[ சனிக்கிழமை, 27 டிசெம்பர் 2014, 01:06.54 AM GMT ]
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் 25 நாட்களில் 155 அரசியல்வாதிகள் கட்சித் தாவியுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சேனநாயக்க எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டு, இந்த கட்சித் தாவல் நடவடிக்கையை ஆரம்பித்தார்.
இதுவரையில் 155 மக்கள் பிரதிநிதிகள் ஆளும் கட்சியுடனும் எதிர்க்கட்சியுடனும் இணைந்து கொண்டுள்ளனர்.
அதிகளவான ஆளும் கட்சி மக்கள் பிரதிநிதிகள், பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து கொண்டுள்ளனர்.
மைத்திரிபால சிறிசேனவுடன் 111 பேர் இணைந்து கொண்டுள்ளதுடன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் 44 பேர் இணைந்து கொண்டுள்ளனர்.
அமைச்சர்களான ராஜித சேனாரட்ன, நவீன் திஸாநாயக்க, துமிந்த திஸாநாயக்க,ரிசாத் பதியூதின், சம்பிக்க ரணவக்க, பிரதி அமைச்சர் எம்.கே.டி.எஸ். குணவர்தன உள்ளிட்ட 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து கொண்டுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, ஜனநாயகக் கட்சியின் பிரதித் தலைவர் ஜயந்தகெட்டகொட உள்ளிட்ட இரண்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சியில் இணைந்து கொண்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszCRbKags7.html
எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை: சரத் என் சில்வா
[ சனிக்கிழமை, 27 டிசெம்பர் 2014, 01:32.52 AM GMT ]
எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர் காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரப் பொறிமுறையில் பங்களிப்பு வழங்கப் போவதில்லை.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் உச்ச நீதிமன்றின் சட்ட விளக்கம் அளிக்கப்பட முன்னதாக, ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுவது சட்டவிரோதமானது என சுயாதீனமாக கருத்து வெளியிட்டிருந்தேன்.
எனினும், நீதிமன்றின் சட்ட விளக்கத்தைத் தாண்டி கருத்து வெளியிட அவகாசம் கிடையாது.
அரசியல் அமைப்பு தொடர்பிலான பிரச்சினை ஒன்றையே நான் எழுப்பியிருந்தேன்.
உச்ச நீதிமன்றம் தீர்மானித்ததன் பின்னர் அது குறித்து பேச முடியாது.
கட்சி அரசியலில் ஈடுபடும் உத்தேசம் கிடையாது என சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRbKagt0.html
கட்டாரில் சுனாமியால் உயிரிழந்தவர்களின் 10ம் ஆண்டு நினைவேந்தல்
[ சனிக்கிழமை, 27 டிசெம்பர் 2014, 04:19.07 AM GMT ]
உலகலவில் பாரிய பாதிப்பை ஏற்படுத்திய சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் உலகம் முழுவதும் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது.
அந்த வகையில் சுனாமி ஆழிப்பேரலையினால் உயிரிழந்தவர்களின் 10ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் கட்டாரில் வாழும் ஈழத்தமிழர்களால் நினைவுகூரப்பட்டது.
http://www.tamilwin.com/show-RUmszCRbKagt2.html
ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு! மீண்டும் ஒன்றுகூடும் முஸ்லிம் காங்கிரஸ்
[ சனிக்கிழமை, 27 டிசெம்பர் 2014, 04:31.20 AM GMT ]
கட்சியின் உயர் மட்டக்குழு இன்று சந்திப்பொன்றினை மேற்கொள்ளவுள்ளதாக முஸ்லிம் காங்கிரசின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இன்று இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
இதற்கு முன்னரும் குறித்த விடயம் தொடர்பில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களிடையே பல சந்திப்புக்கள் இடம்பெற்ற போதும் இறுதி முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszCRbKagt3.html
11 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு
[ சனிக்கிழமை, 27 டிசெம்பர் 2014, 04:45.32 AM GMT ]
மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று மாலை வரை நீடிக்கப்பட்டுள்ளதாக நிறுவகத்தின் மண்சரிவு ஆய்வுப் பிவிரின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ். பண்டார குறிப்பிடுகின்றார்.
