தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 29 december 2014

வடக்கில் உள்ள உயர் பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்படமாட்டா!

புலிகளின் தலைவர் அன்று சென்னது இன்று ஆரம்பம்… சிறிதுங்க

DECEMBER 29, 2014 COMMENTS OFF
புலிகளின் தலைவர் அன்று சென்னது இன்று ஆரம்பம்… சிறிதுங்க
கடந்த 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் இது தமிழ் மக்களுக்கான தேர்தல் அல்ல சிங்கள மக்களுக்கானது என்று கூறி தேர்தலை புறக்கணித்தார். பிரபாகரன் அன்று சொன்னது இன்று நடக்கிறது என ஐக்கிய சோசலிச கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சிறிதுங்க ஜனசூரிய தெரிவித்தார்.
யாழில் ஐக்கிய சோசலிச கட்சி ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்றபொழுதே அவர் இவ்வாறு தெரிவத்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
மகிந்தவின் ஆட்சிக் காலம் முடிய இன்னமும் இரண்டு வருடங்கள் இருக்கின்ற நிலையில் தேர்தல் நடத்தப்படுகிறது. இவ்வாறு தேர்தல் நடத்துவதை எவரும் விரும்பவில்லை. ஆனால் சோதிடர்களின் கணிப்புக்களை நம்பி மகிந்த ராஜபக்ச தேர்தலை நடத்துகிறார்.
மகிந்த ஒரு சோதிடத்தை நம்பும் மனிதர். அதனால் தான் சோதிடர்கள் கூறியதைப் போல 8ஆம் திகதி தேர்தலை நடத்துகின்றார்.
அவ்வாறு நடத்தினால் தான் வெற்றி பெறுவதாக நினைக்கின்றார். ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள திகதி கொழும்பிலுள்ள ஊடகவியலாளர் ஒருவர் கொலை செய்யப்பட்ட நாள்.
எனவே அன்றிலிருந்து மகிந்த ராஜபக்சவின் வீழ்ச்சி ஆரம்பமாகிறது. வடக்கு,கிழக்கு, மலையக பகுதிகளிலுள்ளவர்கள் மகிந்தவின் ஆட்சியினை ஒழிக்க ஆசைப்பகின்றார்கள். அதேபோல் தென்பகுதி சிங்கள மக்களும் மகிந்தவை விரும்பவில்லை.
இதனால் எதிர்வரும் 8ம் திகதி மகிந்த ராஜபக்ச தேர்தலில் தோல்வி அடைவார். ஆனால் அவரை தொடர்ந்து ஆட்சிக்கு வருபவர் மைத்திரிபால சிறிசேன உண்மையில் அவரும் மகிந்த ராஜபக்சவின் இன்னொரு உருவமே.
தேர்தலில் மகிந்த ராஜபக்சவுடன் பொதுபலசேனாவும், மைத்திரிபாலவுடன் ஜாதிகஹெல உறுமயவும் கூட்டுச் சேர்ந்துள்ளமை சிறந்த எடுத்துக்காட்டாகும்.
மகிந்த இதுவரை காலமும் ஆட்சி செய்து தமிழ் மக்களுடைய பிரச்சினை தீர்க்கவில்லை என்றால் மீண்டும் ஆட்சிக்கு வந்து தீர்ப்பதாக கூறுகிறார். இதனை ஏற்றுக் கொள்ள முடியாது.
அதேபோல் மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்தால் தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தீரப் போவதில்லை. நீண்ட காலமாக நிலவிவரும் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து அவருடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
2005 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் இது தமிழ் மக்களுக்கான தேர்தல் அல்ல சிங்கள மக்களுக்கானது என்று கூறி தேர்தலை புறக்கணித்தார்.
நடைபெறவுள்ள தேர்தலும் அதேபோல தான். தமிழ் மக்களுடைய தேர்தலோ மலையக மக்களுடைய தேர்தலோ அல்ல, இது முற்று முழுதாக பௌத்த சிங்கள மக்களுடைய தேர்தல் போட்டியாகும்.
இந்தப் போட்டியில் வடக்கு,கிழக்கு மலையக பகுதிகள் ஓரங்கட்டப்பட்டுள்ளன. ஏன் என்றால் சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளை அதிகமாக பெறுபவரே ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார். இதனை தமிழ் மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.
யுத்தம் முடிவடைந்து ஐந்து வருடங்களுக்கு பின்னர் இந்த தேர்தல் இடம்பெறுகிறது. இந்தத் தேர்தலில் 50 வீதத்திற்கு மேல் எந்தவொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் மூன்றாவது கட்சியின் உதவி நாடப்படும்.
இந்த முறை நடக்கப் போகும் தேர்தல் நிச்சயமாக எந்தக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது. எனவே மூன்றாவது சக்தியாக நாங்கள் உருவெடுக்க வேண்டும். அதற்கு தமிழ் மக்கள் உதவி செய்ய வேண்டும்.
தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். அதுமட்டுமின்றி பிரிந்து செல்ல வேண்டும் என்று கோரினால் அதற்கும் இடமளிக்க வேண்டும் என்பதே எமது கட்சியின் கொள்கை.
எனவே நடைபெறப் போகும் தேர்தலில் தமிழ் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
- See more at: http://www.asrilanka.com/2014/12/29/27667#sthash.H8B8wPTA.dpuf

