ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஹக்கீம் தலைமையில் இன்று அரசாங்கத்தை விட்டு வெளியேறுவது உறுதியென கட்சி முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.
கடைசி நேரத்தில், ரவூப் ஹக்கீம் உட்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் இன்று காலை அமைச்சர் பசில் ராஜபக்சவுடன் 45 நிமிடங்கள் அளவில் மேற்கொண்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்திருப்பதாகவும் தெரிய வருகின்றது.
இந்நிலையில், முஸ்லிம் காங்கிரஸ் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்குவது குறித்து இன்று பிற்பகல் அறிவிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முழு ஆதரவும் மஹிந்தவுக்கு?
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கே ஆதரவளிக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன
கட்சி தரப்புக்களை கோடிட்டு இலங்கையின் இணையத்தளம் ஒன்று இதனை தெரிவித்துள்ளது. இன்று மாலை 5மணிக்கு கட்சியின் உயர் அரசியல்பீடம் கூடுகிறது
இதன்போது இந்த வாரத்தின் முதல் பகுதியில் கட்சி கொள்கையாக எடுத்திருந்த மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவிக்கும் முடிவை கட்சியின் உயர்பீடம் யூடேன் என்ற அடிப்படையில் மாற்றிவிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஆங்கில இணைத்தளத்தின் தகவல்படி இந்த யூடேன் 180பாகையாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கட்சியின் உயர்பீடம் இன்று எடுக்கும் தீர்மானம் 90வீதம் மஹிந்தவுக்கு ஆதரவாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
48 மணித்தியாலங்களுக்கு முன்னர் அரசாங்கத்தில் இருந்து வெளியேறும் நிலைப்பாட்டை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எடுத்திருந்தபோதும் அலரிமாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் அமைச்சர் பெசில் ராஜபக்ச ஆகியோருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கீழ்மட்ட பிரதிநிதிகள் அரசாங்கத்தில் இருந்து விலகி அல்லது சுயாதீனமாக மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmszCRbKagv7.html
Geen opmerkingen:
Een reactie posten