மாத்தளை, பதுளை, கண்டி, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி, காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
மண்சரிவு அபாயம் அதிகளவில் காணப்படுகின்ற பகுதிகளில் வாழ்கின்ற மக்கள், அங்கிருந்து தற்காலிகமாக வெளியேறுவது பாதுகாப்பான நடவடிக்கையாகும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் நேற்றிரவு அறிவித்தல் விடுத்துள்ளது.
இத்தகைய பிரதேசங்களில் அதிக மழை பெய்கின்றமையே கூடுதல் மண்சரிவு அபாயம் நிலவுவதற்கு காரணமாகும் என்றும் மண்சரிவு ஆய்வுப் பிவிரின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ். பண்டார தெரிவித்தார்.
இதேவேளை இலங்கைக்கையை அண்மித்த பகுதியில் மற்றுமொரு தாழமுக்கம் ஏற்பட்டுள்ளால், காற்றுடன் கூடிய கடும் மழை காலநிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையிலிருந்து 400 கீலோமீற்றர் தூரத்தில் தாழமுக்கம் நிலை கொண்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszCRbKagt4.html
எங்கள் ஆட்சியிலும் வடக்கு கிழக்கில் இருந்து இராணுவம் அகற்றப்பட மாட்டாது!- மைத்திரி
[ சனிக்கிழமை, 27 டிசெம்பர் 2014, 05:25.35 AM GMT ]
இலங்கையில் யுத்தத்தை வெற்றி பெறச் செய்த பல இராணுவ அதிகாரிகள் வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளார்கள். அவர்களையும் நாட்டுக்கு வரவழைத்து மென்மேலும் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் .
இன்னுமோர் பயங்கர வாதத்துக்கு நான் இடமளிக்கப் போவதில்லை. இந்த நாட்டை துண்டாடுவதர்க்கும் இடமளிக்கப் போவதும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
சுனாமி அழிவுகளின் வடுக்கள் அரசினால் இன்னமும் மாற்றப்படவில்லை! எனது ஆட்சியில் மாற்றம் உண்டு!- மைத்திரி
நாட்டில் இயற்கை அனர்த்தங்கள் மூலம் பேரழிவுகளை நாம் சந்திப்பதற்கு காரணம் இங்கு ஒரு சிலரால் மேற்கொள்ளப்படும் திட்டமிடாத அபிவிருத்தி செயற்பாடுகளேயாகும். ஒரு தசாப்தத்திற்கு முன்னர் ஏற்பட்ட அழிவுகளின் வடுக்கள் அரசாங்கத்தினால் இன்னமும் மாற்றப்படவில்லை. எனது ஆட்சியில் அனைத்திற்கும் மாற்றம் உண்டு என மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
கொழும்பு காக்கைதீவு பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற சுனாமி நினைவு தின நிகழ்வில் கலந்து கொண்டிருந்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஒரு தசாப்தத்திற்கு முன் நாட்டில் ஏற்பட்ட மிக மோசமான சம்பவம் மக்களின் மனங்களில் இருந்து இன்னமும் நீங்காது உள்ளது. பத்து வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தினால் மக்கள் பலர் சுமார் 40 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர். மக்களுக்கு எச்சரிக்கப்படாமையும் மக்கள் எதிர்பாராத ஒரு தருணத்திலும் இவ்வாறானதொரு மோசமான சம்பவம் இடம்பெற்று விட்டது.
எனினும் சுனாமி அனர்த்தம் இடம்பெற்று இன்று பத்து வருடங்களை கடந்து விட்டது. எனினும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவொரு நிவாரணமோ தேசிய ரீதியில் எந்தவொரு பாதுகாப்பு நடவடிக்கையோ இடம்பெறவில்லை.
