தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 27 december 2014

பசிலுடன் பேச்சுவார்த்தை தோல்வி: ஹக்கீம் தலைமையில் முஸ்லிம் காங்கிரஸ் வெளியேறுகிறது!



சிங்கள மகா வித்தியாலய அதிபரின் காரியாலயத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள் எரிப்பு
[ சனிக்கிழமை, 27 டிசெம்பர் 2014, 07:51.09 AM GMT ]
ஹற்றன் ஸ்ரீபாத சிங்கள மகா வித்தியாலய அதிபரின் காரியாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நேற்று மாலை 3 மணியளவில் அதிபரின் காரியாலயத்திற்கு பிற்பகுதியில் வந்த சிலர் காரியாலயத்தில் இருந்த சில முக்கியமான ஆவணங்களை தீ வைத்து எரித்துள்ளதாகவும் ஆவணங்கள் உட்பட மேசை கதிரைகளையும் எரித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நான்காவது முறையாகவும் தனது காரியாலயத்தை உடைத்துள்ளதாக அதிபர் உப்பாலி திலகரத்ண பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.
அதிபருக்கும் ஆசிரியர்களுக்கும் உள்ள ஒரு முரண்பாடு காரணமாக இச்சம்பவம் ஏற்பட்டிருக்கலாம் என ஹற்றன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmszCRbKagv0.html
பேருவளை பிரதேசத்துக்கு அதிரடிப்படையினர் பாதுகாப்பு
[ சனிக்கிழமை, 27 டிசெம்பர் 2014, 08:47.49 AM GMT ]
பேருவளை பிரதேசத்தின் பாதுகாப்பிற்காக விசேட பொலிஸ் பாடையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அரசியல் குழுக்கள் இரண்டிற்கு இடையில் நேற்று இரவு இடம் பெற்ற மோதல் காரணமாக விசேட பொலிஸ் பாடையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி அஜித் ரோஹன தெரிவித்தார்.
மோதல் சம்பவத்தினால் மூவர் காயமடைந்துளளனர்.
http://www.tamilwin.com/show-RUmszCRbKagv2.html

