தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 29 december 2014

வடக்கு - கிழக்கின் வெள்ள அபாயத்தால் அவதியுறும் மக்கள்! உதவிக்கு அவசர அழைப்பு....

சந்திரிக்கா மற்றும் பொன்சேகாவுக்கு எதிராக சேறுபூசும் கையேடு அச்சிடப்பட்டுள்ளது
[ திங்கட்கிழமை, 29 டிசெம்பர் 2014, 09:42.47 AM GMT ]
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் கையேடு அச்சிடப்பட்டுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே அமைப்பு தெரிவித்துள்ளது.
கம்பஹா- யக்கல வீதியில் உள்ள ஜனஹன்ட என்ற அச்சகத்தில் இருந்த கையேடு அச்சிடப்பட்டுள்ளதாக கபே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த கையேடு இன்று நாடு முழுவதும் விநியோகிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmszCRdKaep3.html
5 நாட்களில் 660 சாரதிகள் கைது! 6,000 கிலோ கழிவுத் தேயிலை தூள் கடத்திச் சென்ற இருவர் கைது
[ திங்கட்கிழமை, 29 டிசெம்பர் 2014, 09:58.00 AM GMT ]
கடந்த 5 நாட்களி்ல் குடிபோதையில் வாகனம் செலுத்திய 660 சாரதிகள் கைது செய்யப்பட்டள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் அதிகமானோர் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகள் என பொலிஸ் ஊடக பிரிவு தெரிவிக்கின்றது.

நேற்று காலை 6 மணி தொடக்கம் 24 மணித்தியாலத்திற்குள் குடி போதையில் வாகனம் செலுத்திய மோட்டார் சைக்கிள் சாரதிகள் 67 பேர் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகள் 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
6,000 கிலோ கிராம் கழிவுத் தேயிலை தூள் கடத்திச் சென்ற இருவர் கைது
தெற்கு அதிவேக வீதி ஊடாக சென்ற லொறியொன்றை பொலிஸார் சோதனை செய்தபோது அதில் இருந்து கழிவுத் தேயிலை தூள் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த லொறியில் இருந்து 6000 கிலோ கிராமிற்கு அதிகமான தேயிலை தூள் மீட்கப்பட்டுள்ளது.
அம்பலாங்கொடையில் இருந்து கொழும்பி நோக்கி பயனித்த லொறியொன்றிலிருந்தே கழிவுத் தேயிலை தூள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவிக்கின்றது.
http://www.tamilwin.com/show-RUmszCRdKaep5.html

வடக்கு - கிழக்கின் வெள்ள அபாயத்தால் அவதியுறும் மக்கள்! உதவிக்கு அவசர அழைப்பு....
[ திங்கட்கிழமை, 29 டிசெம்பர் 2014, 09:45.06 AM GMT ]
வடக்கு கிழக்கு பகுதிகளின் எட்டு மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ளதுடன் முறையான பராமரிப்பின்றி மக்கள் அல்லலுறும் நிலையில் தாயக மக்களுக்கு உதவ முன்வருமாறு அரசியல் தலைவர்கள் அவசர அழைப்பு விடுத்துள்ளனர்.
வழமையான காலத்தை விட அதிகளவான மழை வீழ்ச்சியால் தமிழ் மக்கள் அதிகமாக வாழும் பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ளதுடன் உணவு உடை இன்னும் பல அத்தியாவசிய தேவைகளை பெறுவதில் கூட அவதியுறும் மக்களுக்கு உதவ முன்வருமாறு மக்கள் தன்னார்வ நிறுவனங்களிடம் பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண தொடர்புகளுக்கு
01.மட்டக்களப்பு மாவட்டம்: பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் 0094 776034559
02.திருகோணமலை மாவட்டம்: கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கு. நாகேஸ்வரன் 0094 775159891
03.அம்பாறை மாவட்டம்: கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் 0094 776718697
வடமாகாண தொடர்புகளுக்கு

01. கிளிநொச்சி மாவட்டம்: பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் 0094 776913244
02. மன்னார் மாவட்டம்: வீ.எஸ்.சிவகரன் (செயலாளர் இளைஞர் அணி தமிழரசுக்கட்சி) 0094778355464
03. முல்லைத்தீவு மாவட்டம்: வட மாகாண சபையின் பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெகநாதன் 0094 779598325
04 யாழ் மாவட்டம் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா 0094 777373377
05 வவுனியா மாவட்டம் வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி சத்தியலிங்கம் 0094 710732726
http://www.tamilwin.com/show-RUmszCRdKaep4.html

Geen opmerkingen:

Een reactie posten