தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 31 december 2014

ஜனாதிபதி தொலைபேசியில் என்னை திட்டினார் – ஹிருணிக்கா!

விமல் வீரவன்ஸ அணியிலிருந்து மேலும் சிலர் எதிரணிக்கு தாவினர்! - வடக்கும், கிழக்கும் இணையும் ஆபத்து!– தேசுமு
[ புதன்கிழமை, 31 டிசெம்பர் 2014, 12:46.00 PM GMT ]
ஊவா மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் உட்பட அமைச்சர் விமல் வீரவன்ஸவின் தேசிய சுதந்திர முன்னணியை சேர்ந்த 5 பேர் எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டனர்.
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்குவதற்காக இவர்கள் இவ்வாறு எதிரணியில் இணைந்து கொண்டனர்.
விமல் வீரவன்ஸவின் முன்னாள் செயலாளரும் கடுவலை பிரதேச சபையின் உறுப்பினருமான பிரபாத் தர்ஷன, அந்த கட்சியின் கெக்கிராவ தொகுதி அமைப்பாளர் ஜனக்க திஸாநாயக்க, ஊவா மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் உதயகுமார, அம்பாறை மாவட்ட தலைவர் அனுர முனசிங்க, படால்கும்புர பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சரித்த ஸ்ரீ சிந்தக்க ஆகியோரே இவ்வாறு எதிர்க்கட்சியில் இணைந்தனர்.
வடக்கும், கிழக்கும் இணையும் ஆபத்து – தேசிய சுதந்திர முன்னணி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பன எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்கியுள்ளதன் மூலம் வடக்கு, கிழக்கை மீண்டும் இணைக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் முன்னணியின் அரசியல் சபை உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான மொஹமட் முஸ்ஸாமில் இதனை கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCQVKbnuz.html
ஜனாதிபதி தொலைபேசியில் என்னை திட்டினார் – ஹிருணிக்கா
[ புதன்கிழமை, 31 டிசெம்பர் 2014, 12:56.18 PM GMT ]
தனது தந்தையின் இறுதிச் சடங்கு நடைபெற்ற தினத்தில் ஆற்றிய உரையின் பின்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தன்னை தொடர்பு கொண்டு திட்டியதாக மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
தாய் மற்றும் தன்னை வீட்டில் இருந்து விரட்டுமாறு ஜனாதிபதி, அம்பாந்தோட்டை மாநகர மேயர் எராஜ் பெர்ணான்டோவுக்கு உத்தரவிட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவசியமற்ற பேச்சுகளை பேசி அரசாங்கத்தை கவிழ்க்க பார்க்கின்றாயா என ஜனாதிபதி தொலைபேசியில் தன்னை திட்டியதாகவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பு விஹார மகாதேவி பூங்காவில் இன்று நடைபெற்ற பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவான தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசும் போதே ஹிருணிக்கா இதனை தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCQVKbnu0.html

Geen opmerkingen:

Een reactie posten