தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 27 december 2014

அமெரிக்காவுக்காக ஆயுதம் ஏந்தவும் தயார் என ராஜபக்ஷவினர் சத்தியம் செய்துள்ளனர்: சோமவன்ஸ அமரசிங்க



நாட்டுப்பற்றாளர் நடராஜா இராஜசூர்யர் அவர்களின் 2ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று
[ சனிக்கிழமை, 27 டிசெம்பர் 2014, 06:06.57 AM GMT ]
தமிழ் மக்களுக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கும் அளப்பரிய பணி செய்த நாட்டுப் பற்றாளர் நடராஜா இராஜசூர்யர் (ரங்கன் அல்லது குபேரன்) அவர்களின் 2ம் ஆண்டு வீர வணக்க நாள் இன்றாகும்.
ரங்கன் போய்விட்டான் அன்று அதிகாலை வந்த தொலைபேசி.
27ம் திகதி அதிகாலை. விடிந்தும் விடியாத ஒரு இருள்காலையாத பொழுதில் தொலைபேசி அழைப்பொன்று. இப்படியான பொழுதில் வருவது இரண்டு அழைப்புகள்தான். உயிரான உறவின் அழைப்பு.
அது இல்லை என்றால் உறவொன்றின் உயிர்பிரிந்த அழைப்பு. மறுமுனையில் நண்பனொருவன். தொலைபேசிக்குள்ளாக வரப்போகும் செய்திக்காக காதுகளையும் இதயத்தையும் தயார் செய்படியே கேட்டபோதுதான் அவன் சொன்னான் ரங்கன் இப்ப கொஞ்ச நேரத்துக்கு முந்தி போய்விட்டானாம்.
வலிக்க வலிக்க மரணங்களை பாத்தும் கேட்டும் மரத்துப்போனதாக நம்பிக்கொண்டிருந்த மனது உடையத்தொடங்கியது. ரங்கன் எத்தகைய உறவாக இருந்தான் என்பதைவிட அவன் தான் நம்பிய இலட்சியத்தின் மீதான நம்பிக்கையையும் அந்த இலட்சியத்துக்காக உறுதியுடன் வழிநடாத்தும் தலைமைமீதான நம்பிக்கையையும் இறுதி வைத்திருந்தானே, அதுதான் அவனுடனான உறவாக இருந்திருக்கும்.
இத்தனைக்கும் ரங்கனின் சொந்தப் பெயர்கூட அவனுடன் பழகிய அனைவருக்கும் தெரிந்திருக்கவில்லை. அவன் தனது இயக்கப்பெயருடனேயே பழகினான். அதனுடாகவே தனது வேலைகளையும் செய்தான். பயிற்சிக்காக வரும் புதியவர்களை மதுரையில் ஒரு தங்குமிடத்தில் வைத்திருந்து அதன்பின்னரேயே பலதரப்பட்ட பயிற்சி முகாம்களுக்கும் பிரித்து அனுப்புவார்கள்.
அப்படியான ஒரு தங்குமிடத்துக்கு சென்றபோதுதான் ரங்கனை முதன்முதலில் சந்திக்க நேர்ந்தது. அங்குதான் அவன் குபேரான மாறினான்.அவனின் இயக்கப் பெயர் குபேரன். அதிலும் 'சிரிப்புக் குபேரன்' என்றால்தான் அதிகமானவர்களுக்கு தெரியும்.
3வது பயிற்சி அணியில் பயிற்சி பெற்றபோதே பயிற்சியாளர்களால் சிறந்த வீரனாக இனங்காணப்பட்டு அதன்பின் அதே பயிற்சி முகாமின் 6வது 9வது பயிற்சி அணிகளுக்கு பயிற்சி அளிக்கும் மாஸ்டராகவும் விளங்கினான்.
