[ திங்கட்கிழமை, 29 டிசெம்பர் 2014, 03:37.53 AM GMT ]
ஜனாதிபதிக்கு எதிராக வழக்குத் தொடரக் கூடிய வகையில் சட்டத் திருத்தங்கள் செய்யப்படும் என பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மொனராகல் பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்ற போது இதனைத் தெரிவித்துள்ளார்.
2010ம் ஆண்டின் பின்னர் ஜனாதிபதி ஊழல் மோசடி மிக்க ஆட்சியை முன்னெடுத்தார்.
சுதந்திரக் கட்சியின் ஜனநாயகத் தன்மையையும் பண்டாரநாயக்க கொள்கைகளையும் ஜனாதிபதி மஹிந்த மறந்து செயற்பட்டார்.
அரச ஊழியர்கள் சுயாதீனமான முறையில் கடயைமாற்ற முடியாத நிலைமை ஏற்பட்டது.
ஜனாதிபதி தேர்தலுக்காக எரிபொருட்களுக்கான விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. எனினும் நாட்டின் விவசாயிகள் பற்றி எவ்வித கவனமும் செலுத்தப்படவில்லை.
தற்போதைய அரசியல் அமைப்பின் அடிப்படையில் ஜனாதிபதிக்கு எதிராக வழ்ககுத் தொடர முடியாது. இந்த நிலைமையில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியமானது.
நாட்டின் சட்டம் ஒழுங்கு மற்றும் நீதித்துறையின் சுயாதீனத்தன்மையை உறுதி செய்வதன் மூலம் நல்லாட்சியை ஏற்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRdKafw1.html
ஜனாதிபதி தேர்தலுக்கு 9 நாட்கள் உள்ள நிலையில் சல்மான்கான் இலங்கை வந்தடைந்துள்ளார்
[ திங்கட்கிழமை, 29 டிசெம்பர் 2014, 05:55.42 AM GMT ]
அவருடன் பொலிவுட் நட்சத்திரங்கள் ஆறு பேர் இலங்கை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு முன்னரும் பல தடவைகள் திரைபடங்களுக்காவும் விருது வழங்கும் நிகழ்வுகளுக்காகவும் சல்மான்கான் இலங்கைக்கு வந்துள்ளார்.
ஜெக்குலின் பெர்ணான்டஸ் இலங்கையை சேர்ந்தவர் என்பதுடன் மிஸ் ஸ்ரீலங்கா பட்டத்தை வென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனினும் இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில் அவரது விஜயம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதேவேளை சல்மான்கான் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடவுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் சில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன.
சல்மான்கான் ஜனாதிபதியின் குடும்பத்தினருடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டுள்ளார். இவரது தங்கையின் திருமண நிகழ்வில் நாமல் ராஜபக்ஷ கலந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszCRdKafxz.html
Geen opmerkingen:
Een reactie posten