தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 29 december 2014

மகிந்தவுக்கு எதிராக வழக்குத் தொடரக் கூடிய வகையில் சட்டத் திருத்தம் செய்யப்படும்: மைத்திரிபால!

பாதூப்பு படையினர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க வேண்டும்! பிக்குகள் கூட்டமைப்பு
[ திங்கட்கிழமை, 29 டிசெம்பர் 2014, 12:50.39 AM GMT ]
பாதூப்பு படையினர் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று தேசிய பிக்கு கூட்டமைப்பு கோரியுள்ளது. 
மஹிந்த ராஜபக்சவை போன்று மைத்திரிபால சிறிசேன, போர்க்குற்றங்கள் தொடர்பி;ல் உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ விசாரணைகளை நடத்தமாட்டார் என்று கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது .
இதற்கான உறுதிப்பாடு மைத்திரிபாலவின் தேர்தல் அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
மஹிந்த ராஜபக்சவும் கோத்தபாய ராஜபக்சவும் படையினரை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விசாரணைக்கு உட்படுத்த முனைகின்றனர்
எனினும் நாட்டை, படையினரை பாதுகாக்கும் வகையில் பொதுவேட்பாளரின் உடன்படிக்கைகள் அமைந்துள்ளன என்று கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளை இலங்;கையின் வெளிநாட்டுக் கொள்கை காரணமாக இந்தியா,  இலங்கைக்கு எதிராக பயங்கரவாதத்தை ஊக்குவித்தது என்றும் தேசிய பிக்கு கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszCRdKafvy.html
9 மாதங்களில் 3 விமானங்களை இழந்த மலேசியா! 699 பேர் பலி!- நிஜத்தின் தேடல்
[ திங்கட்கிழமை, 29 டிசெம்பர் 2014, 12:59.57 AM GMT ]
சிங்கப்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த எயார் ஏசியா என்ற மலேசிய விமான நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் காணமற் போனது தொடர்பான ஆய்வொன்றை லங்காசிறி எப்.எம்.கனடாவிலுள்ள ஆய்வாளர் திரு. சுரேஸ் தர்மாவுடன் நடத்தியது.
அதன் போது, மலேசியன் எயர்லைன்ஸின் இரண்டு போயிங் 777 விமான இழப்புக்களைப் போல இந்த விமான விபத்தும் மலேசியாவுடன் சம்பந்தப்பட்டுள்ளது.
இது ஒரு அசாதாரண நிகழ்ச்சி. இந்த வருடமே 21ம் நூற்றாண்டில் விமான விபத்துக்களில் அதிகம் பேர் கொல்லப்பட்ட ஆண்டு.
சீரற்ற காலநிலை அந்தப் பகுதியில் இருந்திருக்கிறது. இடிமின்னலுடன் கூடிய மழைக்கான கால நிலை அது. தனது சாதாரணப் பறப்பு உயரான 32 ஆயிரம் அடி உயரத்திலிருந்து மேலும் 6000 அடி தூரம் மேலே உயர்ந்து பறக்க விமானி அனுமதியைக் கோரியிருக்கிறார்.
இந்தோனேசியாவிற்கும் சிங்கப்பூருக்குமான பறப்புத் தூரம் 5,700 கிலோ மீற்றர்கள் இந்தத் தூரத்தையடைவதற்குத் தேவையானதை விட மேலதிகமாக மூன்று மணித்தியாலங்கள் பறப்பதற்கான எரிபொருளையும் அது கொண்டிருக்கிறது.
இந்த விமானத்தில் இருந்து ஆபத்தை உணர்த்தும் மே டே என்கிற அபாய அழைப்போ அல்லது பான் பான் என்ற அழைப்போ பயணப் பாதையை மாற்றி உடனே வேறோர் விமான நிலையத்தில் தரையிறக்கும் அழைப்போ கிடைக்கப் பெறவில்லை என்பது உள்ளிட்ட பல தகவல்களையும் பகிர்ந்து கொண்டார்.