பொன்னம்மானின் அன்புக்கும் அவரின் வியப்புகளுக்கும் ரங்கன் உரியவனாக இருந்தான். அதனால்தான் பொன்னம்மான் தாயகம் திரும்பும்போது ரங்கனும் அவருடன் தாயகம் திரும்புகிறான். தாயகம் வந்ததும் யாழ் அணியில் குபேரனும் ஒருவனாகிறான். 
தளபதி கிட்டுவின் மெயின்பேஸான நம்பர் 3ல் ரங்கனும் உள்வாங்கப்படுகின்றான். அதன்பின் யாழ் கோட்டை மீதான் முற்றுகைப் போரில் முக்கியபங்காற்றிய நம்பர் 3 முகாம் வீரர்களில் ஒருவனாக ரங்கனும் களமாடுகின்றான்.
அதற்குபின் இந்தியப்படை வருகையின்போது அவர்களுடான சண்டையின்போது பாலா அண்ணை தம்பதிகளின் பாதுகாப்புக்கான முக்கியவீரர்களில் ஒருவானாகவும் ரங்கன் விளங்குகின்றான். அதன்பின் பாலா அண்ணையுடனேயே இந்தியாவந்த ரங்கன் அங்கேயே தங்கிவிடுகின்றான்.
கேட்டால் அமைப்பைவிட்டு தான் விலகிவிட்டதாகவும் துண்டுகொடுத்து விட்டு இங்கு இருப்பதாகவும் சென்னையில் சொல்லிக் கொண்டிருந்தான். விலகி வந்துவிட்டதக சொல்லிக்கொண்டே வேறு வேலைகள் செய்துகொண்டிருக்கும் ஒருவனாகவே நினைத்தேன். என்னதான் விலகியதாக சொல்லிக்கொண்டிருந்தாலும் அவனால் தன்னை உருமறைக்க தெரியவில்லை.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி செத்தபோது யாரையாவது பிடித்து தண்டனைவாங்கி கொடுத்தே ஆகவேண்டிய நிர்வாக அழுத்தங்கங்கள் ஆளுவோருக்கும் ஆள்வோரை தாங்கிநிற்கும் காவல்துறைக்கும் உறவுத்துறைக்கும் ஏற்பட்டபோதில் நிறைய கைதுகள் மிகநிறைய மிகமிக நிறைய சித்திரவதைகளும் நடந்தேறின. அவற்றினுடாக கிடைத்த வாக்குமூலங்களை வைத்து வழக்கும் தொடுக்கப்பட்டது.
முதலில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவருக்கும் (இருபதுக்கும் மேற்பட்டோர்) மரண தண்டனையை நீதிமன்றம் வழங்கியது. புலன்விசாரணையை தலைமைதாங்கி நடாத்திய கார்த்திகேயன் இது வாய்மையின் வெற்றி' என்று புளகாங்கிதம் அடைந்ததார். அப்போது மரணதண்டனை பெற்றவர்களில் ரங்கனும் ஒருவன். ஆனாலும் பின்னர் நடந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பில் ரங்கன் விடுதலையானான். ஆனால் இந்த காலத்தில் பத்துவருடங்களுக்கும் மேலாக ரங்கன் சிறையில் வாடி இருக்கின்றான். அதன்பின்பான ஒரு பொழுதில் லண்டனில் ரங்கனை கண்டபோதும் தமிழீழ விடுதலை மீதான அவனின் பற்றும் உறுதியும் இன்னும் அதிகமாகி இருந்ததையே காண முடிந்திருந்தது. ஏதாவது ஒரு வேலையாக எந்தநேரமும் அலைந்து கொண்டே இருப்பான்.
மிக இக்கட்டான காலப்பகுதியில் தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் மெய்ப் பாதுகாப்பாளனாகவும் பராமரிப்பாளனாகவும் பணியாற்றி தனக்குத் தரப்பட்ட பணியைச் சிறப்பாகச் செய்தார்.
