத்துவதாக நாமல் ராஜபக்ச தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
1988ம் ஆண்டு 16ம் இலக்கச் சட்டம், 1981ம் ஆண்டு 15ம் இலக்க ஜனாதிபதி தெரிவு செய்யும் சட்டத்தின் 117ம் சரத்து ஆகியவற்றில் அரச ஊடகங்களின் செயற்பாடுகள் குறித்து விதந்துரைக்கப்பட்டுள்ளது.
எந்தவொரு வகையிலும் குறிப்பிட்ட ஓர் வேட்பாளரை மையப்படுத்தி அரச ஊடகங்கள் பிரச்சாரம் செய்யக்கூடாது.
அரச தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகள் ஜனாதிபதி தேர்தலின் போது பக்கச்சார்பாக செயற்படக் கூடாது என அரசியல் அமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விடயத்தில் தேர்தல்கள் ஆணையாளர் தலையிட்டு அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் வாய்ப்பு வழங்க அரச ஊடகங்களுக்கு உத்தரவிட வேண்டும் என்று நாமல் ராஜபக்ச கோரியுள்ளார்.
அத்துடன் தகுதி வாய்ந்த அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் நாமல் ராஜபக்ச கோரியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRaKagr3.html

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மக்களுக்கு சுவிஸ் எழுகை அமைப்பு உதவி
[ வெள்ளிக்கிழமை, 26 டிசெம்பர் 2014, 03:17.53 PM GMT ]
பெருமழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பா.உறுப்பினர் சி.சிறீதரனின் வேண்டுகோளுக்கு இணங்க, புலம் பெயர் உறவுகளின் அமைப்புக்களில் ஒன்றான சுவிஸ் எழுகை அமைப்பு உலர் உணவுப் பொதிகளை வழங்கியுள்ளது.
இன்று கிளிநொச்சி யூனியன்குளம், புதியகுடியிருப்பு மற்றும் கோணாவில் கிழக்கு போன்றவற்றில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட மக்களுக்கு இன்று சுவிஸ் எழுகை அமைப்பின் உலர் உணவு பொதிகளை பா.உறுப்பினர் சி.சிறீதரன் நேரடியாக சென்று மக்களிடம் கையளித்தார்.
இந்த உலர் உணவுப் பொதிகளில் அரிசி, மா, சீனி, தேயிலை மற்றும் பருப்பு போன்;ற பொருட்கள் உள்ளடங்குகின்றன.
பா.உறுப்பினரோடு கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் நாவை.குகராசா, மாந்தை கிழக்கு பிரதேச சபையின் உப தவிசாளர் செந்தூரன்,  கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்களான சுப்பையா, தயாபரன், அக்கராயன் பிரதேச கட்சி அமைப்பாளர் கரன், வடமராட்சி கிழக்கு கட்சி அமைப்பாளர் சூரியகாந் ஆகியோர் இந்த உலர் உணவுப் பொதிகளை மக்களுக்கு விநியோகிப்பதில் ஈடுபட்டுள்ளனர்.
மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் பொதிகளை பெற்றுக்கொண்டு சுவிஸ் எழுகை அமைப்புக்கும் அதன் நிர்வாகிகள் உறவுகளுக்கு தங்கள் நன்றிகளை தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmszCRaKagr4.html
சுனாமியின் போது ஏற்பட்ட கட்சிகளின் ஒற்றுமை பொதுவேட்பாளர் விடயத்திலும் ஏற்பட்டுள்ளது: சந்திரிக்கா
[ வெள்ளிக்கிழமை, 26 டிசெம்பர் 2014, 03:20.14 PM GMT ]
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெறுவார் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
சுனாமியின் 10ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று கொழும்பு காக்கைத்தீவில் இடம்பெற்ற நிகழ்வில் பங்கேற்றபோதே சந்திரிக்கா இந்த நம்பிக்கையை வெளியிட்டார்.
பொதுவேட்பாளரின் வெற்றிக்கு பின்னால் பல கட்சிகள் செயற்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
2004 ஆம் ஆண்டு சுனாமி ஏற்பட்டபோது இலங்கையின் அனைத்துக்கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட்டன.
இதைப்போன்றே இன்று பொதுவேட்பாளரின் பின்னால் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன என்று சந்திரிக்கா கூறினார்.