http://www.tamilwin.com/show-RUmszCRdKafvz.html

பைஸர் முஸ்தபா இன்று தமது முடிவை அறிவிப்பார்!
[ திங்கட்கிழமை, 29 டிசெம்பர் 2014, 01:03.12 AM GMT ]
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு என்று பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா இன்று அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
சிங்கப்பூர் சென்;றுள்ள அவர் இன்று நாடு திரும்புகிறார்.
முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான போக்கை கொண்டுள்ள பொதுபல சேனா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிக்கும் நிலையில் சமூக ரீதியில் தம்மால் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க முடியாது என்ற கருத்தை அவர் ஏற்கனவே வெளியிட்டிருந்தார்.
பொதுபல சேனாவின் செயற்பாடுகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் அரசாங்கம் இருக்கின்றமை அனைவருக்கும் தெரிந்த விடயமாகும் என்று அவர் கடந்த 12ம் திகதியன்று நிகழ்வு ஒன்றின் போது தெரிவித்திருந்தார் என்பது குறிப்பி;டத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszCRdKafv0.html
தேர்தலை ஒத்தி வைக்குமாறு எந்த வேட்பாளரும் கோரவில்லை: மேலதிக தேர்தல் ஆணையாளர்
[ திங்கட்கிழமை, 29 டிசெம்பர் 2014, 01:51.38 AM GMT ]
தேர்தலை ஒத்தி வைக்குமாறு இதுவரையில் எந்த தரப்பினரும் கோரவில்லை என மேலதிக தேர்தல் ஆணையாளர் யு.அமரதாச தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை ஒத்தி வைக்க எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை.
நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
இதனால் வாக்காளர் அட்டை விநியோக நடவடிக்கைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 4ம் திகதி வரையில் மேற்கொள்ளப்பட உள்ளது.
தற்காலிக அடையாள அட்டை தயாரிக்கும் கால அவகாசமும் ஜனவரி மாதம் 3ம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தபால்மா அதிபருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRdKafv3.html

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முனைத்தீவு மக்களை நேரில் சென்று பார்வையிட்டார் பா.அரியம் எம்.பி.
[ திங்கட்கிழமை, 29 டிசெம்பர் 2014, 02:02.25 AM GMT ]
வெள்ள அனர்த்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டு முனைத்தீவு சக்தி வித்தியாலயத்தில் தஞ்சமடைந்டதிருக்கும் மக்களை பாராளுமன்ற உறுப்பினர்  பா.அரியநேத்திரன் நேரில் சென்று பாரவையிட்டார்.
நலன்புரி நிலயத்தில் தங்கியுள்ள மக்களுக்காக வேண்டி இலங்கை தமிழரசுக்கட்சியின் பட்டிருப்புத்தொகுதி செயலாளரும், மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணிச்செயலாளருமான என்.துஸ்யந்தனின் வேண்டுகோளிற்கு இணங்க பிரான்ஸ் நாட்டில் உள்ள நண்பர்கள் உதவிகளைக் கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், முனைத்தீவு மேம்பவர் விளையாட்டுக்கழகத்தினரும் கலந்து கொண்டு அந்த மக்களுக்கான பொருட்களையும் வழங்கி வைத்தனர்.
http://www.tamilwin.com/show-RUmszCRdKafv4.html
இயற்கை அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்வு
[ திங்கட்கிழமை, 29 டிசெம்பர் 2014, 03:11.49 AM GMT ]
வெள்ளம், மண் சரிவு போன்ற இயற்கை அனர்த்த சம்பவங்களினால் நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இவ்வனர்த்தத்தினால் இதுவரையில் 281,006 குடும்பங்களிலுள்ள 10 லட்சத்து 16 ஆயிரத்து 385 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரையில் 6 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அந்நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszCRdKafv7.html

