[ புதன்கிழமை, 31 டிசெம்பர் 2014, 05:22.58 PM GMT ]
படையினரை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்த முற்சிக்கப்படுவதாக பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரச்சாரத்தின் போது படையினரை ஈடுபடுத்த முயற்சிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் நம்பகமான தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
படையினர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்த எடுக்கப்படும் முயற்சி குறித்து தேர்தல் ஆணையாளரிடம் முறைப்பாடு செய்தேன்.
வடக்கு கிழக்கு மற்றும் பொலனறுவை மற்றும் ஏனைய சில பகுதிகளில் ஓய்வு பெற்ற படையினரையும் தற்போது கடமையாற்றி வரும் படையினரையும் அழைத்து பிரச்சாரத்தில் ஈடுபடுத்த முயற்சிக்கப்படுகின்றது.
அரச ஊடகங்களில் தொடர்ச்சியாக என்னை இலக்கு வைத்து போலிப் பிரச்சாரங்களும் சேறு பூசல்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தேர்தல் செயலகத்திற்கு அருகாமையில் ஊடகவியலாளர்களிடம் இன்று அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCQVKbnv1.html
ஐயப்பனை தரிசிக்க படகுமூலம் தமிழகத்துக்கு சென்ற கிளிநொச்சி இளைஞன் கைது
[ புதன்கிழமை, 31 டிசெம்பர் 2014, 04:51.26 PM GMT ]
தமிழகத்துக்கு படகுமூலம் சென்ற இளைஞர் ஒருவரை தமிழக கடலோரக் காவல் படையினர் இன்று கைது செய்து கியூ பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கிளிநொச்சியைச் சேர்ந்த ராஜேந்திரன் மணிகண்டன் (வயது - 24) என்ற இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் இந்தியாவுக்குள் நுழைவதற்கான முறையான ஆவணங்களின்றி வந்ததால் குறித்த நபதைத் தாம் விசாரணைக்குட்படுத்தியுள்ளனர் என்று தமிழகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஐயப்ப பக்தரான குறித்த இளைஞன் சபரிமலைக்குச் செல்வதற்காக செவ்வாய்கிழமை மாலை 5 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து படகில் புறப்பட்டு தனுஷ்கோடி அரிச்சல் முனைப்பகுதிக்கு புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில் வந்தடைந்ததாக பொலிஸ் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார்.
மேலும், 13 வருடங்களுக்கு முன்னர் மண்டபம் அகதிகள் முகாமில் தான் வசித்தவர் என்றும், 2002க்கு பின்னர் கிளிநொச்சிக்கு குடும்பத்தோடு திரும்பிச் சென்று விட்டோம் எனவும், சபரிமலைக்கு விமானத்தில் செல்லும் அளவிற்கு தன்னிடம் வசதி இல்லை.
எனவே படகு மூலம் தனுஷ்கோடி வந்தேன் எனவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCQVKbnvz.html
பொதுவேட்பாளரின் வடக்கு விஜயத்தின் போது தடைகள் ஏற்படுத்தப்பட்டன: தேர்தல் கண்காணிப்பகம்
[ புதன்கிழமை, 31 டிசெம்பர் 2014, 04:24.17 PM GMT ]
தேர்தல் கண்காணிப்பாளர்கள் இந்தக்குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர்.
தேர்தல் வன்முறைகள் தொடர்பான கண்காணிப்பு மையத்தின் குற்றச்சாட்டின்படி, மைத்திரிபால சிறிசேனஇ யாழ்ப்பாணத்துக்கு செல்ல அரசாங்கம் ஹெலிகெப்டரை வழங்க மறுத்தது.
யாழ்ப்பாணத்தில் சில இடங்களுக்கு செல்ல கடற்படையினர் படகு சேவைகளை வழங்க மறுத்து விட்டனர்.
இதேவேளை குருநாகலில் கலைஞர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மற்றும் வெள்ளத்தினால் பல இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள போது வெளிநாட்டு கலைஞர்களை தேர்தலுக்காக இலங்கைக்கு அழைத்தமை போன்றவை மக்களின் உணர்வுகளை புரிந்துக்கொள்ளாதவர்களின் செயல்களாக கருதப்பட வேண்டும் என்று தேர்தல் வன்முறை கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszCQVKbnu7.html
Geen opmerkingen:
Een reactie posten