யாழ்ப்பாணம் துன்னாலை மேற்கு பகுதியில் தனது தந்தையை தாக்கிய மகனை செவ்வாய்க்கிழமை (30) வரையில், விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளதாக நெல்லியடி பொலிஸார், திங்கட்கிழமை (29) தெரிவித்தனர்.
துன்னாலை மேற்கு தாமரை குளத்தடியில் ஞாயிற்றுக்கிழமை (28) இடம்பெற்ற இந்த சம்பவத்தில், மகனின் தாக்குதலில் படுகாயமடைந்த ரீ.தர்மகுலசிங்கம் (வயது58) என்பவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
தந்தையின் சொத்தை பங்கிடுவதில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதில், சைக்கிளுக்கு காற்று அடிக்கும் பம்பால் தந்தையை மகன் தாக்கியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு மகனை கைது செய்து நீதவானின் வாசஸ்தலத்தில் ஆஜர்ப்படுத்திய போது, நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Geen opmerkingen:
Een reactie posten