[ திங்கட்கிழமை, 29 டிசெம்பர் 2014, 07:20.41 AM GMT ]
கல்பிட்டி பிரதேச சபை தலைவர் மின்ஹாஜ் தலைமையில் கல்பிட்டி பிரதேச சபை முன்னால் உள்ள சந்தியில் நேற்று முற்பகல் இந்தப் பொதுக் கூட்டம் இடம்பெற்றது.
இதில் விசேட அழைப்பாளராக அமைச்சர் பசில் ராஜபக்ஷ கலந்து கொண்டிருந்தார். மேலும் சிரேஷ்ட அமைச்சர் பௌசி, ஆளுங்கட்சியின் கல்பிட்டி பிரதேச அமைப்பாளரும் தெங்கு அபிவிருத்தி பிரதி அமைச்சருமான விக்டர் அன்டனி பெரேரா, பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்னாண்டோ, வடமேல் மாகாண சபை முதலைமச்சர் தயாசிறி ஜயசேகர, வடமேல் மாகாண சபை உறுப்பினர் தாஹிர் ஆகியோருடன் கல்பிட்டி பிரதேச சபையின் உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
எனினும் முக்கிய அமைச்சர்கள் , அரசியல்வாதிகள் பலர் கலந்து கொண்டிருந்த இந்தக் கூட்டத்தில் நூற்றுக்கும் குறைவான பொதுமக்களே கலந்து கொண்டிருந்தனர்.
இதன் காரணமாக அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்கள் கடும் அதிருப்தியுடன் சுருக்கமாக உரையாற்றிவிட்டு கூட்டத்தை முடித்துக் கொண்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszCRdKaeo1.html
மைத்திரியின் வெற்றிக்காக இரகசியமாக செயற்படும் படையினர்
[ திங்கட்கிழமை, 29 டிசெம்பர் 2014, 07:30.36 AM GMT ]
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இவர்களின் செயற்பாடுகளை அதிகளவில் காணமுடிவதாகவும் அவர்கள் தாம் கடமையாற்றும் இடங்களில் மாத்திரமல்லாது வெளியிலும் மைத்திரிபாலவுக்கு ஆதரவாக ஆட்களை திரட்டி வருவதாக த இண்டிபெண்டன் இணையத்தளம் கூறியுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அணியை விட்டு மக்கள் சமூகம் விலகி வருவதுடன், அமைச்சரவை அங்கம் வகித்த அமைச்சர்களும் அதில் அடங்குகின்றனர்.
இந்த நிலையில், ராஜபக்ஷவினர் தமது பிடிக்குள் வைத்திருந்த பாதுகாப்பு தரப்பினரும் தற்போது அவர்களை விலகி வருவதாகவும் அந்த இணையத்தளத்தில் கூறப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszCRdKaeo2.html
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் செல்வாக்கைப் பறிகொடுத்த மஹிந்த அரசாங்கம்!
[ திங்கட்கிழமை, 29 டிசெம்பர் 2014, 07:59.13 AM GMT ]
எதிர்வரும் நாட்களில் ஆளுங்கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு மாகாண சபை பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளதாக சிங்கள ஊடகங்கள் இன்று தலைப்புச் செய்தி வெளியிட்டுள்ளன.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொண்டுள்ள நிலையில், இந்த அபாய நிலையை எதிர்கொள்ள நேரிட்டுள்ளதாக குறித்த செய்திகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் வடக்கு மாகாண சபைக்கான அதிகாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் கையில் சென்றடைந்துள்ளது. தற்போது முஸ்லிம் காங்கிரசின் ஊடாக கிழக்கு மாகாண சபையின் அதிகாரமும் விரைவில் பறிபோகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஆளுங்கட்சியின் செல்வாக்கு கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் சிங்கள ஊடகங்கள் தங்கள் செய்திகளில் குறிப்பிட்டுள்ளன.
எனினும் ஆளுங்கட்சிக்கான ஆதரவை விலக்கிக் கொண்டுள்ள நிலையிலும் எதிர்வரும் ஜனவரி 12ம் திகதி நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபை வரவு செலவுத்திட்ட வாக்களிப்பில் ஆளுங்கட்சிக்கு ஆதரவளிக்கவுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
தற்போதைய நிலையில் கிழக்கு மாகாண சபையில் ஐக்கிய தேசியக்கட்சி 26 ஆசனங்களையும் ஆளுங்கட்சி 10 ஆசனங்களையும் மட்டுமே கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszCRdKaeo3.html
Geen opmerkingen:
Een reactie posten