சுனாமியின் போது “ஹெல்பிங் ஹம்பாந்தோட்டை” நிதியம் தொடர்பில் சர்ச்சைக்குரிய வழக்கில் நிதியத்துக்கு சார்பாக தீர்ப்பு வழங்கியமை தமது பிழையென்று முன்னாள் பிரதமநீதியரசர் சரன் என் சில்வா ஏற்றுக்கொண்டமையையும் சந்திரிக்கா சுட்டிக்காட்டினார்.
http://www.tamilwin.com/show-RUmszCRaKagr5.html

தமிழன் தன்மானத்துடன் வாழ வேண்டுமானால் மஹிந்தவுக்கே வாக்களிக்க வேண்டும்: விநாயகமூர்த்தி முரளிதரன்
[ வெள்ளிக்கிழமை, 26 டிசெம்பர் 2014, 03:27.06 PM GMT ]
தமிழன் தன்மானத்துடன் வாழ வேண்டுமானால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களிக்க வேண்டும் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். 
தமிழ் மக்கள் இம்முறை யாருடைய பேச்சையும் கேட்காது தமது பிள்ளைகளின் எதிர்காலம் பற்றியும் தமிழினத்தின் எதிர்காலம் பற்றியும் மாவட்டத்தின் அபிவிருத்தி பற்றியும் சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும். அபிவிருத்திப் பணிகள் தொடர்ச்சியாக நடக்க வேண்டுமானால் ஜனாதிபதி மஹிந்தவுக்கு வாக்களியுங்கள் என அவர்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட தும்பங்கேணி கொச்சிபாமில் பல்நோக்கு மண்டபம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ச அவர்களே வெற்றி பெறப்போகின்றார். அதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களை சிங்கள மக்களின் மனதிலிருந்து எவரும் நீக்க முடியாது. அவர் யுத்தத்தை நிறுத்தி நாட்டில் அமைதியை ஏற்படுத்திய பெருமைக்குரியவராவார். இன்று நாங்கள் நிம்மதியாக வாழ்கின்றோம்.
யுத்தமானது தொடர்ந்திருந்தால் நாம் இன்னும் அழிவுகளையே சந்தித்திருப்போம். யுத்தம் நிறைவுற்றமையால் நாம் பல உயிர்களை காப்பாற்றியிருக்கின்றோம். யுத்தத்திலிருந்து தப்பியவர்கள் இன்று தங்களுடைய கிராமத்தை வளர்ப்பதற்கு தலைமைப்பொறுப்பேற்று செயற்பட்டு வருகின்றனர். அவர்களை நாம் பாராட்ட வேண்டும். ஆகவே தேர்தலில் வெல்லப்போகின்றவர் யார் என்பது எமக்குத் தெரியும். அதை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த எவராவது யுத்தத்தில் ஈடுபட்டிருக்கின்றனரா? அவர்களுடைய பிள்ளைகளோ அல்லது உறவினர்களோ யுத்தத்தில் மடிந்திருக்கின்றனரா? நிச்சயமாக இல்லை. அவர்களுக்கு எமது உணர்வுகளை விளங்கிக்கொள்ள முடியாது. அவர்கள் தங்களது கதிரைகளை தக்கவைத்துக் கொள்வதற்காகவும் நிதிகளைப் பெற்று தங்களை வளர்த்துக் கொள்வதற்காகவும் பலவற்றை உங்களுக்குச் சொல்வார்கள். அதை நம்பி நீங்கள் வாக்களித்தால் உங்களுக்கு எந்தப் பயனும் கிடைக்கப்போவதில்லை.
இன்று மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்திருப்பவை இனத்துவேஷம் நிறைந்த கட்சிகளாகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவர்களுக்காக உங்களை வாக்களிக்கச் சொல்லப்போகின்றது? கொழும்பிலிருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரான சுமந்திரன் அவர்கள் சந்திரிகாவிடம் இருபது கோடி ரூபா பணத்தை பெற்றுக்கொண்டு மைத்திரிக்கு ஆதரவளிக்கச் சொல்லியிருக்கின்றார். அவருக்கு வடக்கு கிழக்கை பற்றி எதுவுமே தெரியாது. தமிழில் பெயர் மட்டும் தான் அவருக்குள்ளது.
மட்டக்களப்பில் வாழ்கின்ற மட்டக்களப்பு மக்களின் துன்பங்களை நன்கறிந்த மட்டக்களப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் உங்களுக்கு என்ன சொல்லப்போகினறார்கள். இனத்துவேஷிகளுக்கு வாக்களிக்கச் சொல்லப்போகின்றார்களா? மைத்திரி வெளியிட்டிருக்கும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சிறுபான்மையினத்தைப் பற்றி ஒரு வசனம் கூட உள்ளடக்கப்படவில்லை. அவர் சிறுபான்மையினத்தை கணக்கில் எடுக்கவேயில்லை. தங்களுடைய பதவிகளுக்காகவுத் கொள்கைகளுக்காகவும் நூறு நாட்களில் மாற்றத்தை கொண்டு வரப்போவதாகக்கூறி போலியான வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். நூறு நாட்களில் அனைத்தையும் எப்படி மாற்ற முடியும் என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும்.
