தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 28 december 2014

350 தொன் தங்கத்தை விற்று ஓடத் தயாராகும் ராஜபக்ச குடும்பம்….

தயான் ஜயதிலக்க பல்ரி…

சில தினங்களுக்கு முன்னர் வரையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சியை மிகக் கடுமையாக விமர்சனம் செய்து வந்த தயான் ஜயதிலக்க, அரசாங்க தொலைக்காட்சிகளில் தோன்றி, ஜனாதிபதிக்கு ஆதரவான பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளார்.
தயான் ஜயதிலக்கவின் இந்த திடீர் மாற்றம் புத்திஜீவிகள் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல் காரணங்களுக்காக அரசியல்வாதிகள் கட்சி தாவுவதனைப் போன்று தயான் ஜயதிலக்க, திடீரென தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளதாக விசனம் வெளியிட்டுள்ளனர்.
இன்றைய தினம் முற்பகல் தேசிய தொலைக்காட்சியில் நடைபெற்ற அரசியல் நிகழ்ச்சி ஒன்றில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் கைப்பொம்மையாக செயற்பட்டு வருகின்றார் என குற்றம் சுமத்தியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கும், யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படுவதற்கும் ராஜபக்ஸ அரசாங்கத்தின் வெளிவிவகார கொள்கைகளின் பலவீனமும் அரசியல் மயப்படுத்தலுமே காரணம் என தயான் ஜயதிலக்க கூறி வந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/91950.html

கண்டியில் மகிந்தரின் கூட்டம் ரத்து…..

அதற்கான ஆயத்தங்களும் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும், திடீரென கண்டி மாவட்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களை ரத்து செய்த ஜனாதிபதி, பதுளைக்கு விரைந்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்றைய தினம் முற்பகல் பதுளைக்கு விஜயம் செய்து சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்டதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதிக்கப்பட்டவர்களின் நிலைமைகளை பார்வையிட்டு தேவையான உதவிகளை வழங்குவதே ஜனாதிபதியின் நோக்கம் என தெரிவிக்கப்படுகிறது. நேற்றைய தினம் அனுராதபுரத்தில் மழை வெள்ளம்காரணமாக பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஜனாதிபதி நிவாரணங்களை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/91953.html

350 தொன் தங்கத்தை விற்று ஓடத் தயாராகும் ராஜபக்ச குடும்பம்….

நாட்டிலிருந்து ராஜபக்ச குடும்பம் திருடியுள்ள 350 தொன் தங்கத்தை ஜப்பானிய மில்லியேனேரான Keiji Matsumura என்பவருகு விற்பனை செய்துள்ளது. Japuga Holdings Private Ltd என்ற நிறுவனத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் அந்த வர்த்தகர் 350 தொன் தங்கத்தை வாங்கியுள்ளார்.
இந்த வியாபாரத்திற்கு ராஜகோபால் கார்த்தீபன் என்ற தமிழர் தரகராகச் செயற்பட்டுள்ளார். சுவிஸ் நாட்டில் வசிக்கும் கார்த்தீபனின் மூத்த சகோதரர் அவரை தனக்குச் சார்பாக தரகு நடவடிக்கையில் ஈடுபடுத்தியுள்ளார்.
கொழும்புத் துறைமுகத்திலிருந்து கப்பல்கள் ஊடாக 16 கொள்கலன்களில் தங்கம் கடத்தப்பட்டுள்ளது. கொழும்புத் துறைமுகத்தின் தலைவர் பந்து விக்கிரம பதிவு செய்யப்படாமல் பொருட்கள் கடத்தப்பட்டதைக் கண்டுள்ளார். ஒரு கிலோ தங்கத்திற்கான விலையாக 38000.00 அமெரிக்க டொலர்கள் ராஜபக்ச குடும்பம் பெற்றுக்கொண்டது. மொத்தப்பணமாக 13,300 பெற்றுக்கொண்டனர். HSBC வங்கிக்குத் தெரிந்தே இப்பணப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது.
திருப்பதி கோவிலுக்கு ராஜபக்ச சென்றமை வழிபாட்டிற்காக அல்ல. மாறாக, பணம் மற்றும் தங்கப் பரிமாற்றத்தை கவனித்துக்கொள்வதற்காக! திருப்பதி ஐயப்பன் கோவில் சட்டவிரோதப் பணம் மற்றும் தங்கம் போன்றவற்றின் கடத்தல் உலகத்தில் பெயர்பெற்ற இடம்.
இலங்கை ஆளும்வர்க்க மாபியாக்களின் கடத்தல் மையமாகி நீண்டகாலமாக்விட்டது. உறுதிப்படுத்த வேறு ஆதாரங்கள் கிடைக்கவில்லை எனினும் இங்கு எதுவும் சாத்தியமானதே.
மக்களிடமிருந்தும், ஆளும் வர்க்கத்தின் இரண்டாவது மட்டங்களிடமிருந்தும் அன்னியப்பட்டுப் போன ராஜபக்ச குடும்பம். தொகுதி மட்டத்தில் நம்பிக்கைக்குரிய எவரையும் கொண்டிருக்கவில்லை. தனக்கு நம்பிக்கையானவர்களே இறுதியில் காலை வாரிவிடலாம் என்ற அச்சம் பாசிஸ்டுகளிடம் நிலைகொண்டுள்ளது.
எல்லா பாசிஸ்டுக்களும் மக்களிலிருந்கு அன்னியமாகி விடுவதைப் போன்றே ராஜபக்ச குடும்பமும் களத்தொடர்புகளிலிருந்து துண்டிக்கப்பட்டு நாளை குறித்த அச்சத்தில் உலாவருகிறது. மறுபுறத்தில் இதுவரை ராஜபக்சவுடன் கூடிக்குலாவிய சிங்கள பௌத்த பெருந்தேசிய வியாபாரிகள் ஜனநாயகத்தை மீட்கப்போவதாக எதிரணியை ஆரம்பித்துள்ளனர். சிங்கள பௌத்த அடிப்படைவாதிகள், இனப்படுகொலையில் பங்காற்றியவர்கள், ஏகாதிபத்திய அடியாட்கள் போன்ற அனைவரதும் கூட்டான எதிரணி ராஜபக்ச குடும்பம் உருவாக்கியுள்ள சுரண்டல் வெளியை நிர்வகிப்பதற்காக காத்திருக்கின்றது.
http://www.jvpnews.com/srilanka/91956.html

Geen opmerkingen:

Een reactie posten