ராஜபக்ஷவின் வங்குரோத்து அரசியல் தோற்கடிக்கப்பட வேண்டும்! ஹக்கீம்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வங்குரோத்து அரசியல் இம்முறை தோற்கடிக்கப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றவூப் ஹக்கீம் தெரிவித்தார். எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து, இன்று ஏறாவூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வங்குரோத்து அரசியல் இம்முறை தோற்கடிக்கப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றவூப் ஹக்கீம் தெரிவித்தார். எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து, இன்று ஏறாவூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முஸ்லிம் தலைமை, மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க ஏன் தாமதித்தது என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுகின்றது. ஆனால் இந்த தாமதத்துக்கான காரணங்கள் வேறு எதுவும் கிடையாது. எங்களுடைய பக்குவத்தையும் நிதானத்தையும் அரசியல் சாணக்கியத்தையும் இழந்துவிடக்கூடாது.

இதற்கு முன்னர் நடைபெற்ற இரண்டு தேர்தல்களில், நாம் பேசிய பேச்சுக்களை, அப்பாவி நாட்டு மக்கள் மத்தியில் கொண்டு சென்று சந்தைப்படுத்திய அரசியலை இனிமேலும் செல்லுபடியற்ற அரசியலாகவே பார்க்க வேண்டும். அதற்காகத்தான் நாங்கள் நிதானமாக இருந்து பக்குவமாக சற்று தாமதித்து முடிவுகளை எடுத்தோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
29 Dec 2014
http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1419889055&archive=&start_from=&ucat=1&
வடக்கில் உள்ள உயர் பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்படமாட்டா!
தேசிய பாதுகாப்புக் காரணங்களுக்காக உயர்பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்படமாட்டாது. ஹம்பாந்தோட்டையிலும், கொழும்பிலும் உயர் பாதுகாப்பு வலயங்கள் காணப்படுவதாகவும் வடக்கில் உள்ள உயர் பாதுகாப்பு வலயங்களை மட்டும் எவ்வாறு அகற்றுவது. இவ்வாறு கேள்வி எழுப்பினார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ.

ஹங்வெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- மக்கள் பேஸ்புக் போலிப் பிரச்சாரங்களுக்கு ஏமாந்துவிடக் கூடாது.பேஸ்புக் சமூக வலையத்தளத்தின் ஊடாக ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கப்பட்டு வருகிறது.

வெறுமனே மாற்றம் அவசியம் தேவை என்பதனை விடவும் எதற்காக மாற்றம் தேவை என்பது முக்கியமானது. முன்னாள் லிபிய அதிபர் முஹம்மர் கடாபிக்கு நேர்ந்ததே தமக்கும் நேரும் என சிலர் குறிப்பிட்டு வருகின்றனர். இலங்கை மக்களின் ஆதரவு இருக்கும் வரையில் எவராலும் என்னைத் தோற்கடிக்க முடியாது. நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி யுத்தம் முடிவுறுத்தப்பட்டது. அதனையே மக்கள் விரும்பினர்.

வடக்கில் இராணுவ பிரசன்னத்தை குறைக்குமாறு சில தரப்பினர் கோரி வருகின்றனர். தேசிய பாதுகாப்பு காரணங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். உயர் பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்படமாட்டாது. ஹம்பாந்தோட்டையிலும், கொழும்பிலும் உயர் பாதுகாப்பு வலயங்கள் காணப்படுகின்றன. வடக்கில் உள்ள உயர் பாதுகாப்பு வலயங்களை மட்டும் எவ்வாறு அகற்றுவது. நாட்டை பிளவுபடுத்தவோ அல்லது தேசியப் பாதுகாப்பு விவகாரங்களில் நெகிழ்வுத்தன்மையைக் காட்டவோ இடமில்லை. - என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
29 Dec 2014
http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1419888816&archive=&start_from=&ucat=1&

Geen opmerkingen:

Een reactie posten