முள்ளிவாய்க்கால் எல்லோர் மீதும் எறிந்து விட்டுபோன தாக்கங்கள் ரங்கனிலும் தெரிந்தது. ஆனாலும் அவன் சோர்ந்திருக்கவில்லை. மறுநாளே அங்கிருப்பவர்களுக்கு புனர்வாழ்வுக்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்று வேலை செய்யதொடங்கி விட்டான். இதுதான் ரங்கன் என்று எந்தவொரு வறையறைக்குள்ளும அடக்கி விடமுடியாத ஒரு உற்சாக மனிதன் அவன். இப்போதெல்லாம் அதிகமாக அவனை கோவில்களிலேயே காணமுடிந்தது.
அவன் மரணித்த அந்த நாளின் முன்னிரவும்கூட கோவிலுக்கு போய்விட்டுவந்து அதே வேட்டியுடனேயே படுத்திருந்திருக்கிறான். அதிகாலை மாரடைப்பு அவனை பிரித்துவிட்டது.
அதே வேட்டியுடனேயே அவனின் மரணம் நிகழ்ந்தும் இருக்கிறது. இறுதிவரைக்கும் தமிழீழநினைப்புடனேயே வாழ்ந்த ஒருவனாக வரலாறு ரங்கனை பதியும் என்று நம்புகின்றேன்.


ச.ச.முத்து
http://www.tamilwin.com/show-RUmszCRbKagu3.html
நிஷாந்த முத்துஹெட்டிகமவை கைது செய்ய சர்வதேச பொலிஸாரின் உதவியை நாடும் பொலிஸார்
[ சனிக்கிழமை, 27 டிசெம்பர் 2014, 07:34.22 AM GMT ]
 பிரதி அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகமவின் பிடியாணையை அமுல்படுத்துவதற்கு சர்வதேச பொலிஸாரின் உதவியை பெற்றுக்கொள்ளவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
நீதிமன்றத்தினால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று நாட்டை விட்டு வெளியேறிய, பிரதி அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம நீண்டகாலத்திற்கு இலங்கை திரும்பாவிடின், அவர் மீதான பிடியாணையை அமுல்படுத்துவதற்காக சர்வதேச பொலிஸாரின் உதவியைப் பெற்றுக்கொள்ள எதிர்ப்பார்ப்பதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
முத்துஹெட்டிகமையை ஏன் கைது செய்யவில்லை! பொலிஸார் மீது விசாரணை
நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் சிங்கப்பூருக்கு சென்ற பிரதியமைச்சர் நிசாந்த முத்துஹெட்டிகமவை கைது செய்யாமை குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
பொதுவேட்பாளரின் மேடையை தாக்கிய சம்பவம் தொடர்பி;ல் பிரதியமைச்சருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
எனினும் அவர், கட்டுநாயக்க விமானத்தளம் ஊடாக நேற்று முன்தினம் சிங்கப்பூருக்கு சென்றுள்ளார்.
இதன்போது பொதுமகன் ஒருவர் 119 என்ற பொலிஸ் இலக்கத்துக்கு தொடர்பை ஏற்படுத்தி பிரதியமைச்சர் சிங்கப்பூர் செல்வதை அறிவித்துள்ளார்.
எனினும் 119 இலக்கத்தில் உள்ள அலுவலர்கள் ஏன் இந்த தகவலை உரிய அதிகாரிகளுக்கு பரிமாற்றவில்லை என்பது குறித்து விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் முத்துஹெட்டிகம நாடு திரும்பும்போது அவரை கைது செய்யுமாறு கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலைய அதிகாரிகளுக்கு பொலிஸார் தகவல் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அமெரிக்காவுக்காக ஆயுதம் ஏந்தவும் தயார் என ராஜபக்ஷவினர் சத்தியம் செய்துள்ளனர்: சோமவன்ஸ அமரசிங்க
[ சனிக்கிழமை, 27 டிசெம்பர் 2014, 07:24.12 AM GMT ]
ராஜபக்ஷவினருக்கு இருப்பது கிறீன் கார்ட் ஏகாதிபத்திய எதிர்ப்பு எனவும் ஐக்கிய அமெரிக்காவின் சகலவற்றை பாதுகாப்பதாக எந்த சந்தர்ப்பத்திலும் ஆயுதம் ஏந்தவும் தயார் என அவர்கள் இறைவன் முன் சத்தியம் செய்துள்ளதாகவும் ஜே.வி.பியின் முன்னாள் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அமெரிக்காவின் குடியுரிமையை பெறுவதற்காக சத்தியம் செய்து உறுதிமொழி எடுத்துகொள்ள வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்காவில் குடியுரிமை பெறும் ஒருவர் அதற்கு முன்னர் வாழ்ந்த நாட்டின் அரசாங்கத்திற்கோ, அதன் இளவரசர் அல்லது மன்னருக்கு இருந்த சார்பு நிலைமை மற்றும் பக்தியை கைவிடுவதாக சத்தியம் செய்து உறுதிமொழியை வழங்க வேண்டும்.
