தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 28 december 2014

இரா.சம்பந்தன் பா.உ. நாடு திரும்பினார்!

நிறைவேற்று அதிகாரத்திற்கு எதிராக பல்கலைக்கழக விரிவுரையாளர் துண்டுப்பிரசுர விநியோகம்!
[ ஞாயிற்றுக்கிழமை, 28 டிசெம்பர் 2014, 01:30.08 PM GMT ]
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு இருக்கும் தன்னிச்சையான அதிகாரங்கள் காரணமாக ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள சவால் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தும் நடவடிக்கை ஒன்றை நாளை ஆரம்பிக்க உள்ளதாக நியாயமான சமூகத்திற்கான பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் அமைப்பு தெரிவித்துள்ளது.
மக்களுக்கு தெளிவுப்படுத்தும் வகையில் நாளை முற்பகல் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு எதிரில் பத்தாயிரம் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்படும் என அமைப்பின் பேச்சாளர் கலாநிதி மஹீம் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRcKaft0.html
மக்களிடம் தனது உருவத்தை கொண்டு சேர்க்க பல வழிமுறைகளை கையாளும் ஜனாதிபதி!
[ ஞாயிற்றுக்கிழமை, 28 டிசெம்பர் 2014, 01:51.20 PM GMT ]
ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு தற்போது சாதகமற்ற நிலைமை உருவாகி வருவதை உணர்ந்து கொண்டுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது படத்தை மக்களிடம் சேர்க்க பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வருகிறார்.
இதனடிப்படையில் பல்வேறு அரச நிறுவனங்களின் ஊடாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உருவப்படம் பொறித்த நாட்குறிப்புகள், நாட்காட்டிகளை அச்சிட்டு விநியோகிக்க ஜனாதிபதியின் பிரசார பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
சமூர்த்தி, திவிநெகும திணைக்களங்கள் ஊடாக 5 கோடி ரூபா செலவில் 2015ம் ஆண்டுக்கான நாட்காட்டிகள் மற்றும் நாட்குறிப்புகள் அச்சிடப்பட்டுள்ளன.
இவை அனைத்தும் ஜனவரி 3ம் மற்றும் 4ம் திகதிகளில் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கிராம மட்டத்தில் 50 லட்சமும் கம்பஹா, கொழும்பு, குருணாகல் ஆகிய பிரதான நகரங்களுக்கு தலா 4 லட்சமும் ஏனைய மாவட்டங்களுக்கு தலா 1.5 லட்சமும் விநியோகிக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இந்த தேர்தல் முறைகேடு குறித்து சமூர்த்தி அதிகாரிகள் சங்கம் தேர்தல் ஆணையாளர் மற்றும் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளிடம் முறைப்பாடு செய்துள்ளது.
இதனை தவிர துறைமுக அதிகாரசபை மகிந்த ராஜபக்சவின் படம் பொறித்த 15 லட்சம் ரூபா செலவில் 50 ஆயிரம் நாட்காட்டிகள் அச்சிட்டுள்ளது.
அதேவேளை தொலைத் தொடர்புகளை ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழு 45 ஆயிரம் நாட்குறிப்புகளை அச்சிட்டுள்ளதுடன் அவற்றை, விகாரைகள், கோயில்கள், பள்ளிவாசல்கள் உட்பட மத வழிப்பாட்டுத் தலங்களில் விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக 27 லட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
நாட்குறிப்பில் 400 பக்கங்கள் இருப்பதுடன் அவற்றில் 48 பக்கங்களில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புகைப்படங்கள் அச்சிடப்பட்டுள்ளன.
லேக் ஹவுஸ் உட்பட மூன்று அச்சங்களில் இவை அச்சிடப்பட்டுள்ளன.

