தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 28 december 2014

கொட்டாஞ்சேனையில் பொலிஸாரை அச்சுறுத்திய ஆயுததாரிகள்!

பிரதியமைச்சர் நிசாந்த முத்துஹெட்டிகம கைது - நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுத்த நடவடிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 28 டிசெம்பர் 2014, 06:14.54 AM GMT ]
பிரதியமைச்சர் நிசாந்த முத்துஹெட்டிகம, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
வந்துராம்ப பொலிஸ் நிலையத்திற்குள் அத்து மீறி பிரவேசித்து சந்தேக நபர்களை பலவந்தமாக அழைத்துச் சென்றதாக முத்துஹெட்டிகம மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்து நிலையில் முத்துஹெட்டிகம சிங்கப்பூருக்கு சென்றிருந்தார்.
முத்துஹெட்டிகம நாடு திரும்பியதும் அவரை விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுத்த நடவடிக்கை
பிரதி அமைச்சர் நிசாந்த முத்துஹெட்டிகம நீர்கொழும்பு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.
பெத்தேகம நீதிமன்றினால் பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிசாந்த முத்துஹெட்டிகம கடந்த 26ம் திகதி அதிகாலை சிங்கப்பூர் சென்றிருந்தார்.
வந்துராம்ப பிரதேசத்தில் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் மேடையை தாக்கிய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட தமது மூன்று பாதுகாவலர்களை பலவந்தமாக பொலிஸ் நிலையத்திருந்து அழைத்துச் சென்றதாக பிரதி அமைச்சர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இன்று கட்டுநாயக்க விமான நியைலத்தை வந்தடைந்த பிரதி அமைச்சரை கைது செய்ய 25 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர் என விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமான நிலையத்தின் விசேட பிரபுக்கள் பயணம் செய்யும் பகுதியில் பொலிஸாரை குவித்து நிசாந்த முத்ஹெட்டிகமவை கைது செய்துள்ளனர். 
நிசாந்த முத்துஹெட்டிகம 30 திகதி வரையில் விளக்க மறியலில்
பிரதி அமைச்சர் நிசாந்த முத்துஹெட்டிகமவை 30ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட நிசாந்த முத்துஹெட்டிகம நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
முத்துஹெட்டிகமவை எதிர்வரும் 30ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைத்து விசாரணை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கைது செய்பய்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களை பலவந்தமாக வாகனத்தில் ஏற்றிச் சென்றதாக பிரதி அமைச்சர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszCRcKafq1.html
மகிந்த அரசினால் மூவின மக்களையும் ஒன்றிணைத்து ஐக்கியம் ஏற்படுத்த முடியவில்லை: ரணில்
[ ஞாயிற்றுக்கிழமை, 28 டிசெம்பர் 2014, 06:41.33 AM GMT ]
விடுதலைப் புலிகளுக்கு எதிராக போர் 2009 ஆம் ஆண்டு முடிவிற்கு கொண்டு வரப்பட்ட போதும் இதுவரை மகிந்த அரசினால் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களை ஒன்றிணைத்து ஐக்கியம் ஏற்படுத்த முடியவில்லை என ஐ.தே.கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
நேற்று இரவு கல்முனை, சந்தாங்கேனி மைதானத்தில் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து நடைபெற்ற கூட்டத்தில் இதனைத் தெரிவித்தார்.
இந்நிகழ்விற்கு ஐ.தே.கட்சியின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அம்பாறை மாவட்ட ஐ.தே.கட்சியின் அமைப்பாளரும், கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான தயாகமகே, பாராளுமன்ற உறுப்பினர் அனோமா தயாகமகே மற்றும் அம்பாறை மாவட்ட அனைத்து தொகுதிகளினதும் அமைப்பாளர்கள் மற்றும் ஏனைய கட்சிகளின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர்,
