தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 29 december 2014

வவுனியாவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பணிகள் ஆரம்பம்

மு.கா.வெளியேறியதையடுத்து ஆளும்தரப்பு எம்.பி.க்களின் எண்ணிக்கை 141ஆக குறைந்தது
[ திங்கட்கிழமை, 29 டிசெம்பர் 2014, 08:28.22 AM GMT ]
ஆளும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யி­லி­ருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் நேற்­றைய தினம் வில­கி­ய­தை­ய­டுத்து ஆளும் தரப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை 141 ஆக குறை­வ­டைந்­துள்­ளது.
இது­வரை ஆளும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யி­லி­ருந்து 23 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் வெளி­யே­றி­யுள்­ளனர். இந்த 23 பேரில் மைத்­தி­ரி­பால சிறி­சேன உள்­ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் ஆறு உறுப்­பி­னர்­களும் உள்­ள­டங்­கு­கின்­றனர்.
தேர்தல் அறி­விப்பு வெளி­வரும் வரை ஆளும் கூட்­ட­ணியில் பாரா­ளு­மன்­றத்தில் 162 எம்.பி.க்கள் இருந்­தனர். இந்­நி­லையில் தேர்தல் அறி­விக்­கப்­பட்ட தினத்­தி­லி­ருந்து நேற்று வரை சுதந்­திரக் கட்­சி­யி­ருந்து 6 எம்.பி.க்கள் வெளி­யே­றி­யுள்­ளனர்.
பொது வேட்­பாளர் மைத்­தி­ரிபால சிறி­சேன மற்றும் ராஜித சேனா­ரத்ன, துமிந்த திசா­நா­யக்க, எம்.டி.கே.எஸ். குண­வர்­தன, வசந்த சேனா­நா­யக்க மற்றும் நவீன் திசா­நா­யக்க ஆகி­யோரே சுதந்­திரக் கட்­சி­யி­லிருந்து வெ ளியே­றி­யோ­ராவர்.
மேலும் லிபரல் கட்­சியின் தலைவர் பேரா­சி­ரியர் ரஜீவ விஜே­சிங்க எம்.பி.யும் வெளி­யே­றினார்.
அத்­துடன் கண்டி மாவட்­டத்தின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இரா­ஜ­து­ரையும் மலையக மக்கள் முன்­ன­ணியின் இராதாகிருஷ்ணன் எம்.பி. மற்றும் தொழி­லாளர் தேசிய சங்­கத்தின் தலைவர் திகாம்­பரம் எம்.பி. ஆகி­யோரும் அர­சாங்­கத்தை விட்டு வில­கினர்.
வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஹுனைஸ் பாரூக்கும் அர­சாங்­கத்தை விட்டு வெளியே­றினார்.
அத்­துடன் ஜாதிக ஹெல உறு­ம­யவின் எம்.பி.க்களான சம்­பிக்க ரண­வக்க, அத்­து­ர­லியே ரத்ன தேரர் ஆகிய இரு­வரும் அர­சாங்­கத்­தி­லி­ருந்து வில­கினர்.
இத­னை­ய­டுத்து அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் எம்.பி.க்களான ரிஷாத் பதி­யுதீன் மற்றும் அமீர் அலி ஆகி­யோரும் அர­சாங்­கத்தை விட்டு வெளியே­றினர்.
இந்­நி­லையில் நேற்­றைய தினம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான ரவூப் ஹக்கீம், பஷீர் சேகு­தாவூத், ஹஸன் அலி, பைசல் காசிம், ஹரீஸ், முத்­தலிப் பாவா பாரூக், அஸ்லம், தௌபீக் ஆகிய 8 எம்.பி.க்களும் அர­சாங்­கத்­திற்­கான தமது ஆத­ரவை விலக்கிக் கொண்­டனர்.
இதன்­படி மொத்­த­மாக ஆளும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யி­லி­ருந்து இது­வரை 23 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் வெளியே­றி­யுள்­ளனர்.
இதனால் 162 ஆக இருந்த அர­சாங்­கத்தின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை 139 ஆக குறை­வ­டைந்த போதும் ஐ.தே.க.விலிருந்து திஸ்ஸ அத்தநாயக்கவும் ஜனநாயகக் கட்சியிலிருந்து ஜயந்த கெட்டகொடவும் ஆளும் தரப்பிற்கு தாவியதால் ஆளும் கூட்டணி எம்.பி.க்களின் எண்ணிக்கை 141 ஆக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszCRdKaeo4.html
சைக்கிளைக் காணவில்லை! சாவகச்சேரியில் 17 வயது மாணவி தற்கொலைக்கு முயற்சி
[ திங்கட்கிழமை, 29 டிசெம்பர் 2014, 08:31.38 AM GMT ]
சாவகச்சேரி - மட்டுவில் வடக்குப் பகுதியில் 17 வயது மாணவியொருவர் நஞ்சருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் உயர்தரம் பயிலும் 17 வயதுடைய மாணவியே இவ்வாறு நஞ்சருந்தி சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
நேற்று முன்தினம் குறித்த மாணவி திருவெம்பாவை பூசைக்காக அருகிலுள்ள ஆலயத்திற்குச் சென்றவேளை அவரது சைக்கிளை திருடர்கள் திருடிச் சென்றுவிட்டனர்.
தனது பெற்றோர் வறுமையிலும் கல்வி கற்க வேண்டுமென்று புதிய சைக்கிள் ஒன்றை வாங்கிக் கொடுத்ததை பறிகொடுத்து விட்டோம் என்ற கவலையில் மன உளைச்சல் அடைந்த மாணவி வீட்டு வந்து நஞ்சருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
இதனை அவதானித்த பெற்றோர் மாணவியை உடனடியாக வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszCRdKaeo5.html
எதிர்க்கட்சிக்கு சார்பாக பிரச்சாரம் செய்த கலைஞர்கள் மீது தாக்குதல்!
[ திங்கட்கிழமை, 29 டிசெம்பர் 2014, 08:41.04 AM GMT ]
எதிர்க்கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த கலைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குருணாகல் கும்புக்கெட்ட என்னும் இடத்தில் இந்த தாக்குதல் சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது. புதிய தலைமுறை என்ற கலைஞர்கள் அமைப்பின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பிரபல இளைய தலைமுறை நடிகை சமனலி பொன்சேகா உள்ளிட்ட கலைஞர்கள் தாக்கப்பட்டுள்ளனர். சமனலி பொன்சேகா, லக்ஸ்மன் விஜயசேகர,இந்திரசாபா லியனகே, ஜகத் மனுவர்ன உள்ளிட்ட கலைஞர்களே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.
பொல்லுகள்,கற்கள் மற்றும் தடிகளைக் கொண்டு கலைஞர்களை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினரும் ஆதரவாளர்களும் தாக்குதல் நடத்தியதாக புதிய தலைமுறை அமைப்பின் உந்துல் பிரேமரட்ன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியை உறுதி செய்யும் நோக்கில் குருணாகல் கும்புக்கெட்ட பிரதேச மக்கள் தெளிவுபடுத்தப்பட்ட போது தாக்குதல் நடத்தப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszCRdKaeo6.html

வவுனியாவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பணிகள் ஆரம்பம்
[ திங்கட்கிழமை, 29 டிசெம்பர் 2014, 08:56.51 AM GMT ]
நாட்டில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் கடும்மழை காரணமாக மேன்மேலும் மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர். இவ்வாறு இடம்பெயர்ந்து ஆலயங்களிலும் பாடசாலைகளிலும் பொதுமண்டபங்களிலும் தங்கியிருப்பவர்களுக்கு வடக்கு மாகாணசபையால் மாவட்டம் தோறும் துரிதகதியில் நிவாரணப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வவுனியாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை வடக்குமாகாண விவசாய அமைச்சின் உணவு வழங்கும் துறையும் சுகாதார அமைச்சும் இணைந்து உலர்உணவுப் பொதிகளையும் குழந்தைப்பிள்ளைகள் மற்றும் கர்ப்பிணித்தாய்மார்களுக்கான அத்தியாவசியப் பொருட்களையும் விநியோகித்துள்ளன.
வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் ஆகியோரின் நேரடி மேற்பார்வையின்கீழ் நடைபெற்ற நிவாரணப்பணிகளில் வடமாகாணசபை உறுப்பினர்கள் ஜி.ரி.லிங்கநாதன், எம்.தியாகராசா, இ.இந்திரராசா ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.
முதற்கட்டமாக புதியவேலர் சின்னக்குளம், வேடர்மகிழங்குளம், விளக்குவைத்தகுளம், மாதர் மாணிக்கர் மகிழங்குளம், கொந்தக்காரன்குளம், கதிரவேலர்பூவரசன்குளம், ஓமந்தை அரசன்குளம் ஆகிய இடங்களில் இருந்து இடம்பெயர்ந்தவர்களுக்கான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளமை வவுனியா மாவட்டத்தின் ஏனைய இடங்களில் இடம்பெயர்ந்துள்ளவர்களுக்கும் உதவிகள் விநியோகிக்கும் பணிகள் தொடாந்து இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszCRdKaeo7.html

Geen opmerkingen:

Een reactie posten