அத்துடன் அமெரிக்காவின் அரசியல் அமைப்பு, சட்டத்திற்கு ஆதரவு வழங்குவதாகவும் வெளிநாட்டில் அல்லது உள்நாட்டில் ஏற்படும் எதிரிகளில் செயற்பாடுகளில் இருந்து நாட்டை பாதுகாப்பதாகவும் உறுதிவழங்க வேண்டும்.
தேவை ஏற்பட்டால் அமெரிக்காவுக்காக ஆயுதம் ஏந்தவும் அமெரிக்க இராணுவத்தின் சிவில் செயற்பாடுகளில் ஈடுபடவும் சட்டத்தின்படி கடமைப்பட்டுள்ளதாகவும் உறுதி வழங்க வேண்டும்.
இந்த உறுதிமொழிகளை சுதந்திரமாக வழங்குவதாகவும் எந்த மன ரீதியான நிபந்தனைகளில் அடிப்படையில் வழங்கவில்லை என்றும் இதற்கு இறைவன் தனக்கு உதவ வேண்டும் எனவும் கூறவேண்டும்.
அமெரிக்காவில் குடியுரிமை பெறும் இலங்கையர்கள் எவராக இருந்தாலும் இந்த உறுதிமொழிகளை எடுக்க வேண்டும்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, அமைச்சர் டளஸ் அழக பெரும ஆகியோர் ஆண்டவர் முன்னிலையில் இப்படியான சத்திய உறுதிமொழியை வழங்கியே அமெரிக்க குடியுரிமையை பெற்றுள்ளனர்.
இவர்களின் கடந்த கால செயற்பாடுகளை கவனிக்கும் போது, இவர்கள் இந்த சத்தியத்தை உறுதியாக கடைப்பிடித்து வருவதை அவதானிக்க முடிகிறது.
2008 ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் பாதுகாப்பு உடன்படிக்கை ஒன்று கையெழுத்திடப்பட்டதுடன் அதில் அமெரிக்கா சார்பில் ரொபர்ட் ஓ பிளேக்கும் இலங்கை சார்பில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவும் கையெழுத்திட்டனர். இதனை ஒரு முக்கியமான விடயமாக கருத முடியும்.
இந்த உடன்படிக்கை மூலம் பிராந்தியத்தில் யுத்த நிலைமை ஒன்று ஏற்பட்டால் அமெரிக்காவுக்கு தேவையபன சகல உட்கட்டமைப்பு வசதிகளையும் இலங்கை வழங்க வேண்டும்.
இவர்களுக்கு இலங்கை ஒரு தற்காலிக வதிவிடம் மாத்திரமே. இதன் காரணமாகவே இலங்கைக்கு சார்பாக செயற்படுவதற்கு பதிலாக ஆண்டவரிடம் உதவிக் கோரி அமெரிக்காவுக்கு அடி க்கடி சென்று தமது பக்கசார்பை பறைச்சாற்றி விட்டு இலங்கை வருகின்றனர் எனவும் அமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRbKagvy.html

Geen opmerkingen:

Een reactie posten