மகிந்த வென்றாலும் ஒரு கிரிமினலாக கருதி நீதிமன்றில் வழக்குத் தொடரலாம் !
[ Dec 27, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 4905 ]
இன்று செய்தியாளர் மாநாடொன்றில் கருத்துதெரிவித்துள்ள சரத்என் சில்வா,ஜனாதிபதி இவ்வாறான போலியான ஆவணமொன்றை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவது 20 வருட கால சிறைத்தண்டனை விதிக்ககூடிய குற்றச்செயல் என தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்கவிற்கும் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் கைச்சாத்தப்பட்ட இரகசிய ஒப்பந்தம் என அரசாங்கம் பிரச்சாரம் செய்துவரும் ஆவணம் தொடர்பாகவே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் சட்டங்களின் கீழும் இது ஒரு குற்றமாகும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தொடர்பான போலியான ஆவணங்களை ஊடகங்களில் வெளியிடுவது குற்றம் என சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகிந்த ராஜபக்ச மீண்டும் தெரிவுசெய்யப்பட்டாலும் உச்ச நீதிமன்றம் மூலமாக அவர் மீது இதற்காக குற்றம்சாட்டலாம், என அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.athirvu.com/newsdetail/1727.htmlமகிந்தரின் நண்பர் பொலிஸார் கண்ணில் மண் தூவி முத்துஹெட்டிகம சிங்கப்பூருக்கு தப்பிச் சென்றார் !
[ Dec 27, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 4925 ]
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் வந்துரம தேர்தல் பிரச்சார மேடைக்கு தீ வைத்த சம்பவத்தில், பிரதி அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகமவின் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களை பொலிஸ் நிலையத்தில் இருந்து பலாத்காரமாக அழைத்துச் சென்றதாக முத்துஹெட்டிகம மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவரை கைது செய்யுமாறு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட போதும் அவரை கைது செய்ய முடியவில்லை என பொலிஸால் நீதிமன்றில் அறிவிக்கவே முத்துஹெட்டிகமவை கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறு பத்தேகம நீதவான் சந்திம எதிரிமான்ன அண்மையில் பிடியாணை பிறப்பித்தார்.
ஆனால் பிடியாணை பிறப்பித்த பின் பிரதி அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம வாகனத்தில் செல்லும் போது அவரை பார்த்து பொலிஸ் அதிகாரி ஒருவர் சல்யூட் அடித்து வணக்கம் சொல்வது போன்று புகைப்படம் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பிரதி அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம தான் சிங்கப்பூர் சென்றதும் காலி பிரதேச செய்தியாளர் ஒருவருக்கு அழைப்பெடுத்து தான் மூன்று நாள் விடுமுறையில் நண்பர்களுடன் சிங்கப்பூர் சென்றுள்ளதாகவும் தேர்தல்வரை அங்கு இருக்கப் போவதில்லை என்றும் நீதிமன்ற உத்தரவிற்கு மதிப்பளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அண்மைய சம்பவங்களால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தான் வெளிநாடு சென்றதாக அவர் கூறியுள்ளார்.
http://www.athirvu.com/newsdetail/1728.htmlமகிந்தருக்கு எதிராக எழுதிய 800 இணையங்கள் முடக்கம்: ஆனால் அவை போலி என்கிறார்கள் !
[ Dec 27, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 3850 ]
பெரும்பாலும் சிங்களம் மற்றும் ஆங்கிலத்தில் செய்திகளை வெளியிட்டு வரும் சில இணையங்களையே, இலங்கை அதிகாரிகள் தற்போது முடக்கியுள்ளார்கள் என்று அறியப்படுகிறது. இவற்றில் பல புலம்பெயர்ந்து வாழும் சிங்கள ஊடகவியலாளர்களது இணையம் என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். இந்த இணையங்களில் மகிந்த மற்றும் அவரது குடும்பம் தொடர்பான பல செய்திகள் வெளியிடப்பட்டு வந்துள்ளது. இதேவேளை, நான்காயிரத்துக்கும் அதிகமான போலி பேஸ்புக் கணக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இலங்கை தகவல் தொழில்நுட்ப முகவர் நிறுவனத்தின் பணிப்பாளர் அதுல புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
இலங்கை அதிகாரிகள் மகிந்தருக்கு எதிராக கருத்துக்களை வெளியிடும் பேஸ் புக் கணக்குகளை போலி என்று கூறி, பேஸ் புக் தலைமையகத்திற்கு அறிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் பேஸ் புக் தலைமைச் செயலகம் பல கணக்குகளை முடக்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமக்கு எதிராக கருத்துக்களை வெளியிடும் இணையங்களையும் மற்றும் தனிப்பட்ட பேஸ் புக் கணக்குகளையும் மகிந்த ராஜபக்ஷவின் கூலி ஆட்கள் முடக்கி வருகிறார்கள்.
http://www.athirvu.com/newsdetail/1729.html
Geen opmerkingen:
Een reactie posten