இரு தடவைகள் ஜனாதிபதியாக பதவி வகித்த மகிந்த ராஜபக்ச அவர்கள் பாரபட்சமில்லாமல் இனத்துவேஷமில்லாமல் எங்கள் தமிழ் மொழியையும் கற்றுக்கொண்டு எங்களுக்காகவும் பணியாற்றி வருகின்ற ஒருவராவார். தமிழ் மக்கள் இம்முறை யாருடைய பேச்சையும் கேட்காது தமது பிள்ளைகளின் எதிர்காலம் பற்றியும் தமிழினத்தின் எதிர்காலம் பற்றியும் மாவட்டத்தின் அபிவிருத்தி பற்றியும் சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும். அபிவிருத்திப் பணிகள் தொடர்ச்சியாக நடக்கவேண்டுமானால் தமிழன் தன்மானத்துடன் வாழவேண்டுமானால் மகிந்தவுக்கே வாக்களிக்க வேண்டும்.
இன்று உங்களுடைய பிள்ளைகள் கைது, கடத்தல், காணாமல்போதல் போன்ற பிரச்சனைகளின்றி நிம்மதியாக வாழ்கின்றனர். நாங்கள் அரசாங்கத்துடன் இணைந்திருந்து இவற்றையெல்லாம் நிறுத்தியிருக்கின்றோம். அபிவிருத்திப்பணிகளை மேற்கொண்டிருக்கின்றோம். நாங்கள் எங்களுடைய தேவைகளை உரிமையுடன் கேட்கும்பொழுது எந்தத் தடையுமின்றி செய்து தருபவர் தான் ஜனாதிபதி மஹிந்த. அப்படிப்பட்ட நன்கு பரீட்சயமான ஒருவரை நாங்கள் ஜனாதிபதியாக தெரிவு செய்வோமா அல்லது பரீட்சயமல்லாத எதுவுமே தெரியாத ஒருவரை ஆதரிப்போமா என்பதை சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். இந்தத் தேர்தல் தமிழர்களுக்கு கிடைத்துள்ள அரிய சநதர்ப்பமாகும். ஏனென்றால் அரசுடன் இணைந்திருந்த பல முஸ்லிம் தலைவர்கள் இன்று அரசுக்கு துரோகம் இழைத்துவிட்டு எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டுள்ளனர்.
முன்னரெல்லாம் முஸ்லிம் தலைவர்கள் வெல்கின்ற அரசாங்கத்தின் பக்கமே நின்றார்கள். அவர்களின் எதிர்ப்பினால் தமிழர்களுக்கான அபிவிருத்திகள் இல்லாமல் இருந்தன. ஆனால் இன்று பாரிய அபிவிருத்திகளை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. தமிழர்களை வளர்த்துக்கொள்வதற்கும் தமிழ்த் தலைவர்களை உருவாக்கிக்கொள்வதற்கும் நல்லதொரு வாய்ப்பு ஏற்பட்டிருக்கின்றது.
தமிழர்கள் அணி திரண்டு ஜனாதிபதிக்கு வாக்களித்தோமானால் பெரிதளவிலான மாற்றத்தை கொண்டுவர முடியும். அரசிலிருந்து விலகி எதிர்க்கட்சிக்கு செல்பவர்களைப் பற்றியெல்லாம் நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. அரசாங்கம் எமக்கு நல்லதைச்செய்யும்போது நாமும் அதற்கு நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும். மீள்குடியேற்ற அமைச்சராக முன்னர் பதவி வகித்த றிசாட் பதியுதீன் அவர்கள் எந்த மீள்குடியேற்றத்தையும் செய்யவில்லை. அவரும் இனத்துவேஷமுடைய ஒருவராவார். வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற பகுதிகளில் தமிழர்களை கொடுமைப்படுத்தியவர்களில் அவரும் ஒருவராவார். அவர் அரசிலிருந்து பிரிந்து சென்றது நல்லதே.
http://www.tamilwin.com/show-RUmszCRaKagr6.html

Geen opmerkingen:

Een reactie posten