தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 31 december 2014

ஜனாதிபதி தேர்தலில் இரண்டு பல்கலைக்கழகங்களின் முரண்பட்ட ஆய்வுகள்!

பத்து நாடுகளின் இலங்கைப் பிரஜைகளுக்கு மட்டும் இரட்டைக் குடியுரிமை வழங்கத் தீர்மானம்
[ புதன்கிழமை, 31 டிசெம்பர் 2014, 04:41.54 PM GMT ]
பத்து நாடுகளின் இலங்கைப் பிரஜைகளுக்கு மட்டும் இரட்டைக் குடியுரிமை வழங்க பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.
பத்து நாடுகளில் குடியுரிமை பெற்றுக் கொண்டுள்ள இலங்கையர்கள், இலங்கையில் குடியுரிமை பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்க முடியும்.
வெளிநாடுகளில் நிரந்தரக் குடியுரிமை பெற்றுக்கொண்டு ஐந்து ஆண்டுகள் பின்னரே கடந்த காலங்களில் இலங்கைக் குடியுரிமைக்காக விண்ணப்பிக்க முடியும்.
எனினும், எதிர்வரும் காலங்களில் இலகுவான முறையில் இரட்டைக் குடியுரிமை பெற்றுக் கொள்ள முடியும் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்சவின் அறிவுறுத்தல்களுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட குழுவொன்றினால் நேர்முகம் காணப்பட்டதன் பின்னர் விண்ணப்பதாரிக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட உள்ளது.
அமெரிக்கா, கனடா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, நோர்வே, சுவீடன் உள்ளிட்ட பத்து நாடுகளில் நிரந்தரமாக வதியும் இலங்கையர்களுக்கு இவ்வாறு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட உள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszCQVKbnvy.html
ஜனாதிபதி தேர்தலில் இரண்டு பல்கலைக்கழகங்களின் முரண்பட்ட ஆய்வுகள்
[ புதன்கிழமை, 31 டிசெம்பர் 2014, 05:01.23 PM GMT ]
கொழும்பு பல்கலைக்கழகம் நடத்திய கருத்துக்கணிப்பில் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன 53 வீத வாக்குகளை பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 27ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட இந்த அறிக்கையின்படி சிங்களவர்களின் வாக்கு வங்கி மற்றும் தமிழ், முஸ்லிம் வாக்காளர்களின் எதிர்ப்பார்க்கப்பட்ட வாக்குகளின் சரிபாதியை இரண்டு வேட்பாளர்களுக்கு பிரித்துப்பார்க்கப்பட்டபோதே மைத்திரிக்கான 53 வீத வாக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி மஹிந்த ராஜபக்சவை காட்டிலும் மைத்திரிபால 2 இலட்சம் வாக்குகளை அதிகமாக பெறுவார் என்று கணிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை 2010ஆம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளித்த 28 வீத மக்கள் இந்தமுறை மைத்திரிபாலவுக்கு வாக்களிப்பர். அத்துடன் மஹிந்தவுக்கு 2010இல் வாக்களித்த 11 வீதத்தினர் யாருக்கு வாக்களிப்பது என்று தீhமானிக்கவில்லை.
இதற்கிடையில் முதல் தடவையாக வாக்களிக்கும் தகுதிப்பெற்றோரின் 28 வீதத்தினர் மஹிந்தவுக்கும் 33 வீதத்தினர் மைத்திரிக்கும் வாக்களிப்பர்.
15வீதத்தினர் இன்னும் யாருக்கு வாக்களிப்பது என்று தீர்மானிக்கவில்லை.
இந்த ஆய்வை கலாநிதி லலித்ஸ்ரீ குணருவன் மற்றும் கலாநிதி டி எஸ் ஜெயவீர ஆகியோர் மேற்கொண்டனர்.
இது இவ்வாறிருக்க, களனி பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி மஹிந்த ராஜபக்ச 53வீத வாக்குகளையும மைத்திரிபால 44 வீத வாக்குகளையும் பெறுவர் என்று தெரியவந்துள்ளது.
களனி பல்கலைக்கழகத்தின் தொலைத் தொடர்புதுறை தலைவர் பேராசிரியர் ரொஹான் டச்மன் பியதாஸ இந்த ஆய்வை இரண்டு கட்டங்களாக மேற்கொண்டுள்ளார்.
தேர்தல் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படும் முன்னரும் பின்னரும் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதன்போது சுமார் ஐயாயிரம்பேரின் கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன.
இதில், 31 வீத பெண்கள் மஹிந்த ராஜபக்சவுக்கும் 17வீதத்தினர் மைத்திhபாலவுக்கும் வாக்களிப்பர் என்று தெரியவந்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszCQVKbnv0.html

Geen opmerkingen:

Een reactie posten