[ செவ்வாய்க்கிழமை, 30 டிசெம்பர் 2014, 03:29.36 PM GMT ]
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அந்த இயக்கத்தின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இந்த கருத்தை வெளியிட்டார்.
பொதுவேட்பாளருக்கான ஆதரவை தாம் தேர்தல் தினம் நெருங்கும் தருணத்திலேயே அறிவிப்போம் என்றும் அவர்கள் கூறியிருந்தார்கள்.
ஆனால் அதற்கு முன்னதாக அவர்கள் வடக்கில் பல பிரதேசங்களில் மைத்திரி வரணய என்ற பெயரில் 5 பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரசார நடவடிக்கைகளுக்கு மில்லியன் கணக்கான நிதி தூதுவராலயங்கள் ஊடாக வழங்கப்பட்டிருந்தமையை நாம் அறிவோம்.
அமெரிக்க தூதுவர உள்ளிட்ட பல தூதரகங்கள் தமிழ் கூட்டமைப்புக்கு அறிவித்தல் அடிப்படையல் கட்டுப்பாடுகளுடன் இந்த நிதியை வழங்கியிருந்தன.
குறிப்பாக வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் வாக்குகளை பொது எதிரணிக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த தூதுரகங்கள் பணித்திருந்ததாக பொது பல சேனா இயக்கத்தின் பொது செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பொலன்னறுவை பிரதேசத்தில் அசாதாரண காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை எடுத்துச் சென்ற தமது பௌத்த பிக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் பொதுபல சேனாவின் செயலாளர் ஞானசார தேரர் குறிப்பிட்டார்.
இதில் ஒரு பௌத்த பிக்கு பலத்த காயமடைந்துள்ளார். நகரத்தில் துண்டு பிரசுரங்களை விநியோகிக்க சென்ற போதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszCQUKaex1.html
பெற்றுக்கொண்ட வெற்றியை இல்லாமல் செய்ய வேண்டாம்!- கோத்தபாய
[ செவ்வாய்க்கிழமை, 30 டிசெம்பர் 2014, 04:04.00 PM GMT ]
இன்று மாலை அலுத்கடே பிரதேசத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் சிலைக்கு அருகாமையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த மக்களுக்கு மாற்றமொன்றை செய்து கொடுத்துள்ளார்.
மற்றுமொரு மாற்றத்தின் பின்னால் சென்று ஈட்டிய வெற்றியை இல்லாமல் செய்ய வேண்டாம் என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பு நகரசபையின் எதிர்க்கட்சித் தலைவர் அஜந்த லியனகேவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாடசாலை மாணவர்களுக்கு பாடப் புத்தகம் வழங்கும் நிகழ்வில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCQUKaex4.html
மைத்திரிபாலவின் சட்டக் கடிதத்துக்கு திஸ்ஸ அத்தநாயக்க பதில் அனுப்பினார்!
[ செவ்வாய்க்கிழமை, 30 டிசெம்பர் 2014, 04:18.56 PM GMT ]
வடக்கில் இருந்து 50 வீதமான படையினரை விலக்கிக் கொள்ளல் உட்பட்ட விடயங்கள் தொடர்பில் ரணிலும் மைத்திரியும் உடன்படிக்கையை செய்துள்ளதாக திஸ்ஸ அத்தநாயக்க குற்றம் சுமத்தியிருந்தார்.
இது தொடர்பில் ஆவணம் ஒன்றையும் அவர் சமர்ப்பித்திருந்தார். எனினும் அதனை ரணில் விக்கிரமசிங்கவும், மைத்திரிபாலவும் நிராகரித்திருந்தனர்.
இதனைடுத்து நட்டஈட்டை கோரி திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு சட்டக் கடிதத்தையும் மைத்திரிபால சிறிசேன அனுப்பியிருந்தார்.
