[ சனிக்கிழமை, 27 டிசெம்பர் 2014, 04:34.30 PM GMT ]
இன்று ஓமந்தை பிரதேசத்தைச் சேர்ந்த நாவற்குளம், காயாங்குளம், மகிழங்குளம் கிராமங்களுக்கு நேரில் சென்று அங்கு மக்கள் படும் துயரங்ளை நேரில் பார்வையிட்டு அவர்களின் தேவைகள், குறைகள் தொடர்பில் கேட்டறிந்த பின்னர்,
புலம்பெயர் உறவுகள் வழங்கிய நிதியுதவியில் குழந்தைகளுக்கான பால்மா வகைகள், பிஸ்கட் வகைகள், சீனி, தேயிலை, தீப்பெட்டிகள், மெழுகுவர்த்திகள், பனடோல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி வைத்துள்ளார்.
அதன் பின்னர் கருத்துத் தெரிவித்த அவர்,
நாட்டில் பெய்துவரும் தொடர் மழையினால் வடக்கு கிழக்கு மாகாண குறிப்பாக வன்னி மாவட்ட மக்கள் பெரிதும் அல்லல் படுகின்றனர்.
குளங்கள் ஆறுகள் பெருக்கெடுத்து கிராமங்களுக்குள் பாய்வதால் மக்களின் குடிமனைகளுக்குள் குறிப்பாக மீள்குடியேற்றப்பட்ட மக்கள் கடந்த மூன்றாண்டுகளாக தற்காலிக குடிசைகளில் வாழ்ந்து வரும் சூழலில், அவர்களது குடிசைகளுக்குள் வெள்ளநீர் புகுந்து சேறும் சகதியுமாக வாழ்வதற்கே இயலாத அவலச்சூழல் ஏற்பட்டுள்ளது.
கைக்குழந்தைகளுடனும், சிறுபிள்ளைகளுடனும் முதியோர்களுடனும் செய்வதறியாது பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் பெரும் துயரத்தில் மூழ்கியுள்ளனர்.
கடும் குளிருக்கு மத்தியில் பாதுகாப்பற்ற கூரையின்கீழ் பெரிதும் துன்பப்படுகின்றனர்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட இந்திய அரசின் வீட்டுத்திட்டம் உட்பட ஏனைய நிறுவனங்களின் வீட்டுத்திட்டங்களை வழங்குவதில் நடைபெற்ற குளறுபடிகளே இன்றைய இந்த அவலநிலைக்கு காரணமாகும்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட உண்மையான தமிழ் மக்கள் பயனாளிகளாக தெரிவு செய்யப்பட்டு வீடுகள் வழங்கப்படவில்லை. வீட்டுத்திட்டத்தில் வழங்கப்பட்ட வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பாவனை இல்லாமல் பூட்டிக்கிடப்பதை பல இடங்களில் காணமுடிகின்றது.
ஆனால் ஒருபுறம் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு அன்றாட சாப்பாட்டிற்கே வழியற்ற சூழலில் ஒண்டுவதற்கும் பாதுகாப்பற்ற குடிசையில் தமிழ் மக்கள் வாழ்ந்துவரும் சோகத்தை வார்த்தைகளில் கூறிவிட இயலாதுள்ளது.
எனவே, அரசாங்கம் போர்க்கால அடிப்படையில் வன்னிப் பிரதேச மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதுடன் அவர்களின் நலிந்துபோயுள்ள வாழ்வாதாரத்தையும் கவனத்திலெடுத்து உரிய நிவாரணங்களை வழங்குவதற்கு முன்வர வேண்டும் என ஆனந்தன் எம்பி கோரிக்கை விடுத்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRbKagx7.html
போர்க்குற்றத்துக்கு எதிராக இராஜதந்திர போர்! பொதுவேட்பாளர் எதிரணி
[ சனிக்கிழமை, 27 டிசெம்பர் 2014, 04:51.18 PM GMT ]
போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணைகளின் மூலம் நாட்டை சீரழிக்கும் செயற்பாடுகளுக்கு எதிராக இராஜதந்திர போரை நடத்தப் போவதாக பொதுவேட்பாளர் எதிரணி தெரிவித்துள்ளது.
ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
கொழும்பு பொரளை பகுதியில் மைத்திரிபால சிறிசேனவுக்காக வீடுவீடாக சென்று பிரசாரம் நடத்தும் நடவடிக்கையின்போதே ரணவக்க இதனை குறிப்பிட்டார்.
இந்தநிலையில் அடுத்த ஞாயிற்றுக்கிழமைக்கு முன்னர் மைத்திhபாலவின் தேர்தல் அறிக்கை இலங்கையின் அனைத்து வீடுகளுக்கும் விநியோகிகப்பட்டு விடும் என்றும் அவர் தெரிவித்தார்.
போர்க்குற்றச்சாட்டு தொடர்பி;ல் உள்நாட்டு விசாரணை நடத்தப்படும் என்று மஹிந்தவின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் பொது எதிரணி ஒருபோதும் ஒரு இராணுவ வீரரையும் போர்க்குற்றச்சாட்டின்பேரில் வெளிநாட்டுக்கு அனுப்பாது என்றும் சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRbKafoy.html
Geen opmerkingen:
Een reactie posten