தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 31 december 2014

கருணா, பிள்ளையான் ராணுவத்துடன் இணைந்து புலிகளுக்கு எதிராக போரிட்டார்கள்! உதய கம்மன்பில

ரிசாத்தும் ஹக்கீமும் நம்பிக்கைத் துரோகிகள்: கல்முனை விகாராதிபதி
[ புதன்கிழமை, 31 டிசெம்பர் 2014, 08:23.58 AM GMT ]
ரிசாத் பதியூதீனும் ரவூப் ஹக்கீமும் நம்பிக்கைத் துரோகிகள். காட்டிக் கொடுத்துவிட்டார்கள். யார் அரசாங்கத்தைவிட்டுச் சென்றாலும் மஹிந்ததான் ஜனாதிபதி என கல்முனை சுபத்ரா ராமய விகாராதிபதி வண. ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர் தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துரைக்கையில்,
30வருட கால யுத்தத்திலிருந்து இந்நாட்டை மீட்டெடுத்து நாட்டுமக்கள் அனைவரும் நிம்மதியாக வாழ வழிவகுத்தவர் ஜனாதிபதி.
அது மட்டுமல்லாமல் நாட்டில் எவ்வித வேறுபாடுகளுமில்லாமல் சகல பிரதேசங்களையும் அபிவிருத்தி செய்தவர். அப்படிப்பட்டவரை விட்டுவிட்டு தமது சொந்த சுயநலன்களுக்காக கட்சியைவிட்டுச் சென்ற மைத்திரிக்குப் பின்னால் யாரும் செல்வார்களா?
யார் சென்றாலும் பரவாயில்லை. றிசாத்தும் ஹக்கீமும் சென்றிருக்கவே கூடாது. அவர்களை முஸ்லிம்கள் ஆதரிக்கிறார்கள் என்பதற்காக அல்ல. முஸ்லிம்கள் அரசியலை நன்கு படித்தவர்கள். அவர்கள் செல்லும் திசையெல்லாம் மக்களும் செல்வார்களென்று எதிர்பார்ப்பது மகா தவறு.
இனிமேலாவது மக்களுக்காக அரசியல் செய்பவர்களை மக்கள் இனங்கண்டு வாக்களிக்கவேண்டும். இன்றேல் தேர்தல் காலத்தில்மட்டும் வருவார்கள். பின்னர் அவர்களை கொழும்பு சென்றுதான் பார்க்க வேண்டும்.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட தலைவர்கள் சுயநலத்திற்காக கட்சிமாறுவது முறையா? மக்கள் இப்படிப்பட்டவர்களை ஓரங்கட்ட வேண்டும்.
சமுகம் சார்ந்து சேவையாற்ற வேண்டும் என்பது நியாயம்தான். அதற்காக தேசிய ஐக்கியத்திற்கும் இன உறவுக்கும் குந்தகமாக இருக்கும் தனிஅலகுக் கோரிக்கையை ஜனாதிபதி ஏற்றுக்கொள்வாரா?
மேலும், கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதென்பது அம்மக்களின் நியாயமான கோரிக்கையாகும். அதனை பல்லாண்டு காலமாக இழுத்தடிப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள் இவர்கள்.
அரசுக்குள்ளிருந்து முட்டுக்கட்டையாக இருந்தவர்களும் இவர்களே. அந்த மக்களின் நியாயமான உரிமைகளை அவர்கள் கேட்டபோது அது இன உறவைப் பாதிக்குமென்று  எதிர்த்தவர்கள். இன்று எப்படி தனி அலகு கேட்பது? இது மற்ற மக்களைப் பாதிக்காதா? மக்கள் சிந்திக்க வேண்டும்.
இப்படிப்பட்டவர்கள் சென்றுள்ள மைத்ரிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிப்பது அம்பாறை மாவட்ட தமிழர்களை, கல்முனைத் தமிழர்களை மீண்டும் புறக்கணிப்பதற்கு ஒப்பானதாகும்.
கடந்த காலத்திலும் கூட்டமைப்பினர் இதைத்தான் செய்தார்கள்.
எனவே அம்பாறை மாவட்ட தமிழர்கள் சிந்தியுங்கள். தமிழருக்கெதிராக செயற்படுபவர்களுக்குப் பின்னால் செல்வது தற்கொலைக்கு ஒப்பானதாகும்.
முஸ்லிம் காங்கிரசாரும் தமிழ்க் கூட்டமைப்பினரும் ஆதரவளிக்கும் ஜனாதிபதி வேட்பாளர் வரலாற்றில் தோல்வியைச் சந்தித்தமையே வரலாறு. அதுதான் இம்முறையும் நடக்கும்.
மாற்றம் என்றால் தற்போதுள்ளது அமைதியான நாடு. இதனை பயங்கரவாத யுகத்திற்குக் கொண்டுபோவதுதான் மாற்றமா? என அவர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCQVKbnsy.html
ராஜபக்ஸவினரால் வடக்கு மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை: ராஜித
[ புதன்கிழமை, 31 டிசெம்பர் 2014, 09:56.53 AM GMT ]
ராஜபக்ஸவினர் இருக்கும் வரை இந்த நாட்டில் அப்பாவி மக்கள் பாத்திக்கப்படுவர். இவர்களால் வடக்கு மக்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் நல்லூரில் நேற்று நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றியபோது, அவர் இதனைக் கூறியுள்ளார்.
இந்த தேசிய பிரச்சினை தொடர்பில் ராஜபக்ஸக்கள் உடன் நான் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் முரண்பட்டுள்ளேன். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வாக ராஜபக்ஸக்களுடன் இன்று மோதுவதில் எவ்வித பயனும் இல்லை.
அதனால் தான் ராஜபக்ஸக்களை தோற்கடிக்கும் தீர்மானத்தினை நாம் எடுத்தோம். ராஜபக்ஸக்கள் இருக்கும் வரை வடக்கிலுள்ள மக்கள் சிறந்த வாழ்வு கிடைக்கப்போவதில்லை.
ராஜபக்ஸக்கள் இருக்கும் வரையில் இந்த முழு நாட்டிலுள்ள அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவார்கள். இந்த நாட்டிலுள்ள இனவாதம் மற்றும் மதவாதத்தினை நாம் முற்றாக இல்லாதொழித்து, அனைத்து இன மக்களையும், அனைத்து மதத்தினரையும் ஒன்றிணைக்கச் செய்யும் நடவடிக்கையினை எதிர்வரும் 9 ஆம் திகதிமுதல் நாம் ஆரம்பிப்போம் எனத் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszCQVKbns1.html
புத்தளத்தில் இன்று எதிரணி பொதுக்கூட்டம்: முக்கியஸ்தர்கள் பங்கேற்பு
[ புதன்கிழமை, 31 டிசெம்பர் 2014, 10:34.58 AM GMT ]
எதிரணிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து புத்தளத்தில் இன்று மாலை மாபெரும் பிரச்சாரக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்தப் பிரச்சாரக் கூட்டத்தில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, மற்றும் ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன், சரத் பொன்சேகா, ராஜித சேனாரத்தின ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதற்கிடையே இன்று மாலை புத்தளத்தில் நடைபெறவுள்ள குறித்த பிரச்சாரக் கூட்டத்திற்கு புத்தளம் மாவட்டவத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் காலை முதல் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.
எனினும் குறித்த கூட்டத்திற்கு வருகை தந்திருப்பவர்களை அச்சுறுத்தும் வகையில் பொலிசாரின் வாகனங்கள் குறித்த பிரதேசங்களில் அதிவேகத்தில் உலாவிக் கொண்டிருக்கின்றன. அடையாளம் தெரியாத நபர்களும் ஒலி, ஒளிப்பதிவு கருவிகளுடன் குறித்த பகுதிக்கு வருகை தந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmszCQVKbns2.html

