தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 26 december 2014

ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது? கூட்டமைப்பு பகிரங்கமாக அறிவிக்கக் கூடாது: சிவாஜிலிங்கம்



பாலிநகர் மகா வித்தியாலய ஸ்தாபக அதிபர் குமாரசாமிக்கு அஞ்சலி
[ வெள்ளிக்கிழமை, 26 டிசெம்பர் 2014, 03:39.21 PM GMT ]
முல்லைத்தீவு பாலிநகர் வித்தியாலத்தின் ஸ்தாபக அதிபர் குமாரசாமி அண்மையில் புலம்மண்ணில் இயற்கை எய்தியிருந்தார்.
முல்லைத்தீவின் கல்வி ஆரம்பகால கல்விச் சிந்தனையை பாலிநகர் வித்தியாலத்தின் ஊடாக வளர்த்தெடுத்த முன்னவராக அமரர்.குமாரசாமி அப்பிரதேச மக்களால் நினைவு கொள்ளப்படுகின்றார்.
ஒன்றிரண்டாக பள்ளி மாணவர் தொகையை பல மடங்காக்கி, பாலிநகர் மண்ணுக்கு கல்வி உரம் சேர்த்த ஸ்தாபக அதிபரின் மறைவினால் துயருற்ற பள்ளியும் பள்ளி சமூகமும் அவருக்கு வணக்க நிகழ்வை நடத்தியுள்ளது.
பாலிநகர் வித்தியாலய அதிபர் தி.யோகராணி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மாந்தை கிழக்கு பிரதேச சபையின் தலைவர் தனிநாயகம், உப தலைவர் செந்தூரன், மல்லாவி மத்திய கல்லூரி அதிபர், பாலிநகர் கிராம அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள், அமரர். குமாரசாமியிடம் கல்வி கற்ற பழைய மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
நினழ்வில் கலந்து கொண்டவர்கள் அஞ்சலி உரைகள் ஆற்றியதுடன் ஸ்தாபக அதிபருக்கு வணக்கம் செலுத்தியுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszCRaKagr7.html
மஹிந்தவின் பிரசாரத்தில் இந்திய பிரதமரின் சமூக வலைத்தள நிபுணர் உதவி? - மோடியின் பிரச்சாரத்தை பின்பற்றுகிறோம்: ராஜித
[ வெள்ளிக்கிழமை, 26 டிசெம்பர் 2014, 03:56.42 PM GMT ]
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்சவின் சமூக வலைத்தள பிரசாரங்களுக்காக இந்திய பிரதமரின் சமூக வலைத்தள பிரசாரங்களில் ஈடுபட்டவரின் உதவி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த தகவலை இந்திய செய்தித்தாள் ஒன்று வெளியிட்டுள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சமூக வலைத்தள பிரசாரங்களில் தலைமை வகித்த அரவிந்த் குப்தாவின் உதவியே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பிரசாரங்களுக்கு பெற்றுக்கொள்ளப்படுவதாக நம்பப்படுகிறது.
எனினும் இந்திய செய்தித்தாள் குறித்த செய்தி தொடர்பில் குப்தாவை தொடர்பு கொண்டபோது அவர் அதனை நிராகரித்தார்.
இதேவேளை இலங்கையின் ஜனாதிபதி மஹிந்தவின் தேர்தல் பிரசாரங்களில் பங்கேற்றுள்ள குழுவினரும் குறித்து தகவல் தொழில்நுட்ப நிபுணரின் பெயரை வெளியிட மறுத்து விட்டனர்.
இதற்கிடையில் குப்தா, ஏற்கனவே கடந்த நவம்பர் மாதம் இலங்கைக்கு வந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரசாரக்குழுவினருக்கு ஆலோசனை வழங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நரேந்திர மோடியின் தேர்தல் பிரசார பாணியை பின்பற்றுகிறோம்: ராஜித சேனாரத்ன
இலங்கையின் எதிரணி ஜனாதிபதி வேட்பாளரின் பிரசாரப்பணிகள், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பிரசாரப்பணிகளை பின்பற்றி மேற்கொள்ளப்படுவதாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