இந்தநிலையில் அந்தக் கடிதத்துக்கு பதில் அனுப்பியுள்ள திஸ்ஸ அத்தநாயக்கவின் சட்டத்தரணி, தேசப்பற்றுள்ள அரசியல்வாதி என்ற அடிப்படையில் தமது கட்சிக்காரர் செயற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடந்த 8 வருடங்களாக ரணிலுடன் செயற்பட்டவர் என்ற அடிப்படையில் தமது கட்சிக்காரர் ரணிலின் கையொப்பத்துக்கு நன்கு பரிச்சயமானவர்.
இந்தநிலையில் குறித்த ஆவணம் பொய்யானது என்று மைத்திரிபாலவின் சட்டத்தரணி, தெரிவித்திருந்த போதும் இரண்டு பேருக்கும் இடையில் குறித்த அம்சங்களை உள்ளடக்கிய உடன்படிக்கை எதுவும் செய்து கொள்ளப்படவி;ல்லை என்பதை மறுக்கவில்லை என்பதை திஸ்ஸ அத்தநாயக்கவின் சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCQUKaex6.html
சம்பந்தனும் ஹக்கீமும் ஆதரவளிக்காமலேயே தேர்தலில் வெற்றியீட்டினேன்: ஜனாதிபதி
[ செவ்வாய்க்கிழமை, 30 டிசெம்பர் 2014, 04:23.12 PM GMT ]
2010ம் ஆண்டு தேர்தலின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சம்பந்தோனோ அல்லது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ரவூப் ஹக்கீமோ எனக்கு ஆதரவளிக்கவில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இரண்டு கட்சிகளினதும் ஆதரவு இன்றியே நான் தேர்தலில் வெற்றியீட்டினேன். ஹக்கீமும் சம்பந்தனும் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவாகவே செயற்பட்டனர்.
கடந்த 2010ம் ஆண்டு தேர்தலில் 18 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றியீட்டினேன். இந்த தடவை 20 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றியீட்டுவேன்.
இனவாதத்தை தூண்டி, நாட்டை குழப்பமடையச் செய்து அதன் ஊடாக ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்ட இவர்கள் முயற்சிக்கின்றார்கள். எனினும் அதனை அவர்களினால் செய்ய முடியாது.
நாட்டில் பிரிவினைவாதத்தை எதிர்க்கும் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் நிச்சயமாக வெற்றிலைக்கு வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்வார்கள் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கிரிபத்கொட பிரதேசத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCQUKaex7.html
அரசாங்கத்திற்கு தோல்வி வெறி பிடித்துள்ளது!– மொஹான் ராஜ் மடவல
[ செவ்வாய்க்கிழமை, 30 டிசெம்பர் 2014, 04:32.47 PM GMT ]
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் நீலப்படையணியைச் சேர்ந்தவர்கள், நீலப்படையணியின் டீ சேர்டுகளுடன் பெண் ஒருவரை மிகவும் இழிவான வார்த்தைகளில் திட்டினார்கள்.
பின்னர் இசைக்கலைஞர் லக்ஸ்மன் விஜேசேகர மீது தாக்குதல் நடத்தினார்கள்.
நாம் நடத்திய நிகழ்ச்சி வெறும் அரசியல் கட்சி பிரச்சாரமன்று.
தற்போதைய சமூக கட்டமைப்பின் பல்வேறு பிரச்சினைகள் பற்றி தெளிவுபடுத்தும் ஓர் முயற்சியாகும்
குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் அரசியல் அடைக்கலம் பெற்றுக் கொள்கின்றனர்.
தாக்குதல்களை ஆளும் கட்சி மாகாணசபை உறுப்பினர் தொன் கமால் இந்திக்க வழிநடத்தியிருந்தார்.
ஆள் அடையாளத்தை உறுதி செய்தே இன்று மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றது.
அந்த அளவிற்கு நாட்டின் ஆட்சியாளர்கள் தோல்விப் பீதியில் உழலுகின்றனர் என மொஹான் ராஜ் மடவல தெரிவித்துள்ளார்.
சொலிஸ் ஹோட்டலில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இன்று பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCQUKbnoz.html
Geen opmerkingen:
Een reactie posten