தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 29 december 2014

லயன் வாழ்கைக்கும், வீட்டு பிரச்சினைக்கும் தீர்வு காண்பேன்: மஹிந்த - ராஜபக்ஷ 9ம் திகதி தீர்வு காண்பார்: தொண்டமான்

வாக்குகளை கவரும் வகையில் தேர்தல் விதிகளை மீறி அரசு நியமனங்கள் வழங்க நடவடிக்கை!
[ திங்கட்கிழமை, 29 டிசெம்பர் 2014, 04:25.47 AM GMT ]
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுமக்களின் வாக்குகளை கவரும் வகையில் அரச துறையில் தொழில் நியமனங்களை வழங்கி பொதுமக்களின் வாக்குகளை கவர அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
தேர்தல் சட்டதிட்டங்களை மீறி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்புக்கு ஓரிரு நாட்களுக்கு முன்னதாக அரசாங்கத்தின் பல்வேறு துறைகள் மற்றும் திணைக்களங்களில் காணப்படும் வெற்றிடங்களுக்கு தற்காலிக அடிப்படையில் நியமனங்களை வழங்க இதன்போது திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் கண்டி மாநகர சபையில் காணப்படும் 300 வெற்றிடங்களுக்கு எதிர்வரும் ஜனவரி 01ம் திகதி தற்காலிக அடிப்படையில் நியமனங்கள் வழங்கப்படவுள்ளது.
மாநகர ஆணையாளர் சந்தன தென்னக்கோன் ஊடாக இவற்றை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கண்டி மேயரின் தலைமையில் நகர மண்டபத்தில் நடைபெறும் வைபவமொன்றில் இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmszCRdKafw5.html

பொத்துவில் பிரதேசத்தில் ஹக்கீமுக்கு மாபெரும் வரவேற்பு: மைத்திரியும் பங்கேற்பு
[ திங்கட்கிழமை, 29 டிசெம்பர் 2014, 05:49.27 AM GMT ]
அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பிரதேசத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு மாபெரும் வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்கும் வகையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் நேற்று அரசாங்கத்திற்கான தனது ஆதரவை விலக்கிக் கொண்டது.
இதனையடுத்து அமைச்சுப் பதவியைத் துறந்த ஹக்கீம் உடனடியாக கிழக்கு மாகாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டார்.
அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மு.கா. தலைவர் ஹக்கீம் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கான ஆதரவளிக்கும் வகையில் கலந்து கொண்டார்.
மைத்திரிபாலவின் மேடையில் முஸ்லிம் காங்கிரஸ் ஏறிய முதலாவது நிகழ்வாக அது அமைந்திருந்தது. இந்நிலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பொத்துவிலுக்கு வருகை தந்த ஹக்கீமுக்கு அங்குள்ள மக்கள் ஒன்று திரண்டு உற்சாக வரவேற்பளித்துள்ளனர்.
மொத்தமாக சுமார் 50 கிலோ கிராமுக்கும் அதிகமான எடையில் மலர் மாலைகளும் அவருக்கு அணிவிக்கப்பட்டிருந்தன.
இந்நிகழ்வுகளில் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் பொத்துவில் மக்கள் சார்பில் வரவேற்பளிக்கப்பட்டிருந்தது.
பொத்துவிலில் நடைபெற்ற குறித்த பொதுக் கூட்டத்தில் சுமார் பத்தாயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
http://www.tamilwin.com/show-RUmszCRdKafw7.html

