தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 29 december 2014

கிண்ணியாவில் மைத்திரியின் கூட்டம்! பொதுமக்களைத் தடுக்க இராணுவம் மூலம் அரசாங்கம் முயற்சி

ஹக்கீம் ஒரு அரசியல் விபச்சாரி! மீண்டும் அரசுடன் இணைவார்!– ஞானசார தேரர்
[ திங்கட்கிழமை, 29 டிசெம்பர் 2014, 11:47.47 AM GMT ]
ஜனாதிபதித் தேர்தல் முடிந்ததும் ரவூப் ஹக்கீம் மீண்டும் அரசாங்கத்தில் இணைந்து கொள்வார் என பொதுபலசேன பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
ஞானசார தேரர், இன்று திங்கட்கிழமை கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஒரு அரசியல் விபச்சாரி எனவும், 2005 மற்றும் 2010 ஆகிய தேர்தல்களிலும் ஹக்கீம் எதிர்க்கட்சி வேட்பாளருக்கே ஆதரவு அளித்ததாகவும் தேரர் இங்கே சுட்டிக்காட்டினார்.
ரவூப் ஹக்கீம் – மைத்திரிபால சிறிசேன இரகசிய உடன்படிக்கைகள் மற்றும் ஹக்கீம் – சந்திரிகா இரகசிய உடன்படிக்கைகள் என்பன வெளிப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
2002ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் முஸ்லிம் மக்களைக் கொன்ற போது ஹக்கீம் பிரபாகரனுடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதாகவும், நாட்டுக்கு சமாதானம் பெற்றுக் கொண்ட பயணத்தில் நாட்டுக்காக முஸ்லிம் காங்கிரஸில் எவரும் உயிர்த்தியாகம் செய்யவில்லை என்றும் ஞானசார தேரர் தெரிவித்தார்.
ரவூப் ஹக்கீம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து சிங்களவர்களுக்கு எதிராக சர்வதேசத்தில் சூழ்ச்சி செய்தவர் என்று தேரர் சுட்டிக்காட்டினார்.
பாட்டளி சம்பிக்க போன்றவர்கள் அமைச்சரவையில் சத்தமிடாது இன்று எதிர்க்கட்சி மேடைகளில் இருந்து கொண்டு அரசாங்கத்திற்கு எதிராக சத்தமிடுவதாகவும், நாட்டில் இன்று மாற்றம் மாற்றம் என பேசப்படுவதாகவும், அந்த மாற்றம் அழிவின்றி சிறந்ததாக இருந்தால் நல்லதே எனவும் ஞானசார தேரர் தெரிவித்தார்
http://www.tamilwin.com/show-RUmszCRdKaeq6.html

லண்டன் நம்பிக்கை ஒளி இணைக்கும் இதயங்கள் அறக்கட்டளை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கோணாவில் மக்களுக்கு உதவி
[ திங்கட்கிழமை, 29 டிசெம்பர் 2014, 11:50.45 AM GMT ]
தொடர்மழை காரணமாக மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி, நாடு முழுதும் மக்கள் பொது இடங்களிலும் பாடசாலைகளிலும் தங்கியிருக்க வேண்டியிருக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.
கிளிநொச்சியிலும் எல்லா பிரதேச செயலர் பிரிவுகளிலும் மக்கள் வெள்ளப்பாதிப்புக்களால் இடம்பெயர்ந்து பல்வேறு பொது இடங்கள் பாடசாலைகள் மற்றும் சனசமூக நிலையங்கள் என பல இடங்களில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் இவர்களுக்கு உடனடியாக உதவிகளை செய்யும் வகையில் பா.உறுப்பினர் சி.சிறீதரன் தலைமையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அனர்த்த முகாமைத்துவ பிரிவு, புலம் உறவுகளின் அமைப்புக்கள், உள்ளூரில் உள்ள கருணை உள்ளங்கள் மற்றும் வடமாகாண சபையின் விவசாய அமைப்பு என்பவற்றை இணைத்து இயங்கிவருவதுடன் மக்களுக்கு நேரடியாக சென்று உலர் உணவுப் பொதிகள் குழந்தைகளுக்கான பால் மா பிஸ்கட் என்பவற்றை வழங்கி வருகின்றது.
நேற்று கோணாவிலில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு லண்டன் நம்பிக்கை ஒளி அமைப்பின் இணைக்கும் இதயங்கள் அறக்கட்டளை வழங்கியுள்ளது.
இந்த பணிகளில் பா.உறுப்பினர்சி சிறீதரன், நம்பிக்கை ஒளி அமைப்பின் இணைப்பாளர் சுபாஸ், வடமாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை, கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்களான சுப்பையா, தயாபரன், அக்கராயன் பிரதேச கட்சியின் அமைப்பாளர் கரன், கட்சியின் மாவட்டத்தின் இளைஞர் அணி செயலாளர் சர்வானந்தா உட்பட கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszCRdKaeq7.html


கிண்ணியாவில் மைத்திரியின் கூட்டம்! பொதுமக்களைத் தடுக்க இராணுவம் மூலம் அரசாங்கம் முயற்சி
[ திங்கட்கிழமை, 29 டிசெம்பர் 2014, 11:56.52 AM GMT ]
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் கிண்ணியாவில் நடைபெறவுள்ள பிரச்சாரக் கூட்டத்திற்கு பொதுமக்களை வர விடாமல் தடுக்கும் பணியில் அரசாங்கம் இராணுவத்தை ஈடுபடுத்தியுள்ளது.
தற்போதைய நிலையில் கிண்ணியாவின் திருகோணமலைக்கான பாதை தவிர அனைத்துப் பகுதிகளும் வெள்ளத்தால் மூடப்பட்டுள்ளது. கிண்ணியா- தம்பலகாமம், கிண்ணியா மூதூர் பாதைகள் தற்போது முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இந்நிலையில் இப்பகுதிகளில் படகு மூலமான போக்குவரத்து மூலமாகவே மக்கள் மூதூர் மற்றும் தம்பலகாமம் இடையிலான போக்குவரத்தில் ஈடுபட்டிருந்தனர்.
எனினும் இன்று கிண்ணியாவில் நடைபெறவுள்ள எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் பிரச்சாரக் கூட்டத்தை தடுக்கும் முயற்சியில் அரசாங்கம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
இதற்காக கிண்ணியா - மூதூர் மற்றும் கிண்ணியா - தம்பலகாமம் பகுதிகளுக்கான படகு போக்குவரத்து இராணுவத்தினரால் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அப்பிரதேச மக்கள் கிண்ணியாவில் நடைபெறவிருக்கும் பொது வேட்பாளர் மைத்திரிபாலவின் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொள்வது தடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பொது மக்கள் இராணுவத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போதும், இராணுவத்தினர் கடுமையான முறையில் பொதுமக்களுடன் நடந்து கொள்ளத் தலைப்பட்டதால் பொதுமக்கள் தமது முயற்சியைக் கைவிட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszCRdKaery.html

Geen opmerkingen:

Een reactie posten