அடிப்படைவாதம் இருக்கும் இடத்தில் நானில்லை: பைஸர் முஸ்தபா
[ புதன்கிழமை, 31 டிசெம்பர் 2014, 10:47.01 AM GMT ]
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க வேண்டும் என்று எடுத்த தீர்மானம் தனது வாழ்க்கையில் எடுக்கப்பட்ட கடுமையான தீர்மானம் என முன்னாள் பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளராக போட்டியிட போவதாக அறிந்து கொண்ட நாளில் இருந்து அவருக்கு ஆதரவு வழங்க நான் விருப்பத்துடன் இருந்தேன். நாட்டின் சகவாழ்வு குறித்து சிந்தித்து பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க தீர்மானித்தேன்.
கடந்த 9 ஆண்டுகள் நான் அரசாங்கத்தில் இருந்தேன். இதனால், நான் அரசாங்கத்தை விமர்சிக்க போவதில்லை எனவும் பைஸர் முஸ்தபா குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பைஸர் முஸ்தபா, அடிப்படைவாதம் இருக்கும் இடத்தில் தான் இருப்பதில்லை என கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCQVKbns3.html
கருணா, பிள்ளையான் ராணுவத்துடன் இணைந்து புலிகளுக்கு எதிராக போரிட்டார்கள்! உதய கம்மன்பில
[ புதன்கிழமை, 31 டிசெம்பர் 2014, 10:51.27 AM GMT ]
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் கருணா மற்றும் பிள்ளையான் ஆகியோர் ராணுவத்தினருடன் இணைந்து போரிட்டதாக மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பில இன்று காலை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், இன்று ஒருசிலர் கருணா மற்றும் பிள்ளையான் ஆகியோர் தண்டிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அவர்கள் தண்டிக்கப்படுமளவுக்கு எந்தவொரு தவறும் செய்யவில்லை.
உண்மையில் இவர்கள் இருவரும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் ராணுவத்தினருடன் தோளோடு தோளாக நின்று போராடியவர்கள். இதன்காரணமாகவே ராணுவத்தினருக்கு விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றியைப் பெற முடிந்தது என்றும் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இதுவரை காலமும் கருணா மற்றும் பிள்ளையான் ஆகியோரின் ராணுவ ரீதியான பங்களிப்பு குறித்து பகிரங்கமான தகவல்கள் வெளிவராத நிலையில், உதய கம்மன்பிலவின் கூற்று கருணா மற்றும் பிள்ளையான் ஆகியோரின் துரோகங்களை துகிலுரித்துக் காட்டியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszCQVKbns4.html

Geen opmerkingen:

Een reactie posten