எனது நண்பன் மகிந்த ராஜபக்ஷ பல வருடங்களாக மக்கள் பணி செய்து களைப்பில் இருப்பதனால் அவரை எதிர்வரும் 8 ஆம் திகதியுடன் அவருக்கு ஓய்வு கொடுத்து அவரை அமைதியாக இருக்க வைப்பதற்காகத்தான் நாங்கள் இந்த தேர்தலில் மைத்திரியை போட்டியிட வைத்திருக்கின்றோம்.
மக்கள் மகிந்த ராஜபக்ஷவிற்கு வாக்களித்து ஜனாதிபதியாக்கியதன் உண்மையான நோக்கம் அனைத்து இனங்களும் ஐக்கியத்துடன் வாழவேண்டும் என்பதற்காகவே ஆனால் இன்று அது நடைபெறாமல் முற்றிலும் மாறுபட்டே சென்று கொண்டிருக்கின்றது.
அவர் இதற்காக வேண்டி எல்.எல்.ஆர்.சீ ஆணைக்குழுவை ஏற்படுத்தி இதன் மூலம் அனைத்து மக்களுக்கும் சேவை செய்வதென்று அறிவித்திருந்தார்.
இறுதியில் ஆனது என்ன? யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான தீர்வு இல்லை, இன ஐக்கியம் இல்லை, அவற்றை செய்யாமல் மகிந்த இனத்துவேசத்தினை கக்கி ஆட்சி நடத்தி வருகின்றார்.
இந்த நாட்டிலே இனங்களுக்கிடையே மதவாதத்தினை தூண்டி இனமுறுகல்களை ஏற்படுத்தி வழிபாட்டுத்தலங்களை அழித்து அவர்களுக்கு உரித்தான கலாசாரத்தினையும் அழித்து மதுபானசாலைகளையும், குடு வியாபாரத்தினையும், எதனோல், கசினோ, போன்றவைகளை ஆதரித்து மக்களை மோதவிட்டு அரசியல் நடத்தி வருகின்றார்.
இன்று அவரது தந்திரத்தை பயன்படுத்தி தெற்கிலே இனவாதத்தினை தூண்டி தேர்தலில் தான் வெற்றி பெறலாம் என்று கனவு கண்டார்.
ஆனால் நடந்தது என்ன அவருடைய கூட்டனியில் இருந்த பல கட்சிகள் பிரிந்து பொது எதிரணி வேட்பாளருக்கு ஆதரவு வழங்க முன்வந்திருக்கின்றது.
இவை தவிர தமிழ், முஸ்லிம் அமைப்புக்கள், எம்முடன் கைகோர்த்து நிற்கின்றது.
தாங்கள் எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலை வெற்றி கொள்வோம். வெற்றி கொண்ட பின்னர் 2005 ஆம் ஆண்டு என்னால் செய்ய முடியாமல் போன அனைத்தையும் 2015ஆம் ஆண்டு நிச்சயம் செய்து தருவேன்.
குறிப்பாக கல்முனையில் அபிவிருத்தி அதிகாரசபையை நிறுவி புதிய நகரமாக மாற்றியமைப்பேன் வேலையில்லா பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு அனைவருக்கும் அதிகூடிய சம்பளத்துடனான வேலை வாய்ப்பினை பெற்றுக்கொடுப்பேன்.
அரச. அரச சார்பற்ற ஊழியர்களுக்கு சம்பளத்தினை அதிகரிப்பதோடு வெளிநாட்டு முகவர்களை அழைத்து வந்து பெரியளவிலான தொழிற்சாலைகளை அமைப்போம் எனவும் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmszCRcKafq3.html
சுதந்திரக் கூட்டமைப்பின் உடன்படிக்கை திருத்தி அமைக்கப்பட வேண்டுமென கோரிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 28 டிசெம்பர் 2014, 06:47.35 AM GMT ]
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உடன்படிக்கை மீள திருத்தி அமைக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அமைக்கப்பட்டது.
இந்தக் கூட்டமைப்பில் ஜாதிக ஹெல உறுமய, தேசிய சுதந்திர முன்னணி, கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜ கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினால் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டப்பட்ட உடன்படிக்கையில் சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இடதுசாரி கட்சிகளினால் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் எதேச்சாதிகாரமாக தீர்மானங்களை எடுக்கவும் நினைத்தவாறு கூட்டமைப்பிலிருந்து விலகிக் கொள்ளவும் தற்போதைய உடன்படிக்கையில் சந்தர்ப்பம் காணப்படுகின்றது.
இந்த சந்தர்ப்பத்தை முடக்கும் வகையில் புதிய உடன்படிக்கையொன்று தயாரிக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி சிறு கட்சிகளுடன் செய்து கொண்ட உடன்படிக்கைக்கு நிகரான உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட வேண்டுமென பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmszCRcKafq4.html

