தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 28 december 2014

மட்டக்களப்பில் மைத்திரியின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்! ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்

சினிமா அரங்குகளையும் விட்டு வைக்காத ஆளும் கட்சியின் தேர்தல் பிரச்சாரம்
[ ஞாயிற்றுக்கிழமை, 28 டிசெம்பர் 2014, 09:35.33 AM GMT ]
திரையரங்களில் படங்கள் திரையிடப்படும் போது இடையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மகிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரப் படம் திரையிடப்படுவதாக கபே அமைப்பு தெரிவித்துள்ளது.
அரச தகவல் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட பிரச்சாரப் படமாக இந்த படம் வெளியிடப்பட்டுள்ளது.
அரச வளங்களை தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தப்படுவது தேர்தல் சட்டங்களை மீறும் செயல் என கபே சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், ஆளும் கட்சியின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் சினிமா அரங்குகளையும் விட்டு வைக்கவில்லை என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே விசனம் வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராபஜக்ச தொடர்பிலான தேர்தல் பிரச்சார விளம்பரங்கள் சினிமா அரங்குகளிலும் காட்சிப்படுத்தப்படுகின்றன.
திரைப்படங்கள் காட்சிப்படுத்தப்படும் போது ஆரம்பத்திலும் இடை நடுவிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் வெற்றியை உறுதி செய்யுமாறு கோரி பிரச்சாரம் செய்யப்படுகின்றது.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தினால் விளம்பரம் தயாரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அரச சொத்துக்களைப் பயன்படுத்தி எவ்வாறு விளம்பரம் தயாரிக்க முடியும் என கபே கேள்வி எழுப்பியுள்ளது.
இந்த விளம்பரங்கள் தொடர்பில் தேர்தல் ஆணையாளர் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszCRcKafr7.html
பொது எதிரணியினர் வடக்கிற்கு விஜயம்
[ ஞாயிற்றுக்கிழமை, 28 டிசெம்பர் 2014, 09:37.12 AM GMT ]
ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரப் பணிகள் நாடு முழுவதும் சூடு பிடித்திருக்கும் நிலையில், நாளை மறுதினம் வடக்கிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக உத்தியோகபூர்வ அறிவித்தலை பொது எதிரணி விடுத்துள்ளது.
தேர்தலுக்கான பிரச்சாரப் பணிகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி எதிர்வரும் 2ம் திகதி வடமாகாணத்திற்கு வருகைதரவுள்ள நிலையில், பொது எதிரணியினர் எதிர்வரும் 30ம் திதகி வடக்கிற்கு வருகைதரவுள்ளனர்.
இதன்படி 30ம் திகதி பொது எதிரணியினரின் வடமாகாணத்தில் 3வது பிரச்சாரக் கூட்டம் மன்னார் மாவட்டத்தில் காலை நடைபெறவுள்ளது. தொடர்ந்து மதியம் வவுனியா மாவட்டத்திலும், பிற்பகல் யாழ்.மாவட்டத்திலும் நடைபெறவுள்ளது.
மேலும் பொது எதிரணியினர் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு விஜயம் செய்யாத நிலையில், குறித்த மாவட்டங்களில் வரவேற்பு நிகழ்வுகளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொது எதிரணி விடுத்துள்ள அறிவித்தலில் சுட்டிக்காட்டியிருக்கின்றது.
http://www.tamilwin.com/show-RUmszCRcKafsy.html
முஸ்லிம் காங்கிரஸின் விலகலால் 8 எம்.பிக்களின் ஆதரவை இழந்த அரசாங்கம்
[ ஞாயிற்றுக்கிழமை, 28 டிசெம்பர் 2014, 09:38.21 AM GMT ]
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பதாக தீர்மானித்துள்ளதை அடுத்து அரசாங்கம் 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள், 13 மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் 163 உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களின் ஆதரவை இழந்துள்ளது.
முஸ்லிம் காங்கிரஸின் மொத்தமாக 184 மக்கள் பிரதிநிதிகள் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.
அதேவேளை முஸ்லிம் காங்கிரஸின் விலகல் காரணமாக அரசாங்கம் கிழக்கு மாகாண சபையில் பெரும்பான்மை பலத்தை இழந்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszCRcKafsz.html