பாரிய மண்சரிவு - போக்குவரத்து தடை
[ திங்கட்கிழமை, 29 டிசெம்பர் 2014, 06:18.10 AM GMT ]
நேற்று இரவு பெய்த கடும் மழை காரணமாக கொத்மலை கெரன்டிஎல பிரதேசத்தில் பாரிய மண்சரிவு ஏற்பட்டு கண்டி நுவரெலியா பிரதான வீதியின் போக்குவரத்து இன்று மூடப்பட்டுள்ளது.
தற்போது போக்குவரத்தினை வழமைக்கு கொண்டுவருதற்காக டோசர்கள் மூலம் கற்கள் மற்றும் மண் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றது. இருந்த போதும் போக்குவரத்தினை வழமைக்கு கொண்டுவருவதற்கும் மண் சரிவை மேலும் தடுப்பதற்க அதிகாரிகள் பல சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டி உள்ளதாக தெரியவருகின்றது.
கண்டியிலிருந்து நுவரெலியா நோக்கி செல்லும் வாகனங்கள் தவலந்தன்ன சந்தியில் திரும்பி தலவாக்கெல்ல பாதையின் ஊடாக நவநகரத்திற்கு சென்று அங்கிருந்து இறம்பொடை பாதை ஊடாக நுவரெலியா செல்வதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதே வேலை இந்த மண்சரிவு இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் வேன் ஒன்றும் சேதத்திற்கு உள்ளாகி உள்ளதுடன் தெய்வாதீனமாக வாகனத்தில் பயனித்தோர் உயிர்தப்பி உள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszCRdKafx0.html
மண் சரிவில் சிக்கியவர்களின் மேலும் 2 சடலங்கள் மீட்பு
[ திங்கட்கிழமை, 29 டிசெம்பர் 2014, 06:21.04 AM GMT ]
பதுளை ரீல்பொல பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கியவர்களின் மேலும் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
நேற்று மாலை இந்த சடலங்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
33 வயதான ஆலிஎல உடுவர பிரதேசத்தை சேர்ந்த ஒருவரும் 19 வயதான இளைஞர் ஒருவரும் இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக பதுளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
சீரற்ற காலநிலை காரணமாக பதுளை பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் மொத்தமாக இதுவரை 18 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszCRdKafx1.html
பொதுமக்களின் வாக்குகளை கொள்ளையடிக்க அரசாங்கம் இரகசிய திட்டம்!
[ திங்கட்கிழமை, 29 டிசெம்பர் 2014, 06:21.34 AM GMT ]
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின்போது பொதுமக்களின் வாக்குகளை கொள்ளையடித்து வெற்றியைத் தட்டிப் பறிக்க ஜனாதிபதி தரப்பு திட்டமிட்டுள்ளது.
இதற்கான திட்டங்களை அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க தலைமையில் தனியானதொரு குழுவினரைக் கொண்டு முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் தேர்தல் தொகுதியொன்றுக்கு சுமார் நான்காயிரம் தொடக்கம் ஐயாயிரம் வரையான மைத்திரியின் ஆதரவாளர்களை வாக்களிக்க விடாமல்தடுத்து மைத்திரியின் வெற்றியைத் தடுப்பது அரசாங்கத்தின் நோக்கமாகும்.
இதன் மூலம் மைத்திரி தரப்புக்கு கிடைக்க வேண்டிய சுமார் பத்து லட்சம் வாக்குகளை தடுத்து வெற்றியைத் தட்டிப் பறிப்பது அரசாங்கத்தின் ரகசிய திட்டமாகும்.
குறித்த ரகசிய திட்டத்தை இலகுவாக்கும் வகையில் தற்போது தேர்தல் தொகுதி தோறும் மைத்திரியின் தீவிர ஆதரவாளர்கள் இனங்காணப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
அவர்களை வாக்களிக்க விடாமல் தடுப்பதற்கான ஏற்பாடுகள் குறித்தும் தீவிர கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிரணிப் பக்கம் தாவியுள்ள நிலையில், கிழக்கு மாகாண முஸ்லிம் பிரதேசங்களில் வன்முறைகளைத் தூண்டி வாக்களிப்பதைத் தடுப்பது குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பான தகவல்கள் எதிர்க்கட்சிகளுக்கும் கிடைத்துள்ள நிலையில், அரசாங்கத்தின் வன்முறைகளை எதிர்கொள்வதற்கும், சதித்திட்டங்களை முறியடிப்பதற்கும் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நம்பகமான தகவல் வட்டாரங்களிலிருந்து தெரிய வந்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszCRdKafx2.html
அரசிடம் துருப்புச் சீட்டுகள் இல்லை என்பதால் பொய்களை புனைகிறது: லக்ஷ்மன் கிரியெல்ல
[ திங்கட்கிழமை, 29 டிசெம்பர் 2014, 06:22.27 AM GMT ]
ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகிய திஸ்ஸ அத்தநாயக்க பொய்களை கூறி வருகிறார். தமது கட்சி யாருடனும் எந்த உடன்படிக்கைகளிலும் கையெழுத்திடவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேர்தல் சம்பந்தமாக வீசுவதற்கு அரசாங்கத்திடம் தற்போது எந்த துருப்புச் சீட்டுகளும் இல்லை. இதனால் பொய்களை புனைந்து வரும் அளவிற்கு அரசாங்கம் வங்குரோத்து நிலைக்கு சென்றுள்ளது.
நினைத்தும் பார்க்க முடியாத அளவுக்கு பணத்தை வீசி எறிந்து எதிரணியில் இருந்து மக்கள் பிரதிநிதிகளை அரசாங்கம் தனது பக்கம் இழுத்து வருகிறது.
விஹாரமஹாதேவி பூங்காவில் கையெழுத்திட்ட ஒரே ஒரு உடன்படிக்கை மாத்திரமே ஐக்கிய தேசியக் கட்சியிடம் உள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனோ அல்லது வேறு தரப்புடனோ, மக்களுக்கு தெரியாமல் களவான உடன்படிக்கைகளை செய்யவில்லை.
அரசாங்கம் கூறுவது பச்சை பொய் எனவும் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRdKafx3.html
அரச வேலைவாய்ப்புகளில் 99 வீதம் நாமல் ராஜபக்ஷவினால் வழங்கப்படுகிறது: ராஜித சேனாரத்ன
[ திங்கட்கிழமை, 29 டிசெம்பர் 2014, 06:30.49 AM GMT ]
அரசாங்கத்தில் வழங்கப்படும் வேலைவாய்ப்புகளில் 99 வீதமான வேலை வாய்ப்புகளை ஜனாபதிபதியின் புதல்வரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவே வழங்குவதாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
நாமல் ராஜபக்ஷ தனது அமைச்சுக்குள் மாத்திரமே தலையிடவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு கூட உயர் மட்டத்தில் என்ன முடிவுகள் எடுக்கப்படுகிறது என்பது தெரியாது.
முழு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படும் நிதியில் 73 சத வீதமான நிதி ராஜபக்ஷ குடும்பத்தினருக்காக ஒதுக்கப்படுகிறது எனவும் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRdKafx4.html

