பான் கீ மூன் மிது கடுப்பான மகிந்த அணி…
கடந்த இரண்டு ஆண்டுகளில் முஸ்லிம்கள் மீது 350 தாக்குதல்களும் கிறிஸ்தவர்கள் மீது 150 தாக்குதல்களும் நடத்தப்பட்டுள்ளதாக பான் கீ மூன் வெளியிட்டுள்ள கருத்து முற்றிலும் பிழையானது என அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரங்கள் ஆரம்பிக்கப்பட்டு ஆறு வாரங்கள் ஆகியுள்ளதாகவும் இந்தக் காலப்பகுதியில் ஒரு முஸ்லிமேனும், ஒரு கிறிஸ்தவரேனும் தாக்கப்படவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய இரண்டு கட்சிகளும் எதிர்க்கட்சிக்கு ஆதரவளித்த போதிலும், எவ்வித பிரச்சினைகளும் ஏற்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளது.
மிகவும் அமைதியான ஜனநாயகமான முறையில் குறித்த இரண்டு கட்சிகளும் எதிர்க்கட்சிக்கு ஆதரவளித்ததாகவும், அதனை ஆளும் கட்சி எந்த சந்தர்ப்பத்திலும் எதிர்க்கவில்லை எனவும் தெரிவித்துள்ளது. சிறுபான்மை சமூகம் பற்றிய கருத்துக்கள் வெளியிடுவதற்கு முன்னதாக பான் கீ மூன் அவை சரியானதா அறிந்து கொள்ள வேண்டியது அவசியமானது என சுட்டிக்காட்டியுள்ளது.
அச்சமின்றி அனைவரும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவும் வாக்களிக்கவும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. எனவே தேர்தல் அமைதியான நடத்தப்பட வேண்டுமென அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கவோ அல்லது சிறுபான்மை சமூகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவோ பான் கீ மூன் கருத்து வெளியிடக் கூடாது என குறிப்பிட்டுள்ளது.
http://www.jvpnews.com/srilanka/92273.html
எரிக் சொல்ஹெய்ம் சுயநலவாதி ராஜீவ விஜயசிங்க
சுமாதான செயற்பாடுகளை ஒருங்கிணைக்கும் செயலகத்தின் தலைவராக தான் பணியாற்றிய காலப்பகுதி குறித்த தனது அனுபவத்தை அடிப்படையாக வைத்து இந்த முடிவிற்கு தான் வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பேட்டியொன்றில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.
பொதுவாகவே நோர்வேயை சேர்ந்தவர்கள் சிறந்த முறையில் நடந்துகொண்டனர், தூதுவர்கள் துணிச்சலுடன் விடுதலைப்புலிகளை எதிர்கொண்டனர். எனது காலத்தில் கண்காணிப்பு குழுவின் தலைவராக பணியாற்றியவர், சமநிலையுடன் நடந்துகொண்டார்,
எனினும் இலங்கை குறித்தும் அதன் ஐக்கியம் குறித்தும் முற்கற்பிதங்களுடனும் அவர்களில் சிலர் நடந்துகொண்டனர்.
குறிப்பாக யுத்தநிறுத்த கண்காணிப்பு குழுவிற்கு தலைமை தாங்கிய சுவீடனின் ஜெனரல் ஒருவர் அவ்வாறான உணர்வுகளை கொண்டிருந்தார், அவர் குறித்த எனது எதிர்ப்புகளை வெளிவிவகார அமைச்சின் ஊடாக வெளியி;.ட முயன்று நான் தோல்வியடைந்தேன்.
மேலும் யுத்தநிறுத்தம் கைச்சாத்திடப்பட்டவேளை நோர்வே தூதுவராக காணப்பட்டவரும் விடுதலைப்புலிகளுக்கு சார்பாக காணப்பட்டார்,எண்பதுகளில் தமிழ் மக்களுக்கு எதிராக ஜே.ஆர் அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் அவரை பாதித்திருக்கவேண்டும்.
இறுதியாக எரிக்சொல்ஹெய்ம் என்னைபொறுத்தவரை நம்ப முடியாதவராக காணப்பட்டார், நான் இது குறித்து அவரை அங்கீகரித்த ரோஹிதபோஹல்லாகம உட்பட பலரிடம் தெரிவித்திருந்தேன். சொல்ஹெய்ம் அக்காலத்தில் அவ்வளவு செல்வாக்கு செலுத்தியது துரதிஸ்டவசமானது.அவரது நிகழ்ச்சி நிரல் எப்போதும் சுயநலம்மிகுந்ததாகவே காணப்பட்டது.
http://www.jvpnews.com/srilanka/92270.html
புலிகளின் டொரன்டோ கடைகளில் மைத்திரியின் படங்கள்…. பந்துல ஜயசேகர
புலிகளின் தலைவர் பிரபாகரனின் படங்கள் மட்டுமே காட்சிப்படுத்தப்பட்ட கடைகளில் இவ்வாறு மைத்திரிபாலவின் படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் வலையமைப்பு தொடர்ந்தும் இயங்கி வரும் பல இடங்களிலும் இவ்வாறு மைத்திரிபாலவிற்கு ஆதரவளிப்பதற்கு மகிழ்ச்சி வெளியிடப்பட்டுள்ளது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
லண்டனிலும் இவ்வாறு படங்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். மைத்திரிபால சிறிசேனவை பயன்படுத்தி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸசவை தோறகடிக்க முயற்சிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/92267.html
Geen opmerkingen:
Een reactie posten