வெள்ளம் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நாவலடி மக்கள்
[ திங்கட்கிழமை, 29 டிசெம்பர் 2014, 03:36.57 AM GMT ]
நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக வாழைச்சேனை நாவலடி பிரதேசத்தில் பல கால்நடை வளர்ப்பாளர்களின் கால்நடைகள் நோய்வாய்ப்பட்டும், இறந்தும் போயுள்ளது.
இப்பிரதேசத்தில் வாழும் மக்கள் விவசாயம் மற்றும்  கால்நடை வளர்ப்பில் பெரும்பாலும் ஈடுபடுபவர்கள்.
அதனால் தற்போதைய அடைமழை காரணமாக இவர்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு, இது இவர்களின் வருமானத்தில் பாரிய வீழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இவர்களின் வசிப்பிடத்தில் செய்யும் தொழில்கள் காரணமாக மழையினால் பாதிப்புக்குள்ளான குடியிருப்புகளிலேயே கால்நடைகளுடன் வசிக்கின்றனர்.
கால்நடைகளுக்கு நோய்கள் தாக்கியுள்ளதாலும், திருடர்கள் பயம் காரணமாகவும் இடம்பெயற முடியாது இக்கட்டான சூழ்நிலையில் தவிக்கின்றனர்.அவ்வாறே நலன்புரி நிலையங்கள் வசதிகளும் இங்கில்லை.
அத்துடன் தேங்கி நிற்கும் மழை நீரினால் சேனைப்பயிர்ச் செய்கைகளும் அழிந்துள்ளன. தூரப்பகுதிகளுக்கான போக்குவரத்துகளும் தடைப்பட்டிருப்பதால் கூலித்தொழில் செய்யகூடிய தொழிலாளர்களும் வருமான பாதிப்புக்குளளாகியுள்ளனர்.
இப்பகுதியில் கொழும்பு வீதியால் செல்லும் வாகனங்கள் தடைப்பட்டதால் பல ஹோட்டல்களும் மூடப்பட்டிருக்கின்றன.
ஹோட்டல் தொழிலை நம்பி வாழும் சிறு கைத்தொழிலாளர்களும் ஹோட்டல் கூலித்தொழிலாளர்களின் குடும்பங்களும் வருமானமற்ற நிலையில் பட்டினி வாழ்க்கையை எதிர்நோக்கியுள்ளனர்.
கடந்த காலங்களில் அதிக வறட்சியால் பாதிக்கப்பட்டதும் குடிநீர் பிரச்சினையால் பாதிக்கப்பட்டதும், இந்த நாவலடி மக்களே ஆயினும் இப்பகுதியில் குடியிருக்கும் மக்களுக்கு வறட்சி நிவாரணமும், பொருளாதார அமைச்சின் உதவிகளும் உரியவர்களால் முறையாக வழங்குவதில் ஊழல்கள் கணப்பட்டன.
தற்போதும் இப்பகுதி வாழ் மக்கள் அரசு அல்லது அரசு சார்பற்ற நிறுவனங்களின் பொருளாதார உதவிகளை பெரும் ஏக்கத்துடன் எதிர் பார்கின்றனர். இப்பிரதேசத்தின் நிர்வாக மோசடிகள் காரணமாக ஏற்கனவே அரச, அரசசார்பற்ற நிறுவனங்களின் உதவிகள் உரியவர்களை முறையாக உரிய நேரத்தில் சென்றடைவதில்லை என்பது இப்பகுதி வாழ் ஏழைகளின் நிரந்தர குற்றச்சாட்டு.
இது சம்பந்தமாக பலமுறை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்முறையாவது இப்படியான சூழ்நிலையிலும் உரிய அரச அதிகாரிகள் அசமந்தப்போக்குடன் செயற்படாது அரச உதவி நிவாரணங்களை உடனடியாக வழங்க முன்வருவார்களா? மேலும் இப்பகுதி வாழ் ஏழை மக்களை பொருளாதார அழிவிலிருந்து காப்பாற்றுவார்களா?
http://www.tamilwin.com/show-RUmszCRdKafw0.html

மகிந்தவுக்கு எதிராக வழக்குத் தொடரக் கூடிய வகையில் சட்டத் திருத்தம் செய்யப்படும்: மைத்திரிபால
[ திங்கட்கிழமை, 29 டிசெம்பர் 2014, 03:37.53 AM GMT ]
ஜனாதிபதிக்கு எதிராக வழக்குத் தொடரக் கூடிய வகையில் சட்டத் திருத்தங்கள் செய்யப்படும் என பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மொனராகல் பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்ற போது இதனைத் தெரிவித்துள்ளார்.
2010ம் ஆண்டின் பின்னர் ஜனாதிபதி ஊழல் மோசடி மிக்க ஆட்சியை முன்னெடுத்தார்.
சுதந்திரக் கட்சியின் ஜனநாயகத் தன்மையையும் பண்டாரநாயக்க கொள்கைகளையும் ஜனாதிபதி மஹிந்த மறந்து செயற்பட்டார்.
அரச ஊழியர்கள் சுயாதீனமான முறையில் கடயைமாற்ற முடியாத நிலைமை ஏற்பட்டது.
ஜனாதிபதி தேர்தலுக்காக எரிபொருட்களுக்கான விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. எனினும் நாட்டின் விவசாயிகள் பற்றி எவ்வித கவனமும் செலுத்தப்படவில்லை.
தற்போதைய அரசியல் அமைப்பின் அடிப்படையில் ஜனாதிபதிக்கு எதிராக வழ்ககுத் தொடர முடியாது. இந்த நிலைமையில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியமானது.
நாட்டின் சட்டம் ஒழுங்கு மற்றும் நீதித்துறையின் சுயாதீனத்தன்மையை உறுதி செய்வதன் மூலம் நல்லாட்சியை ஏற்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRdKafw1.html

Geen opmerkingen:

Een reactie posten