மலையகப்பகுதியில் தொடர்ந்தும் பெய்யும் கடும் மழை காரணமாக போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது
[ சனிக்கிழமை, 27 டிசெம்பர் 2014, 09:18.01 AM GMT ]
மலையகப்பகுதியில் தொடர்ந்தும் பெய்யும் கடும் மழை காரணமாக போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஹட்டன் கொழும்பு பிரதான வீதியிலும் ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியிலும் மண்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் வீதி வழுக்கும் தன்மையாக இருப்பதனாலும் வாகன சாரதிகளை மிகுந்த அவதானத்துடன் செலுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா பங்களாஅத்த பகுதியில் ஏற்பட்டிருந்த மண்சரிவு தற்போது அகற்றப்பட்டுள்ளதாவும் எனினும் தொடர்ந்து மண்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் இதனால் இவ்வீதியினூடாக செல்லும் வாகன சாரதிகளை அவதானத்துடன் செல்லுமாறு பொலிஸார் மேலும் அறிவுறுத்தியுள்ளனர்.
நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் இடைக்கிடையே மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் வாகனசாரதிகள் அவதானமாக செயற்படுமாறு மாவட்ட செயலாளா் டீ.பீ.ஜு குமாரசிறி தெரிவிக்கின்றார்.
http://www.tamilwin.com/show-RUmszCRbKagv3.html
குடிபோதையில் வாகனம் செலுத்திய 163 சாரதிகள் கைது - கேரளா கஞ்சா 140 கிலோவுடன் இலங்கையர் இந்தியாவில் கைது
[ சனிக்கிழமை, 27 டிசெம்பர் 2014, 09:31.11 AM GMT ]
குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் விசேட நடவடிக்கையில் 84 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியால காலப்பகுதியினுள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய மோட்டார் சைக்கிள் சாரதிகள் 42 பேரும், முச்சக்கரவண்டி சாரதிகள் 29 பேரும், மோட்டார் வாகன சாரதிகள் 10 பேரும் வேன் சாரதிகள் மற்றும் வேறு வாகன சாரதிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த 24 ஆம் திகதியிலிருந்து நேற்று காலை 6.00 மணிவரை உள்ளிட்ட காலபகுதியில் போதையில் வாகனம் ஓட்டடியவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் கைது செய்யப்பட்டவர்களின் முழு எண்ணிக்கை 163 என தெரியவந்துள்ளது.
கேரளா கஞ்சா 140 கிலோவுடன் இலங்கையர்கள் இருவர் இந்தியாவில் கைது
இலங்கைக்கு கொண்டுவர திட்டமிட்டிருந்த கேரளா கஞ்சா 140 கிலோவுடன் இலங்கையர்கள் இருவர் தமிழ் நாட்டில் ராமநாதபுரத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ் கஞ்சாவின் பெறுமதி இந்தியா தொகையில் ஒன்றரை கோடி ரூபாவாகும்.
அவ்விருவருடன் இந்தியர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் தெரிவிக்கின்றது.
தமிழ் நாட்டில் யானிப்பார் என்ற தீவினூடாக கஞ்சாவை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு முயற்சித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
http://www.tamilwin.com/show-RUmszCRbKagv4.html
கம்மன்பிலவுடன் ஜாதிக ஹெல உறுமயவின் நேரடி விவாதம்
[ சனிக்கிழமை, 27 டிசெம்பர் 2014, 09:32.04 AM GMT ]
ஹெல உறுமயவுக்கும் அதில் இருந்து விலகிச்சென்றுள்ள மேல் மாகாணசபை உறுப்பினர் பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பிலவுக்கும் இடையில் நேரடி தொலைக்காட்சி விவாதத்தை நடத்த உள்ளுர் தொலைக்காட்சி சேவை ஒன்று முன்வந்துள்ளது.
ஹெல உறுமய ஏற்கனவே சவால் விடுத்தமைக்கு அமைய இந்த விவாதத்தை இதனை எதிர்வரும் 29ஆம் திகதி நடத்த தொலைக்காட்சி நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
இந்த விவாதத்தில் ஜாதிக ஹெல உறுமயவின் சார்பில் அதன் முக்கிய உறுப்பினர் அநுருத்த பிரதீப் பங்கேற்கவுள்ளார்.
இந்தநிலையில் தாம் 29ஆம் திகதி நடைபெறவுள்ள நேரடி விவாதத்தில் வேறுப்பணிகள் காரணமாக பங்கேற்க முடியாது என்று தெரிவித்துள்ள உதய கம்மன்பில, தமது நிகழ்ச்சியை முன்கூட்டி பதிவு செய்து ஒளிபரப்புமாறு கோரியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRbKagv5.html

வெலிமடை வீதி தாழ் இறங்கியுள்ளது
[ சனிக்கிழமை, 27 டிசெம்பர் 2014, 09:35.32 AM GMT ]
துளை நுவரெலியா பிரதான வீதியில் வெலிமடை ரிப்பொல பகுதியில் பிரதான வீதி தாழ் இறங்கியுள்ளது.
இதனால் அவ்வீதியினூடாக பயணம் செய்யும் வாகனசாரதிகள் மாற்றுவழியை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszCRbKagv6.html
பசிலுடன் பேச்சுவார்த்தை தோல்வி: ஹக்கீம் தலைமையில் முஸ்லிம் காங்கிரஸ் வெளியேறுகிறது!
[ சனிக்கிழமை, 27 டிசெம்பர் 2014, 09:38.43 AM GMT ]
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஹக்கீம் தலைமையில் இன்று அரசாங்கத்தை விட்டு வெளியேறுவது உறுதியென கட்சி முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.
கடைசி நேரத்தில், ரவூப் ஹக்கீம் உட்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் இன்று காலை அமைச்சர் பசில் ராஜபக்‌சவுடன் 45 நிமிடங்கள் அளவில் மேற்கொண்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்திருப்பதாகவும் தெரிய வருகின்றது.
இந்நிலையில், முஸ்லிம் காங்கிரஸ் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்குவது குறித்து இன்று பிற்பகல் அறிவிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmszCRbKagv7.html

Geen opmerkingen:

Een reactie posten