எதிரணி பொதுவேட்பாளரின் பிரசாரங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதிகள் கிடைக்கவில்லை. எனினும் நரேந்திர மோடியின் பிரசாரப்பணிகளை மேற்கொண்ட நிறுவனத்தனரி் ஆலோசனைகள் தமக்கு கிடைத்ததாக ராஜித குறிப்பிட்டுள்ளார்
தம்மை பொறுத்தவரையில் இந்தியாவும் இலங்கையில் மாற்று அரசாங்கம் ஒன்றை விரும்புவதாக தாம் நம்புவதாகவும் ராஜித தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தாம் மைத்திரிபாலவுக்கு ஆதரவு தெரிவிக்கப்போவதாக தகவல் வெளியானமையை அடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, தமது மனைவியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமது எண்ணங்களில் மாற்றத்தை கொண்டு வர முயற்சித்தார் என்றும் ராஜித குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRaKagsy.html
ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது? கூட்டமைப்பு பகிரங்கமாக அறிவிக்கக் கூடாது: சிவாஜிலிங்கம்
[ வெள்ளிக்கிழமை, 26 டிசெம்பர் 2014, 03:57.22 PM GMT ]
ஐனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பதென்பதை த.தே.கூட்டமைப்பு பகிரங்கமாக அறிவிக்கக் கூடாதென வலியுறுத்தியிருக்கும் வட மாகாண சபையின் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், மக்கள் தாங்களே சிந்தித்துச் செயற்படட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இத்தேர்தலின் போதான தபால் மூல வாக்களிப்பில் அரச ஊழியர்கள் தெளிவாகச் செய்து காட்டியுள்ளமை போன்று மக்களும் தமது முடிவைச் செய்து காட்டக் காத்து இருக்கின்றனர்.
இத்தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் எமக்கு எந்த நம்மையும் கிடைக்காது. நாம் எமது கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஐனாதிபதித் தேர்தலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடும் தொடர்பாக யாழ் ஊடக அமையத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் 8ம் திகதி நடைபெறவுள்ள ஐனாதிபதித் தேர்தலானது இலங்கையின் 7வது ஐனாதிபதித் தேர்தலாகவே அமைகின்றது.
இதில் கடந்த தேர்தலில் நடந்ததை மறக்காது இத்தேர்தலிலும் செயற்பட வேண்டிய கட்டாயம் எமக்கிருக்கின்றது. அதாவது 2010 ஆம் ஆண்டு தேர்தலில் பொது வேட்பாளராகப் போட்டியிட்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்குவதாக அறிவித்தது.
அதனைப் பயன்படுத்திக் கொண்ட மற்றைய வேட்பாளரான மகிந்த ராஐபக்ஷ தரப்பினர்கள் இனவாதத்தைத் தூண்டி வெற்றியும் பெற்றிருந்தனர்.
இந்நிலையில் இந்த முறை தேர்தலில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் இரண்டு பிரதான வேட்பாளர்களும் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஏதுமே குறிப்பிடவில்லை.
அத்தோடு தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதிலும் முனைப்பாக இல்லை. எமது கோரிக்கைளை எதிர்க்கும் வகையிலையே கருத்துக்களையும் வெளியிட்டிருக்கின்றனர்.
குறிப்பாக போர்க்குற்றங்கள் தொடர்பில் எவருமே ஏதும் கூறவில்லை. போர்க்குற்ற விசாரணைகளிற்கு இடமளிக்கப் பொவதில்லை என்று மாறி மாறி கங்கணம் கட்டி நிற்கின்றனர்.
அரசியலமைப்பை மாற்றி சமஷ்டியை வழங்க வேண்டுமென்ற கோரிக்கையையும் மறுக்கின்றனர். இவ்வாறானதொரு நிலையில யாரை ஆதரித்தாலும் அது எமக்கே பாதிப்பை ஏற்படுத்துவதாக அமைந்து விடும்.என்றார்.
http://www.tamilwin.com/show-RUmszCRaKagsz.html

Geen opmerkingen:

Een reactie posten