தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 30 december 2014

மானமுள்ள ஒரு மறத்தமிழனும் இருவருக்கும் வாக்களிக்க மாட்டார்கள் – அனந்தி சசிதரன்

யாழில் புலிகளின் தலைவருக்கு கைதட்டல்! அதிர்ச்சி அடைந்த சந்திரிகா…

யாழ்ப்பாணத்தின் முத்திரை சந்தியிலுள்ள கேணல் கிட்டு பூங்காவினில் இன்று நடைபெற்ற பிரச்சாரக்கூட்டத்தினில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனிற்கும் தனக்குமிடையேயான சமாதான பேச்சு பற்றி பிரஸ்தாபித்திருந்தார். அவ்வேளையில் பிரபாகரன் பெயரைச் சொல்லவே திரண்டிருந்த மக்கள் ஆரவாரித்தனர்.
இதனால் அதிர்ச்சிக்குள்ளான சந்திரிகா சிறிது நேரம் பேச்சை தொடர முடியாது திணறி பின்னர் பின் தொடர்ந்தார்.
அடுத்து பேசிய முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத்பொன்சேகா தனது உரையில் தான் மனச்சாட்சி படி யுத்தத்தை நடத்தியதாகச் சிங்களத்தில் பேச மொழி பெயர்த்தவரோ உயிர் இழப்புக்கள் இன்றி யுத்தத்தை நடத்தியதாக மொழி பெயர்த்தார். இதனால் ஆர்ப்பரித்த மக்கள் இன அழிப்பு கொலைகள் நடந்ததாக கூக்குரலிட்டனர்.


தொடர்ந்து பேசிய ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரி தனது உரையில் தான் மஹிந்த கட்டியுள்ள மாளிகைகளில் இருக்க மாட்டேனென கூற அதற்கும் மக்களிடமிருந்து கரகோசம் எழுந்தது. அடிக்கடி யாழ்ப்பாணம் வந்தால் மக்களிற்கு உங்களை நன்றாக பிடிக்குமென குரல்கள் எழுந்தன.
Unp-01Unp-02Unp-03Unp-04Unp-05Unp-06
http://www.jvpnews.com/srilanka/92235.html

யாழில் இனப்பிரச்சினை பற்றியோ வாய் திறக்க மறுத்தார் மைத்திரி!!

அதே வேளை தமக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியுள்ள கூட்டமைப்பிற்கு நன்றி தெரிவித்த மைத்திரி எனினும் கூட்டமைப்புடன் எழுத்து மூலமாகவோ வாய் மொழி மூலமாகவோ எந்தவொரு உறுதி மொழியினையும் தான் வழங்கியிருக்கவில்லையெனவும் கூட்டமைப்பும் அவ்வாறு எதனையும் கோரியிருக்கவுமில்லையெனவும் அவர் தெரிவித்தார்.
பொதுஜன ஜக்கிய முன்னணியினருக்கு பிடி கொடுத்துவிடக்கூடாதென்பதில் கூடிய முனைப்பாக இருந்த மைத்திரி நாடாளாவிய ரீதியில் குடும்ப அரசியலால் மக்கள் படும் துன்பங்களை பற்றியே பேசியிருந்தார்.
முன்னதாக வவுனியா வைரவர் புளியங்குளத்திலுள்ள விளையாட்டு மைதானத்தில் இன்று 11.30 க்கு அவர்களது பிரச்சாரம் ஆரம்பமாகியிருந்தது. ரிஷாத் பதியுதீன் தலைமையில் இடம்பெற்ற இந்தத்தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பொது எதிரணியின் முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
தொடர்ந்து மன்னாரில் பொது எதிரணியின் ஜனாதிபதி தேர்தல் பிரசாரக் கூட்டம் மன்னார் தனியார் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இதன்போது எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்களான ரிஷாத் பதியுதீன், ரவி கருணாநாயக, ராஜித சேனாரத்தின ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் மற்றும் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து யாழ்ப்பாணத்தின் முத்திரை சந்தியிலுள்ள கேணல் கிட்டு பூங்காவினில் நடைபெற்ற பிரச்சாரக்கூட்டத்தினில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா மற்றும் இராணுவ தளபதி ஜெனரல் சரத்பொன்சேகா ஆகியவர்களும் இணைந்து கொண்டிருந்தனர்.
சுமார் நாலாயிரத்திற்கும் அதிகமான மக்கள் திரண்டிருந்தனர். குறிப்பாக கூட்டமைப்பினர் மேடையேறாத பிரச்சார கூட்டத்தினில் மைத்திரி தரப்பின் கருத்தை அறிந்து கொள்ளவே மக்கள் கூடிய அளவினில் குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Unp-01Unp-02Unp-03Unp-04Unp-05Unp-06
http://www.jvpnews.com/srilanka/92231.html

மானமுள்ள ஒரு மறத்தமிழனும் இருவருக்கும் வாக்களிக்க மாட்டார்கள் – அனந்தி சசிதரன்

வடமாகாண சபையின் கூட்டமைப்பு உறுப்பினராகிய அனந்தி சசிதரன் இந்தத் தேர்தலைப் புறக்கணிக்கும் வகையில் தான் வாக்களிக்கப் போவதில்லை என்றும் அவ்வாறு வாக்களிப்பது மனச்சாட்சிக்கு விரோதமான செயல் என்று தெரிவித்துள்ளார் .
வடமாகாண சபைக்கான தேர்தலில் தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை கொள்கைக்கு அமைவாகவே தான் போட்டியிட்டதாகவும் அதற்காகவே மக்கள் தன்னை ஆதரித்து வாக்களித்ததாகவும் அவர் கூறுகிறார்.
இந்நிலையில் அந்த நிலைப்பாட்டுக்கு முற்றிலும் முரண்பட்ட விரோதமான ஒரு கொள்கையைக் கொண்ட ஒருவருக்கு எவ்வாறு வாக்களிப்பது, மக்களை அவருக்கு வாக்களிக்குமாறு எவ்வாறு கேட்க முடியும் என்று கேள்வி எழுப்புகிறார் வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவு தனக்கு மிகுந்த ஏமாற்றம் அளித்துள்ளது என்றும் மானமுள்ள ஒரு மறத்தமிழனும் இருவருக்கும் வாக்களிக்க மாட்டார்கள் என கூறுயுள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/92228.html

Geen opmerkingen:

Een reactie posten