[ திங்கட்கிழமை, 22 டிசெம்பர் 2014, 12:29.09 PM GMT ]
ஹரின் பெர்ணான்டோ அடுத்த வாரம் அரசாங்கத்தில் இணைய போவதாக, அரசாங்கத்தில் இணைந்து கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் ஊவா மாகாண சபை உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே பெர்ணான்டோ தாம் ஜனவரி மாதம் அரசாங்கத்தில் இணைய போவதாகவும் ஜனவரியில் அமையும் பொது எதிர்க்கட்சியின் அரசாங்கத்தில் இணைந்து கொள்வதாகவும் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நான் அரசாங்கத்தில் இணைந்து கொள்ள போவதாக தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் சேறுபூசும் பிரச்சாரங்கள் குறித்து நான் கவலையடைகிறேன்.
ஐக்கிய தேசியக் கட்சியின் சாட்டையாளரான எனக்கு கட்சி நல்ல முறையில் உபசரித்துள்ளது. நான் என் சமயம், தாய்,தந்தை, பிள்ளைகளை போல ஐக்கிய தேசியக் கட்சியை நேசிக்கின்றேன். நான் கொள்கையின் அடிப்படையில் அரசியலில் ஈடுபட்டு வருகிறேன்.
கட்சி்யில் எனக்கு அநீதி ஏற்பட்டால், எதிரணிக்கு சென்று எனக்கு வாக்களித்த மக்களை பழிவாங்க மாட்டேன். நான் கட்சி அரசியலில் இருந்து ஒதுங்கி விடுவேன். ஒரே தட்டில் சாப்பிட்ட சகோதரன் போன்று உபசரித்த திஸ்ஸ குட்டியாராச்சி எனக்கு சேறுபூசுகிறார். அவருக்கு மக்கள் தீர்ப்பை வழங்குவார்கள்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவோ, பசில் ராஜபக்ஷவோ, நாமல் ராஜபக்ஷவோ பணத்தை தருகிறோம் வாருங்கள் என என்னை அரசாங்கத்திற்கு அழைத்தில்லை. திஸ்ஸ குட்டியாராச்சி போன்ற தகவல் பரிமாறும் நபர்கள் சேறுபூசும் கதைகளை பரப்பி வருகின்றனர் எனவும் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRWKajx5.html
பா.உறுப்பினர் சி.சிறிதரனின் கணக்கை அங்கீகரித்த ஃபேஸ்புக் (Facebook)
[ திங்கட்கிழமை, 22 டிசெம்பர் 2014, 12:02.08 PM GMT ]
அந்தவகையில் தனிநபர்கள், பிரபலமானவர்கள், அரசியற் பிரமுகர்கள், பொது நிறுவனங்கள், வர்த்தக அமைப்புக்கள், சினிமா நட்சத்திரங்கள் எனப் பல்வேறு வகைப்படுத்தி ஒவ்வொரு துறைக்குமான சான்றுகள் உறுதிப்படுத்தி அவர்களது முகநூல் கணக்கு பக்கங்களை தரப்படுத்தி அவர்களது முகநூல் பக்கத்தினை அங்கீக்கரித்து வருகின்றனர் ஃபேஸ்புக் நிறுவனத்தினர்.
இலங்கை அரசியல் பிரமுகர்களைப் பொறுத்தளவில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன போன்றவர்களின் முகநூல் பக்கத்தினையும் அங்கீகரித்த ஃபேஸ்புக் நிறுவனம், இலங்கை ஈழத்தமிழ் அரசியல் பிரமுகருக்கான முகநூல் இணைப்பாக யாழ் மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் முகநூல் கணக்கையும் அங்கீகரித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszCRWKajx4.html
Geen opmerkingen:
Een reactie posten