பண மோசடியில் ஈடுபட்ட மூவருக்கு பிணை- குடும்பப் பெண்ணின் சாவுக்கு காரணமான சாரதிக்கு விளக்கமறியல்
[ ஞாயிற்றுக்கிழமை, 28 டிசெம்பர் 2014, 09:50.19 AM GMT ]
ஏ.ரீ.எம். வங்கி அட்டை மூலம் பண மோசடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் சந்தேகத்தின்பேரில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மூவரையும்
பிணையில் செல்ல பருத்தித்துறை நீதிமன்ற நீதவான் ஜெ.கஜநிதிபாலன் அனுமதியளித்தார்.
இந்த வழக்கு நேற்று முன்தினம் வெள்ளிக்கழமை விசாரணைக்கு வந்தபோது, பிணையாளர்கள் 10 வருடங்கள் தொடர்ச்சியாக யாழ் மாவட்டத்தை வதிவிடமாக கொண்டவர்களது 2 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் செல்ல முடியும் என நீதவான் தெரிவித்தார்.
அத்துடன் சந்தேக நபர்கள் மீதான வழக்கு விசாரணையை ஜனவரி 09 ம் திகதிக்கு நீதவான் ஒத்தி வைத்தார்.
கடந்த 4ம் திகதி ஏ.ரீ.எம் வங்கி அட்டை மூலம் பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சந்தேக நபர்கள் மூவரும் பொலிகண்டிப் பகுதியில் வைத்து, வல்வெட்டித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அவர்களிடம் இருந்து 69 ஏ.ரீ.எம் அட்டையிகளை பொலிஸார் மீட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் சேர்ந்த 55 மற்றும் 24 வயதுடைய இருவரும் ஹட்டன் பகுதியைச் சேர்ந்தவர்கள். மற்றையவர் வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
குடும்பப் பெண்ணின் சாவுக்கு காரணமான சாரதிக்கு விளக்கமறியல்
ஹயஸ் வான் மோதி 35 வயதுப் பெண் உயிரிழந்தமை தொடர்பாக கைது செய்யப்பட்ட வானின் சாரதியை ஜனவரி 09ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் உத்தரவிட்டார்.
கடந்த வியாழக்கிழமை மாலை நீர் எடுக்கச் தாய் மற்றும் மகள் மீது தென்னிலங்கையில் இருந்து யாழ் நோக்கி வந்த ஹயஸ் வான் கொடிகாமம் - நாவலடி பகுதியில் மோதித்தள்ளியது.
இவ்விபத்தில் தாய் பலியானதுடன், மகள் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்நிலையில் வானை செலுத்தி வந்த கொழும்பு - களனி பகுதியினை சேர்ந்த 40வயதான சாரதியை கொடிகாமம் பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszCRcKafs0.html
பண்டாரவளை பிரதேசத்தில் மண்சரிவு!
[ ஞாயிற்றுக்கிழமை, 28 டிசெம்பர் 2014, 10:20.38 AM GMT ]
பண்டாரவளை குருக்குந்தேகம பிரதேசத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
5 ஏக்கர் நிலத்தில் பெருந்தோட்ட பயிர்ச்செய்கை மற்றும் இரண்டு வீடுகள் மண் சரிவில் சிக்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
மண் சரிவு எச்சரிக்கை காரணமாக அப்பிரதேசத்திலிருந்தவர்கள் ஏற்கனவே வெளியேறியுள்ளதாக கூறப்படுகின்றது.
http://www.tamilwin.com/show-RUmszCRcKafs1.html

மட்டக்களப்பில் மைத்திரியின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்! ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்
[ ஞாயிற்றுக்கிழமை, 28 டிசெம்பர் 2014, 10:20.54 AM GMT ]
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் நாளை நடைபெறவுள்ள மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டவர்கள் மீது ஆயுததாரிகளினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இன்று காலை இரண்டு வெள்ளை நிற வான்களின் துப்பாக்கிகள், பொல்லு மற்றும் கத்திகளுடன் வந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை சேர்ந்தவர்களே இந்த தாக்குதலை நடத்தியதாக ஐ.தே.க.கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பிரச்சாரத்திற்கு பொறுப்பான க.மோகன் தெரிவித்தார்.
இதன்போது இருவர் படுகாயமடைந்துள்ளதுடன், ஒருவர் காணாமல்போயுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறையிடச் சென்றபோது முறைப்பாட்டினை பெற்றுக் கொள்வதில் இழுத்தடிப்புகள் செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
தம்மீது தாக்குதல் நடத்தியவர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு தெரிவித்தபோதிலும் அவர்கள் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszCRcKafs2.html

Geen opmerkingen:

Een reactie posten