தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 29 december 2014

த.தே.கூட்டமைப்பின் கூட்டத்தில் பெரும் கூச்சல் குழப்பம் : யாரை ஆதரிப்பது என்பதில் சிக்கல் !

தமிழ் தேசிய கூட்டமைப்பு பூட்டிய அறைக்குள் கூட்டம் ஒன்றை நேற்று(28) நடத்தியுள்ளது. கொழும்பு மாதிவெலயில் இக்கூட்டம் நடைபெற்றதாக அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. இக்கூட்டத்தில், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பாக நீண்ட நேரமாக ஆரயப்பட்டுள்ளது. ஆனால் எந்த ஒரு முடிவையும் எட்டாமல் கூட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதன்போது இரு வேட்பாளர்கள் தொடர்பிலும் தமிழ் மக்களுக்குப் பாதகமான இருக்கக்கூடிய விடயங்கள் தொடர்பாக, பங்கேற்றிருந்தவர்களால் கருத்துகள் எடுத்துக் கூறப்பட்டதாம்.
அத்துடன் ஆட்சி மாற்றத்தின் அவசியம் குறித்தும், எதிரணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்கள் சம்பந்தமாக எதுவுமே சொல்லப்படாத குறைபாடுகள் பற்றியும், தமிழ் மக்களது பிரச்சினைகள் சம்பந்தமாகவும் நீண்டநேரமாக கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்பு தமிழ் தேசியக் கூட்;டமைப்பின் முடிவினை அதன் தலைவர் இரா. சம்பந்தன் ஓரிரு தினங்களுக்குள் பத்திரிகை மகாநாடு ஒன்றில் வைத்து அறிவிப்பது என முடிவெடுத்துள்ளார்.
முதலில் மகிந்தவை தோற்கடிக்கச் செய்தால், இலங்கையில் அவரது குடும்ப ஆட்சி முடிவுக்கு வரும். இதில் ஒரு முடிவை எடுக்க கூட தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு துப்பில்லாத நிலை காணப்படுகிறது. மகிந்த ராஜப்க்ஷ தோற்றால், கோட்டபாய தொடக்கம் அனைத்து உறவினர்களும் பல்லு பிடுங்கிய பாம்பாக மாறுவார்கள். பின்னர் அவர்கள் மீது போர் குற்ற விசாரணையை தொடுப்பது மிகவும் இலகுவான விடையம். மைத்திரிபால சிறிசேன ஒன்றும், நல்லவர் அல்ல என்பது தமிழர்களுக்கு நன்கு தெரியும். அவரை பின்னர் பார்த்துக்கொள்ளலாம். ஆனால் தமிழர்களின் முதல் எதிரியான மகிந்தவை எப்படி வீழ்த்துவது என்ற ஆலோசனையை நடத்த தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏன் பின்னடிக்கிறது ? முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னரும் மகிந்தரை காப்பாற்ற இவர்கள் நினைக்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது அல்லவா ?

Geen opmerkingen:

Een reactie posten