http://www.tamilwin.com/show-RUmszCRcKaft1.html
ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் பொறுப்பு இம்முறை தேர்தல்கள் திணைக்களத்திடம்
[ ஞாயிற்றுக்கிழமை, 28 டிசெம்பர் 2014, 02:02.08 PM GMT ]
இம்முறை ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை ஊடகங்களுக்கு உத்தியோகபூர்வமாக வெளியிடும் பொறுப்பை தேர்தல்கள் திணைக்களம் ஏற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
தேர்தல் முடிவுகளை இதுவரையில் உத்தியோகபுர்வமாக வெளியிட்டு வந்த அரசாங்க தகவல் திணைக்களம் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் அந்த வாய்ப்பை இழந்துள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தேர்தல்கள் ஆணையாளருக்குக் கிடைக்கப் பெற்ற பல்வேறு முறைப்பாடுகளையடுத்து உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த தீர்மானம் பெறப்பட்டுள்ளதாகவும் இது குறித்து அரசாங்க தகவல் திணைக்களத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சிங்கள ஊடகமொன்று கூறியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszCRcKaft2.html

மலையகத்தில் கடும் மூடு பனி - சாரதிகளுக்கு எச்சரிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 28 டிசெம்பர் 2014, 02:04.31 PM GMT ]
நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக மத்திய மலையகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடும் மூடு பனி ஏற்பட்டுள்ளது.
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியிலும் ஹட்டன் – கொழும்பு வீதியிலும் இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளது.
கடுமையான மூடு பனி காணப்படுவதால் வாகனங்களை ஒட்டிச் செல்லும் சாரதிகள் வாகனத்தின் பிரதான விளக்கை ஒளிர விடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வீதிகள் வழுக்கும் என்பதால் கவனமாக வாகனங்களை செலுத்துமாறும் பொலிஸார் சாரதிகளை கேட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszCRcKaft3.html
மகிந்தவுக்கு தோல்வி வெறி பிடித்துள்ளது: ஜே.வி.பி
[ ஞாயிற்றுக்கிழமை, 28 டிசெம்பர் 2014, 02:21.10 PM GMT ]
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது அதிகாரத்தை இழக்கும் தோல்வி காரணமாக தற்போது வெறிப்பிடித்து போயுள்ளதாக ஜே.வி.பியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அவரது நெருங்கிய நண்பர்கள் அமைச்சர்கள் செய்தவைகளால் அவர் கோபத்திற்கு உள்ளாகியுள்ளார்.
அத்துடன் அமைச்சர்களும் அரசாங்கத்தை கைவிட்டு வருகின்றனர். சில அமைச்சர்கள் நடத்தும் இணையத்தளங்களில் அரசாங்கத்தில் இருந்து விலகும் அமைச்சர்களுக்கு சேறுபூசப்படுகிறது.
அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய ரவூப் ஹக்கீமுக்கு எதிராக தற்போது அந்த இணையத்தளங்களில் சேறுபூசும் செய்திகள் வெளியிடப்பட்டு வருகிறது.
அரசாங்கம் இதனை மிகவும் திட்டமிட்ட வகையில் செய்து வருகிறது. அரசாங்கத்தில் இருக்கும் மிக நல்லவர்கள் எனக் கூறப்படும் நபர்கள் அரசாங்கத்தில் இருந்த வெளியேறியதும் இப்படி சேறுபூசப்படுகிறது எனவும் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRcKaft4.html
இரா.சம்பந்தன் பா.உ. நாடு திரும்பினார்!
[ ஞாயிற்றுக்கிழமை, 28 டிசெம்பர் 2014, 02:37.55 PM GMT ]
மருத்துவத் தேவைக்காக இந்தியாவுக்குச் சென்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று மாலை கொழும்பை வந்தடைந்துள்ளார்.
இந்த நிலையில் சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இன்று இரவு கூடி ஆராயவுள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து பல்வேறு கட்சிகளும் தமது முடிவை அறிவித்துவிட்ட நிலையில் தமிழ் மக்கள் மத்தியில் கூட்டமைப்பு யாரை ஆதரிக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இவ்வாறான எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் இன்று கூட்டமைப்பு பிரதிநிதிகள் கூடி ஆராய்கின்றனர்.
பெரும்பாலும் நாளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது முடிவை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே பல தடவைகள் அரச தரப்பினர், கூட்டமைப்பு மைத்திரிக்கே ஆதரவளிக்கும் என்று கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszCRcKaft5.html

Geen opmerkingen:

Een reactie posten