முல்லைத்தீவில் கடைகள் உடைத்து நுட்பமான முறையில் கொள்ளை!
[ ஞாயிற்றுக்கிழமை, 28 டிசெம்பர் 2014, 06:53.39 AM GMT ]
முல்லைத்தீவு கள்ளப்பாட்டில் பல்பொருள் வணிகக்கடை மற்றும் கடற்றொழில் உபகரண வணிகக்கடை ஆகியவற்றில் நேற்றிரவு கொள்ளையிடப்பட்டுள்ளது.
நா.சிவலோகநாதன் என்பவருக்கு சொந்தமான பல்பொருள் வாணிகக்கடையில் சுமார் இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட பெறுமதியுள்ள பொருட்கள் சூறையாடப்பட்டுள்ளதாக அறியவருகிறது.
இந்த நிலையில், வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
அத்துடன், சம்பவ இடத்திற்கு முல்லைத்தீவு பொலிசாரும் நேரில் பார்வையிட்டுச் சென்றுள்ளனர்.
சில வாரங்களுக்கு முன்னர் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கருவேலங்கண்டல் பகுதியில் பிரபல தமிழ் ஒப்பந்தக்காரர் ஒருவரின் வீட்டில் கொலை, கொள்ளை முயற்சி பொலிசார் ஒருவரின் துணையுடன் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் நேற்றைய இச்சம்பவம் மக்களுக்கு அச்சத்தை தோற்றுவித்துள்ளது.
கூரிய ஆயுதங்களின் உதவியுடன் பல கொள்ளையாளர்கள் வாகன உதவியுடன் மேற்கொண்டிருக்கலாம் என மக்கள் சந்தேகம் வெளியிட்டதாக ரவிகரன் தெரிவித்தார்.
சம்பவம் அப்பகுதி வாழ் மக்களிடையே சற்று பதற்ற நிலையை தோற்றுவித்துள்ளதாவும் அவர் மேலும் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszCRcKafq5.html
முன்னாள் அமைச்சர் ரிசாட்டிற்கு எதிராக வழக்குத் தொடர அரசாங்கம் ஆயத்தம்!
[ ஞாயிற்றுக்கிழமை, 28 டிசெம்பர் 2014, 07:07.14 AM GMT ]
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிசாட் பதியூதினுக்கு எதிராக வழக்குத் தொடர அரசாங்கம் ஆயத்தமாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வில்பத்து வனப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவ்வாறு சட்டவிரோதமான முறையில் கட்டடங்கள் அமைக்கப்பட்டமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஆளும் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் வனவளப் பாதுகாப்பு திணைக்கள உயர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இது தொடர்பில் சகல விடயங்களையும் உள்ளடக்கி ஒரு அறிக்கை தயாரிக்குமாறு சிரேஸ்ட உறுப்பினர் பணிப்புரை விடுத்துள்ளார். தகவல்களை உறுதிப்படுத்தப்படக் கூடிய சாட்சியங்களும் திரட்டப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதேவேளை அமைச்சர் பதியூதின் ஒரு இன சமூகத்திற்கு மட்டும் சார்பாக செயற்பட்டுள்ளதாகவும் இதற்கு எதிராக சில நிறுவனங்கள் சட்ட நடவடிக்கை எடுக்க ஆயத்தமாகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வில்பத்து வனப்பகுதியில் முன்னாள் அமைச்சர் ரிசாட் குடியேற்றங்கள் அமைத்த போது பொதுபல சேனா உள்ளிட்ட அமைப்புக்கள் எதிர்ப்பை வெளியிட்ட போதிலும் அரசாங்கம் அதனை பொருட்படுத்தவில்லை.
எனினும் ஆளும் கட்சியை விட்டு ரிசாட் விலகிக் கொண்டதனைத் தொடர்ந்து அவர் மீதான கெடுபிடிகள் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmszCRcKafq7.html
கொட்டாஞ்சேனையில் பொலிஸாரை அச்சுறுத்திய ஆயுததாரிகள்!
[ ஞாயிற்றுக்கிழமை, 28 டிசெம்பர் 2014, 07:17.08 AM GMT ]
கொழும்பு புளுமெண்டால் பகுதியில் சட்டவிரோதாக சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த சிலர், ரோந்து பணியில் ஈடுபட்ட பொலிஸாரை துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளனர்.
சட்டவிரோதமாக சுவரொட்டிகளை ஒட்டுவதை நிறுத்துமாறு பொலிஸார் கூறியதை அடுத்தே அவர்கள் பொலிஸாரை இவ்வாறு மிரட்டியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
சம்பவம் குறித்து கொட்டாஞ்சேனை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் பொலிஸாரை அச்சுறுத்திய ஆயுததாரிகள் குறித்து விசாரணைகள் ஆரம்பம்
கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் பொலிஸாரை அச்சுறுத்திய ஆயுததாரிகள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சட்டவிரோதமான முறையில் ஒட்டப்பட்டுள்ள தேர்தல் பிரச்சார சுவரொட்டிகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டிருந்த பொலிஸார் இன்று அதிகாலை அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.
பிரதான பேட்பாளர் ஒருவரின் சட்டவிரோத சுவரொட்டிகள் இவ்வாறு அகற்றப்பட்ட போது, ஆயுததாரிகள் பொலிஸாரை அச்சுறுத்தியுள்ளனர்.
அரசாங்க உயர்மட்டத்தினர் அதிகளவில் பயன்படுத்தும் டிபென்டர் ரக வாகனங்களில் வந்தவர்களே பொலிஸாரை எச்சரித்து பிரதேசத்தைச் விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
குறித்த சுவரொட்டிகளை அகற்ற வேண்டாம் என கூறி ஆயுதாரிகள் பொலிஸாரை எச்சரித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அச்சுறுத்திய சந்தேக நபர்கள் கைது செய்யப்படுவர் என குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRcKafrz.html

Geen opmerkingen:

Een reactie posten