சர்வதேச நாடுகளில் அனர்த்தங்கள் ஏற்படுமாயின் அதற்கு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் அதற்கமைய தொழில்நுட்ப அவதான செயற்பாடுகளும் பயன்படுத்தி அனர்த்தங்களை தவிர்த்து கொள்ள முடிகின்றது.
எனினும் இலங்கையில் அவ்வாறானதொரு எச்சரிக்கை செயற்பாடுகள் இல்லை. மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமாயின் அரசாங்கம் எச்சரிக்கை செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாமையே தற்போதும் மலையக பகுதிகளில் தொடர் அனர்த்தங்கள் ஏற்பட காரணமாகியுள்ளது.
எனவே எதிர்வரும் 8ம் திகதி இவை அனைத்தையும் வெல்லும் எமது புதிய யுகத்தினை ஆரம்பிப்போம்.
ரணில் உரையாற்றுகையில், இலங்கையில் இடம்பெற்ற ஆயுத மோதல் மற்றும் கலவரங்களில் உயிரிழந்த உயிர்களுக்கு சமமான உயிர்களை சுனாமி பேரலையில் தொலைத்து விட்டோம். சுனாமி அனர்த்தம் இடம்பெற்று பத்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் மக்கள் இன்னமும் இவ்வழிவினை மறக்கவில்லை. பலர் இன்றும் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆயினும் கவலைக்கிடமான நிலை என்னவெனில் அந்த மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் தமது பத்து ஆண்டுகளை அரசாட்சியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வித நிவாரணங்களையோ உதவிகளையோ பெற்றுக்கொடுக்க மறந்து விட்டார்.
மக்களை பற்றி சிந்திக்காது தமது குடும்ப அரசியலை பற்றி சிந்திக்கும் ஆட்சிக்கு இனிமேலும் இடம் கொடுக்காது தூய்மையானதும் மக்களின் பாதுகாப்பினை பலப்படுத்தும் ஆட்சியை உருவாக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இங்கு உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க குறிப்பிடுகையில், 2004 ம் ஆண்டு சுனாமி அனர்த்தத்தினால் சுமார் 40 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்களும் 70 ஆயிரத்திற்கு அதிகமான வீடுகள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பெறுமதியான சொத்துக்கள் அழிந்தன. அதேபோல் நாடும் மிக இறுக்கமான பொருளாதார வீழ்ச்சி கண்டது.
ஆனால் அப்போதே நாம் சர்வதேச உதவியுடன் நாட்டினை மீட்டெடுத்தோம். ஆனால் தற்போது உள்ள நிலைமையில் நாட்டில் அபிவிருத்தியினை கட்டியெழுப்பவோ சர்வதேசத்திடம் உதவிகளைப் பெற்று பொருளாதார சமூக அபிவிருத்தியினை மேற்கொள்ள முடியாத நிலைமைக்கு நாடு மாற்றப்பட்டு விட்டது.
உதவும் ஹம்பாந்தோட்டை எனும் திட்டம் உருவாக்கப்பட்டு சுனாமி உதவிகளை மேற்கொள்வதாக அரசாங்கம் தெரிவித்து இறுதியில் ஒரு சிலர் மட்டுமே அதில் பலனடைந்து கொண்டனர்.
உதவிக்காக சேகரிக்கப்பட்ட நிதி ஒரு சிலரின் பைகளை நிறைத்து விட்டது. இப்போதும் அதேநிலைமையே நாட்டில் தொடர்கின்றது. அதனை மாற்றியமைக்க வேண்டும். அதற்காக வேண்டியேனும் மக்கள் இந்த சந்தர்ப்பத்தினை சரியாகப் பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszCRbKagt6.html
Geen opmerkingen:
Een reactie posten