லயன் வாழ்கைக்கும், வீட்டு பிரச்சினைக்கும் தீர்வு காண்பேன்: மஹிந்த - ராஜபக்ஷ 9ம் திகதி தீர்வு காண்பார்: தொண்டமான்
[ திங்கட்கிழமை, 29 டிசெம்பர் 2014, 06:35.36 AM GMT ]
பெருந்தோட்டங்களில் ஒரு தேயிலை கொழுந்தை கூட பிடுங்குவதற்கு நான் அனுமதியளிக்க மாட்டேன் என உறுதியாக கூறிக்கொள்ள விரும்புகின்றேன். இன்று சிலர் இந்த துறையை இல்லாதொழிப்பதற்கு கங்கணம் கட்டிக் கொண்டுள்ளனர். அதற்கு அனுமதியளிக்க முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த கூட்டம் ஒன்று நேற்று நுவரெலியா நகர மத்தியில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், சீ.பீ.ரத்நாயக்க பிரதி அமைச்சர் முத்துசிவலிங்கம், மாகாண அமைச்சர்களான ராம்,செந்தில் தொண்டமான் என பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து ஜனாதிபதி அங்கு உரையாற்றுகைளில்,
இந்த கடும் மழையிலும் நீங்கள் அனைவரும் வந்து எமக்கு ஆதரவு தருவதற்கு எனது நன்றிகளை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.
எதிர்வரும் 8ம் திகதி நடைபெறும் தேர்தல் இந்த நாட்டின் தீர்கக்கமான ஒரு தேர்தல். என்னுடன் போட்டியிட யாரும் இல்லாததன் காரணமாக எங்கள் அணியில் உள்ள ஒருவரை போட்டியிட வைத்துள்ளனர்.
இந்த அரசாங்கத்தில் நல்லது நடந்தாலும் கெட்டது நடந்தாலும் அதற்கு நாம் அனைவரும் பொறுப்புக் கூற வேண்டும்.
ஆனால் ஒருவர் திடீரென மாற்று அணிக்கு சென்று நல்லவர் போல் நடிக்கின்றார். நாம் மட்டும் குற்றம் செய்தவர்கள் போல அவர் செய்த பிழைகளுக்கும் நாங்கள் தற்போது பதில் சொல்ல வேண்டும்.
யுத்தம் முடிவடைந்த காரணத்தால் இன்று அனைவரும் சந்தோசமாக வாழும் ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.
நான் தற்போது வீட்மைப்பு வேலை திட்டத்தை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அல்லது நகர அபிவிருத்தி அதிகாரசபையிடம் ஒப்படைத்துள்ளேன்.
இதன் முதலாவது, இரண்டாவது, மூன்றாவது கட்ட வேலைகள் தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்றன.
இன்னும் ஒரு சில மாதங்களில் உங்களை அந்த லயன் அறைகளில் இருந்து உங்களை வெளியேற்றி, வீட்டு பிரச்சினைக்கு தீர்வு காண்பேன் என இதன்போது கூற விரும்புகின்றேன்.
அனைவருக்கும் சொந்த வீடொன்று இருக்க வேண்டும் என நான் எதிர்பார்க்கின்றேன் என்றார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 9ம் திகதி தோட்டப் புறங்களில் உள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பார்: தொண்டமான்
மலையகத்தில் மாற்றம் ஏற்பட வேண்டுமென்றால் அது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் மாத்திரமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும் வேறு யாராலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த கூட்டம் நேற்று நுவரெலியா நகர மத்தியில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் நடைபெற்றது இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் இங்கு உரையாற்றுகையில்,
மலையகத்தில் பல அபிவிருத்திகள் திட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. இன்னும் பல அபிவிருத்திகளை மேற்கொள்ள வேண்டுமென்றால் அது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் மாத்திரமே முடியும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியது போல் உங்களுக்கு தனி வீடு காணி உரிமை நிச்சயமாக கிடைக்கும்.
9ம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகியவுடன் தோட்டப் புறங்களில்  அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கொடுப்பார். என்றார்.
நுவரெலியாவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரக் கூட்டம், இலங்கை தொழிலாளர் காங்கிஸின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் நுவரெலியாவில் இன்று நடைபெற்றது.
இதன்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான முத்து சிவலிங்கம், ஊவா மாகாண சபை அமைச்சர் செந்தில் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் என பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
http://www.tamilwin.com/show-RUmszCRdKafx5.html

Geen opmerkingen:

Een reactie posten